அத்தான் ஆர் யூ ஹேப்பி ? - மெய்யழகன் படத்தின் டிரைலர் வெளியீடு

96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன்.மெய்யழகன் திரைப்படும் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
அத்தான் ஆர் யூ ஹேப்பி ? - மெய்யழகன் படத்தின் டிரைலர் வெளியீடு
Published on

96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். படத்தின் இசை சில வாரங்களுக்கு முன் வெளியானது.

படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படமும் 96 திரைப்படத்தைப்போல் ஓர் இரவில் நடக்கும் கதையாக கதைக்களம் அமைந்துள்ளது. திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் டிரைலர் மிகவும் எமோஷனலாக இருக்கிறது. நிச்சயம் இப்படம் 96 படத்தை போன்ற வேறொரு தாகத்தை நம்முள் கடத்த காத்துக் கொண்டு இருக்கிறது. டிரைலர் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்கள் மத்தியில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com