search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Nasser"

  • திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாசர்.
  • இவர் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் இருக்கிறார்.

  தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் நாசர். நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் சங்க தலைவராகவும் உள்ளார்.

  இந்நிலையில் நடிகர் நாசரின் தந்தை காலமானார். செங்கல்பட்டு தட்டான்மலை தெருவைச் சேர்ந்த நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா (95) உடல் நலக்குறைவு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் நாசரின் தந்தை மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க தலைவருமான திரு. நாசர் அவர்களின் தந்தை திரு. பாஷா அவர்கள் வயது மூப்பு காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து வருந்துகிறேன்."

  "தந்தையின் மறைவால் வாடும் திரு. நாசர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

  • திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நாசர்.
  • இவர் நடிகர் சங்க தலைவருமாக உள்ளார்.

  தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் நாசர். நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் சங்க தலைவராகவும் உள்ளார்.

  இந்நிலையில் நடிகர் நாசரின் தந்தை காலமானார். செங்கல்பட்டு தட்டான்மலை தெருவைச் சேர்ந்த நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா (95) உடல் நலக்குறைவு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  நாசர் திரையுலகில் ஜொலிப்பதற்கு அவரது தந்தையும் ஒரு காரணமாவார். தன் தந்தையின் ஆசைக்காக நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்த நாசர் அதன்பின், நடிப்புப் பயிற்சி முடித்துவிட்டு, பெரியளவில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் தாஜ் ஓட்டல் ஒன்றில் சப்ளையராக வேலைக்குச் சென்றார். பின்னர் மீண்டும் அவரின் தந்தை கட்டாயத்தின் பேரில் வாய்ப்புகளை தேடி அலைந்து மிகப்பெரும் நடிகராக உள்ளார்.

  • புதுவை வெளிப்படை அரங்க இயக்கம் சார்பில் முருங்கப்பாக்கம் கைவினை கிராம திடலில் அரங்கல் திருவிழா 2 நாட்கள் நடக்கிறது.
  • இதில் தென்னிந்திய நடிகர்கள் சங்க தலைவர் நாசர், திரைப்பட மற்றும் நாடக கலைஞர் பேராசிரியர் ராமசாமி, இயக்குனர் வேலு பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

  புதுவை வெளிப்படை அரங்க இயக்கம் சார்பில் முருங்கப்பாக்கம் கைவினை கிராம திடலில் அரங்கல் திருவிழா 2 நாட்கள் நடக்கிறது. பாரதிதாசனின் இரணியன் அல்லது இணைய வீரன் என்ற நாடகம் நடந்தது. தென்னிந்திய நடிகர்கள் சங்க தலைவர் நாசர், திரைப்பட மற்றும் நாடக கலைஞர் பேராசிரியர் ராமசாமி, இயக்குனர் வேலு பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

  இவர்களை பறையாட்டம், தேவராட்டத்துடன் கலைஞர்கள் வரவேற்றனர். நாடக கலைஞர்களை நடிகர் நாசர் பாராட்டி பரிசு அளித்து பேசியதாவது, சிறப்பு திரைப்படம், சிறப்பு சீரியல், ஓ.டி.டி. என அனைத்தையும் விட்டு விட்டு நாடகம் பார்க்க வந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். சென்ற நூற்றாண்டு வரை நேரடியாக கதை சொல்லும் வழக்கம் இருந்தது.  நேரடியாக கதையை சொல்லும் போது நமது மூளைக்கு சென்றடையும் கருத்து யார் நல்லவன்.? யார் கெட்டவன்.? என்று தெரிந்துவிடும். பெற்றோர்கள் இதுபோன்ற நவீன நாடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு நவீன நாடகம் பற்றி தெரிவிக்க வேண்டும். அனைத்து நாகரீகங்களிலும் மனிதனின் வெளிப்பாடாக நாடகம் இருக்கிறது. நவீன நாடகங்களுக்கு குழந்தைகளை பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும். இங்கு ஒரு நாடகம் நடந்தாலும் 200 பேர் பார்க்கிறீர்கள்.

  200 நாடகமாக மனதிற்குள் போகிறது. காரணம் இந்த நாடகத்தை அவரவர் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கிறீர்கள். புதிய சிந்தனைகள் உருவாகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கலைகள் உருவாகி அடுத்த சந்ததிக்கு செல்கிறது. இந்த நவீன உலகத்திற்கு அடுத்த சந்ததியினருக்கு விட்டு செல்லக் கூடியது நவீன நாடகம். இதனால் குழந்தைகளை நாடகத்தில் ஈடுபடுத்துங்கள். புதுவையில் சிறந்த நாடக பள்ளி இயங்குகிறது. இவ்வாறு நாசர் பேசினார். 

  • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாசர்.
  • இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

  இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1985-ஆம் ஆண்டு வெளியான கல்யாண அகதிகள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நாசர் அறிமுகமானார். அதன்பின் நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், குருதிப்புனல், பம்பாய், பாகுபலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், நடிகர் சங்க தலைவர் என பண்முகத்தன்மை கொண்டவர்.


  நாசர்

  இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா போலீஸ் அகாடமியில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து படிகட்டுகளில் அவர் இறங்கி வந்த போது கால் வழுக்கி கீழே விழுந்ததில் நாசருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

  இதையடுத்து நடிகர் நாசர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் குணமடைந்து விடுவார் எனவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அர்ஜுன் - ஆஷிமா நர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் `கொலைகாரன்' படத்தின் முன்னோட்டம்.
  தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `கொலைகாரன்'.

  விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஆஷிமா நர்வால் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். அர்ஜூன், நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  ஒளிப்பதிவு - முகேஷ், படத்தொகுப்பு - ரிச்சர்டு கெவின், இசை - சிமோன் கே.கிங், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், நடனம் - கல்யாண், வெளியீடு - தனஞ்ஜெயன், தயாரிப்பு - பிரதீப், எழுத்து, இயக்கம் - ஆண்ட்ரூ லூயிஸ்.  படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, ‘எனக்கு ஒரு சைகாலஜிக்கல் பிரச்சினை இருக்கு. நான் நடிக்கும் போது எதிரில் இருப்பவர் நன்றாக நடித்தால் எனக்கு நடிக்க வராது. அவரை நான் ரசிக்க ஆரம்பித்துவிடுவேன். இளையராஜா இசையை ரசித்து தான் நான் இசையமைப்பாளர் ஆனேன். அதுபோல் தான் நல்ல நடிகர்களை பார்த்து, ரசித்து, இப்போது நடிகராகிவிட்டேன். ஆனால் நன்றாக நடிக்கிறேனா என எனக்கு தெரியவில்லை". இவ்வாறு அவர் கூறினார்.

  கொலைகாரன் படம் ரம்ஜான் வெளியீடாக வருகிற ஜூன் 5-ந் தேதி திரைக்கு வருகிறது.

  `கொலைகாரன்' படத்தின் டிரைலர்:

  நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக நேற்று செயற்குழு கூட்டம் நடந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  நடிகர் சங்க செயற்குழுவில் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், தேர்தலில் மீண்டும் எங்கள் அணி போட்டியிடும் என்றும் நாசர் அறிவித்தார்.

  தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2015-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணியின் பதவி காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிந்தது. ஆனாலும் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் தேர்தலை 6 மாதத்துக்கு தள்ளி வைத்தனர். தற்போது அந்த காலக்கெடுவும் முடிந்துள்ளதால் நடிகர் சங்க தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.


  கோப்புப்படம்

  இதுகுறித்து ஆலோசிக்க நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர் கருணாஸ் மற்றும் பூச்சி முருகன், அஜய்ரத்னம், சரவணன், மோகன், உதயா, ஜூனியர் பாலையா, டி.பி.கஜேந்திரன், ஸ்ரீமன், குட்டி பத்மினி, சங்கீதா, லலிதகுமாரி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

  கூட்டம் முடிந்த பிறகு நாசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. முறைப்படி அலுவலகத்தை இன்று (புதன்கிழமை) அவரிடம் ஒப்படைப்போம். தேர்தல் நடத்துவதற்கான 3 இடங்களை நாங்கள் பரிந்துரை செய்வோம். அதில் ஒரு இடத்தை நீதிபதி பத்மநாபன் தேர்வு செய்து தேர்தலை நடத்துவார். ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் பட்டியல் மாவட்ட பதிவாளரிடம் வழங்கப்படும். நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணி மீண்டும் போட்டியிடும் என்றார்.

  நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போது பதவியில் இருக்கும் விஷால், நாசருக்கு எதிராக புதிய அணி களம் காண இருக்கிறது.
  நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோரின் பதவி காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடியாததால் தேர்தலை 6 மாதங்களுக்கு தள்ளிவைத்தனர். தற்போது அந்த காலக்கெடுவும் முடிந்துள்ளதால் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் தொடங்கி உள்ளன.

  தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்வு செய்து நியமிக்க நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாளை (14-ந்தேதி) சென்னையில் நடக்க உள்ளது. அதன்பிறகு தேர்தல் அதிகாரி தேர்தல் நடத்துவதற்கான தேதி, மற்றும் தேர்தல் நடைபெறும் இடத்தை அறிவிப்பார். ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் பட்டியலும் வெளியிடப்படும்.  தேர்தலில் விஷால் அணியினர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. நாசரும், விஷாலும் தற்போது வகிக்கும் தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளுக்கு மீண்டும் போட்டியிடுகிறார்கள். பூச்சி முருகன் துணைத்தலைவர் பதவிக்கும், கார்த்தி பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். தற்போதைய செயற்குழு உறுப்பினர்கள் பலர் அதே பதவிகளுக்கு மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

  எதிர் அணியினர் ராதிகா சரத்குமாரை தலைவராக நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். விஷாலை எதிர்த்து பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக நடிகர் உதயா ஏற்கனவே அறிவித்து உள்ளார். டி.ராஜேந்தர், எஸ்.வி.சேகர், சிம்பு ஆகியோரும் விஷால் அணிக்கு எதிராக களம் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது. 

  விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் `சங்கத்தமிழன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. #SangaTamizhan #VijaySethupathi
  ‘வாலு’, `ஸ்கெட்ச்‘ ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து `சங்கத்தமிழன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் முறுக்கு மீசையுடன் வித்தியாசமான தோற்றத்தில் விஜய்சேதுபதி உள்ளார்.

  இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் நிலையில், விஜய் சேதுபதி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில், இரட்டை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  நாசர், சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர். #SangaTamizhan #VijaySethupathi #VijayChander #RaashiKhanna #NivethaPethuraj

  நடிகர் சங்க தேர்தல் தேதி சட்டரீதியாக அறிவிக்கப்படும் என நடிகர் சங்க தலைவர் நாசர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். #NadigarSangam #Nasser
  சென்னை தியாகராய நகரில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் இன்று காலை தொடங்கியது.

  இந்த கூட்டத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. செயற்குழு கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் நாசர், நடிகர் சங்க தேர்தல் தேதி சட்டரீதியாக அறிவிக்கப்படும் என கூறினார்.  நடிகர் சங்க துணை தலைவர் நடிகர் பொன்வண்ணன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்த கூட்டத்தில் தேர்தல் பற்றிய ஆலோசனையே முக்கிய விசயமாக இருந்தது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் மிகவிரைவில் நியமிக்கப்படுவார்.  தேர்தல் தேதியை அவர் அறிவிப்பார்.

  நாளை முதல் தேர்தல் வேலைகள் நடைபெறும். இதேபோன்று நடிகர் சங்க கட்டிட வேலைகளை முடிக்க கடும் முயற்சிகள் செய்து வருகிறோம் என கூறினார்.
  ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் உருவாகும் ‘சேலஞ்ஜ்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இந்த ஆண்டின் இந்திய அழகி பட்டத்தை வென்ற அனு கீர்த்திவாஸ் நடிக்கிறார். #Challenge #Prashanth #AnuKeerthyVas
  ஜானி படத்தை அடுத்து நடிகர் தியாகராஜனின் ஸ்டார் மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்துக்கு, ‘சேலஞ்ஜ்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில், பிரஷாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்த ஆண்டின் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனு கிரீத்திவாஸ் நடிக்கிறார். இவர், திருச்சியை சேர்ந்த தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த படத்தில் நாசர், பிரகாஷ்ராஜ், ஷாயாஜி ஷிண்டே, நரேன், சுப்பு பஞ்சு, மாரிமுத்து, ஹரிஸ் உத்தமன், உமாபத்மநாபன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.  பிரஷாந்த் நடித்த ‘சாக்லெட்’ படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ், இந்த படத்தின் இயக்குகிறார். மனோகரன்-ஷங்கர் ஆகிய இருவரும் வசனம் எழுதியிருக்கிறார்கள். இந்தி பட உலகின் முன்னணி இசையமைப்பாளர் தனிஷ்க் பாக்ஜி, இசையமைக்க, வேல்ராஜிடம் இணை ஒளிப்பதிவாளராக இருந்த ஷிவக்குமார், ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.

  பிரஷாந்தின் பிறந்தநாளான இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. சென்னை, தென்காசி, தூத்துக்குடி, ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. ‘‘முன்பின் தெரியாத கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் இடையேயான மோதலில், இருவரும் சவால் விட்டுக் கொள்கிறார்கள். வெற்றி யாருக்கு? என்பதே ‘சேலஞ்ஜ்’ படத்தின் கதை’’ என்கிறார், இயக்குநர் ஏ.வெங்கடேஷ். #Challenge #Prashanth #AnuKeerthyVas