இல்லத்தாற்கு உகந்த தடையில்லாப் பொதுக்காட்சி திரைப்படம் - மெய்யழகன்

மெய்யழகன் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் அளித்துள்ளது. இப்படமும் 96 திரைப்படத்தைப்போல் ஓர் இரவில் நடக்கும் கதையாக கதைக்களம் அமைந்துள்ளது.
இல்லத்தாற்கு உகந்த தடையில்லாப் பொதுக்காட்சி திரைப்படம் - மெய்யழகன்
Published on

96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். படத்தின் இசை சில வாரங்களுக்கு முன் வெளியானது.

இப்படமும் 96 திரைப்படத்தைப்போல் ஓர் இரவில் நடக்கும் கதையாக கதைக்களம் அமைந்துள்ளது. திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் ஒரு ஃபீல் குட் திரைப்படமாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மெய்யழகன் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் அளித்துள்ளது. திரைப்படத்தின் நேர அளவு 2 மணிநேரம் 57 நிமிடங்களாகும்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com