என் மலர்

  நீங்கள் தேடியது "Aravind swamy"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா நடித்துள்ள நரகாசூரன் படம் ஒரு வழக்கமான படமாக இருக்காது என்று சந்தீப் கிஷன் கூறியுள்ளார். #Naragasooran #SundeepKishan
  சந்தீப் கி‌ஷன் நடிப்பில் நரகாசூரன் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அவரிடம் பேசியதில் இருந்து...

  பாடல்கள், சண்டை என்று வழக்கமான படமாக இருக்காது. இந்த படம் பார்த்த அனுபவமே வேறு மாதிரியாக இருக்கும். படத்தை தியேட்டரில் பார்த்தால் மட்டும் தான் அந்த அனுபவம் கிடைக்கும். எனக்கு மட்டுமல்ல அரவிந்த்சாமி, ஸ்ரேயா, ஆத்மிகா என அனைவருக்குமே முக்கிய படமாக இருக்கும். நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும்.

  தமிழில் 4 படங்கள் தான் நடித்துள்ளேன். ரசிகர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த தான் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கிறேன். அஜித், விஜய் படத்துக்கும் எனக்கும் ஒரே விலை டிக்கெட் தான். என்னை போன்ற வளரும் நடிகர்கள் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். நான் பிறந்தது வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில் தான். வாய்ப்பு தேடும்போது தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா மொழிகளிலுமே தேடினேன். தெலுங்கில் கிளிக் ஆனது. ஐதராபாத் சென்றால் தமிழ் பையனாக பார்க்கிறார்கள். சென்னை வந்தால் தெலுங்கு நடிகராக பார்க்கிறார்கள். என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று காத்திருக்கிறேன்.

  தெலுங்கில் பெரிய போட்டி இருக்குமே... எப்படி ஜெயித்தீர்கள்?

  எனக்கு அப்படி தெரியவில்லை. நாம் நேர்மையாக இருந்து கடினமாக உழைத்தால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். எனக்கு பிறகு வந்தவர்கள் தான் விஜய்சேதுபதியும், சிவகார்த்திகேயனும். ஆனால் எனக்கு முன்பு இருந்தே அவர்கள் தங்கள் கடின உழைப்பை கொட்டியிருக்கிறார்கள். அதுதான் அவர்களின் வெற்றிக்கு காரணம். சினிமாவில் நேரம் முக்கியம்.  தெலுங்கில் இந்தி இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் நடிக்கிறேன். தமன்னா எனக்கு ஜோடியாக நடிக்கிறார். திருடன் போலீஸ் இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ஒரு படம் சென்று கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் என்று கட்டுப்பாடு வைத்துள்ளேன்.

  அதிகமாக நண்பர்கள் இல்லாமல் தனியாக இருக்கிறீர்களே?

  எனக்கு மது பழக்கம் இல்லை. அதனால் பார்ட்டிகளில் என்னை பார்க்க முடியாது. விஷால் என் உடன் பிறக்காத அண்ணன். சித்தார்த், விஷ்ணு என சில நண்பர்கள் இருக்கிறார்கள். வரு சரத்குமார், ராகுல் ரவீந்தர், தமன்னா, ரெஜினா என்று நண்பர்கள் பட்டியல் கொஞ்சம் நீளும் என்றார். #Naragasooran #SundeepKishan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `நரகாசூரன்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #Naragasooran
  `துருவங்கள் பதினாறு' படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `நரகாசூரன்'. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. 

  இதில், இயக்குநர் கார்த்திக் நரேன், நடிகர் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன் மற்றும் ஆத்மிகா கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. மேலும் படம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.   கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரியோ சரண், ஆத்மிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

  ரோன் ஈதன் யோகன் இசையமைக்கும் இந்த படத்தில் பாடல்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. #Naragasooran #AravindSwamy

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி - அமலாபால் நடிப்பில் வெளியாகி இருக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் விமர்சனம். #BhaskarOruRascal #ArvindSwami
  வசதியான வீட்டைச் சேர்ந்தவர் அரவிந்த்சாமி. அவரது அப்பா நாசர், மகன் மாஸ்டர் ராகவ். அரவிந்த்சாமியின் மனைவி மறைவுக்குப் பிறகு அரவிந்த்சாமி தனது மகனை பாசமாக வளர்த்து வருகிறார். அதிகம் படிக்காத அரவிந்த்சாமி எந்த ஒரு வேலையிலும் பொறுமையில்லாமல், வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பதற்கு ஏற்றாற்போல் அடிதடியுடன் பட்டையை கிளப்புவார். ஆனால், மாஸ்டர் ராகவ், எங்கு, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அப்பாவுக்கே புத்திமதி சொல்லும் மகனாக இருக்கிறார். 

  இந்த நிலையில், பள்ளி விடுமுறையின் போது கராத்தே வகுப்புகளுக்கு செல்கிறார் ராகவ். அந்த வகுப்புகளுக்கு அவரது நெருங்கிய தோழியான பேபி நைனிகாவும் வருகிறார். நைனிகாவின் அம்மா அமலாபால். கணவனை இழந்த அமலாபால் எந்த ஒரு விஷயத்தையும் பார்த்து பார்த்து பயந்து செய்யக்கூடியவர்.   தனக்கு அப்பா இல்லையே என்ற ஏக்கத்தில் இருக்கும் நைனிகா, ஒருநாள் கராத்தே வகுப்பில் நடக்கும் பிரச்சனையின் போது அரவிந்த்சாமியின் அடிதடியை பார்த்து வியக்கிறாள். மேலும் எதிலும் தைரியமாக இருக்கும் அரவிந்த்சாமியை அப்பாவாக அழைக்க ஆரம்பிக்கிறாள். அதேபோல எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் செய்வதால் அமலாபாலை ராகவ்வுக்கு பிடிக்கிறது. அவரை அம்மா என்றே அழைக்கிறான். 

  இந்த நிலையில், மாஸ்டர் ராகவ்வும், நைனிகாவும் சேர்ந்து, அரவிந்த்சாமியையும், அமலாபாலையும் சேர்த்து வைக்க திட்டம் போடுகின்றனர். பின்னர் அரவிந்த்சாமி போனில் இருந்து அமலாபாலுக்கும், அமலாபால் போனில் இருந்து அரவிந்த்சாமிக்கும் அவர்களே மாற்றி மாற்றி மெசேஜ் அனுப்புகின்றனர். 

  மெசேஜை பார்த்து குழப்பமடையும் அரவிந்த்சாமி, அமலாபால் இடையே காதல் வருகிறது. கடைசியில் இருவரும் இணைந்தார்களா? அவர்கள் குழந்தைகளின் ஆசை நிறைவேறியதா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதிக்கதை.  அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. எந்த பிரச்சனை வந்தாலும் பயப்படாமல், அடி தூள் கிளப்பும் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி மிரட்டியிருக்கிறார். இதுஒருபுறம் இருக்க, தனது மகனிடம், அவன் சொல்வதைக் கேட்கும் வெகுளியான கதபாத்திரத்திலும் ரசிக்க வைக்கிறார். அமலாபாலை விட அரவிந்த்சாமிக்கும், மாஸ்டர் ராகவ்வுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது என்று சொல்லலாம்.

  அமலாபால், அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். எதையும் பயந்து செய்யும் சுபாவத்திலும், பாடலில் கவர்ச்சியாகவும் வந்து கவர்கிறார். மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா இருவருமே கலக்கியிருக்கிறார்கள். இருவரின் கதபாத்திரமும் ரசிக்க வைப்பதுடன் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. 

  நாசர், விஜயக்குமார் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். சூரி, ரோபோ சங்கர் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். சித்திக், ரமேஷ் கண்ணா, அஃப்தாப் ஷிவ்தாசனி, ரியாஸ் கான் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.   அப்பா மகன், அம்மா மகள் இந்த நான்கு பேருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாக வைத்து வழக்கமான கதையில் அடிதடியுடன், கலகலப்பாக படத்தை உருவாக்கியிருக்கியிருக்கிறார் சித்திக். காமெடி, ஆக்‌ஷன், பாசம் என அனைத்தையும் கலந்த கலவையாக கொடுத்திருப்பதால் படம் ரசிக்கும்படியாக இருக்கிறது. அனைவரையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். 

  அம்ரேஷ் கணேஷ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. பின்னணி இசையில், குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். விஜய் உலகநாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கும்படியாக வந்திருக்கிறது. 

  மொத்தத்தில் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' சிரிக்க வைக்கிறான். #BhaskarOruRascal #ArvindSwami #AmalaPaul

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #BhaskarOruRascal #ArvindSwami
  அரவிந்த் சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. ஆக்‌ஷன் கலந்த குடும்ப கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைப்போனது. கடந்த வாரம் ரிலீசாகவிருந்த இந்த படம் மீண்டும் தள்ளிப்பேனதால் படக்குழு மீது நடிகர் அரவிந்த்சாமி அதிருப்தி தெரிவித்தார்.

  இந்த நிலையில், தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வருகிற மே 17-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சித்திக் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப் தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேல் நடித்திருக்கிறார். 

  அம்ரேஷ் கணேஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ஹர்ஷினி மூவிஸ் தயாரித்துள்ளது. #BhaskarOruRascal #ArvindSwami

  ×