என் மலர்
சினிமா

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #BhaskarOruRascal #ArvindSwami
அரவிந்த் சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. ஆக்ஷன் கலந்த குடும்ப கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைப்போனது. கடந்த வாரம் ரிலீசாகவிருந்த இந்த படம் மீண்டும் தள்ளிப்பேனதால் படக்குழு மீது நடிகர் அரவிந்த்சாமி அதிருப்தி தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வருகிற மே 17-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்திக் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப் தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேல் நடித்திருக்கிறார்.
அம்ரேஷ் கணேஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ஹர்ஷினி மூவிஸ் தயாரித்துள்ளது. #BhaskarOruRascal #ArvindSwami
Next Story






