என் மலர்
நீங்கள் தேடியது "sexual complaint"
- திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கல்லூரி பேராசிரியை பாலியல் புகார் கொடுத்துள்ளார்
- வீடியோ காலில் வந்து தொல்லை கொடுப்பதாக பரபரப்பு புகார்
திருச்சி,
சென்னை வேளச்சே–ரியை சேர்ந்தவர் திரிஷா (வயது 27, பெயர் மாற்றப் பட்டுள்ளது). தற்போது இவர் திருச்சி காந்தி மார்க்கெட் கிருஷ்ணன் கோவில் தெரு பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இந்த பெண் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சென்னையைச் சேர்ந்த நான் திருச்சியில் தங்கி எம்.எஸ்சி. கணிதம் படித்து வருகின்றேன். மேலும் இங்கு உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராகவும் பணிபுரிந்து வருகிறேன்.
இந்தநிலையில் எனது மாமன் மகன் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக கோட்டை அனைத்து மக–ளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் எனது செல்போனை அந்த காவல் நிலைய அதிகாரி விசாரணைக்காக வாங்கி வைத்துக்கொண்டார். இதற் கிடையே அந்த முதல் தகவல் அறிக்கை–யில் சில தவறான தக–வல்கள் இடம்பெற்று இருந்ததால அதனை திருத்தம் செய்வதற்காக மீண்டும் துணை போலீஸ் கமிஷனை சந்திக்க கமி–ஷனர் அலுவலகத்துக்கு சென்றேன்.
அப்போது திருச்சி மாநகரில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவர் என்னைப் பற்றிய விவ–ரங்களை தெரிந்து கொண்டு எனக்கு உதவுவது போல நடித்து அவரும் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். வீடியோ கால் மற்றும் வாய்ஸ் காலில் வந்து தொல்லை கொடுத்தார். அவருக்கு பெண் போலீஸ் அதிகாரி உட்பட சில போலீசாரும் உதவியாக இருக்கின்றனர். என்னை தாக்கி தவறாக வீடியோவும் எடுத்துள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
- மேற்கு வங்க மாநிலத்தில் கவர்னராக இருப்பவர் சி.வி. ஆனந்தபோஸ்.
- இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம், மே.5-
மேற்கு வங்க மாநிலத்தில் கவர்னராக இருப்பவர் சி.வி. ஆனந்தபோஸ். இவர் மீது கவர்னர் அலுவலக பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் சி.வி. ஆனந்தபோஸ், கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள ஆலுவா வழியாக சென்றார். அப்போது அவருக்கு எதிராக கேரள இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக உள்ள சிவராமன்.
- மாணவிகளின் தரப்பில் குழந்தைகள் நல பாதுகாப்பு துறையில் புகார்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டனம் பகுதியைச் சேர்ந்தவரும் நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக உள்ள சிவராமன்.
இவர் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் அருகே தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுப்பதாகவும் நாட்டு நலப்பணி திட்டம் என்ற என்.எஸ்.எஸ் முகாம் குறித்த பயிற்சி அளிப்பதாக பள்ளி முதல்வரை சந்தித்து அனுமதி கோரினார்.
பின்னர் பள்ளி நிர்வா கத்தின் ஒப்புதல் உடன் மாணவர்களுக்கு வேண்டிய பயிற்சியை அளித்து வந்ததாக தெரிகிறது. இதில் சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் தரப்பில் குழந்தைகள் நல பாதுகாப்பு துறையின் புகார் எண்ணிற்கு புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் பள்ளியில் விசாரணை நடத்திய நிலையில் நடந்த சம்பவம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.
இது குறித்து பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர்.
மேலும், சிவராமனை விசாரிப்பதற்காக தேடியபோது அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவத்தில் சிவராமனின் உறவினார்கள் 5 பேர் அவருக்கு உடந்தையாக இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிவராமன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் வெளியான சில மணி நேரங்களில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவராமனை கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
- போக்சோ வழக்கில் கைதான சிவராமன் என்.சி.சி.யை சார்ந்தவர் இல்லை.
நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன், பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு என்.சி.சி. முகாம் பயிற்சி அழிந்து வந்துள்ளார். அப்போது சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் குழந்தைகள் நலப் பாதுகாப்பு துறையின் புகார் எண்ணிற்கு புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சிவராமன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், தாளாளர் சாம்சன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து சிவராமன் தலைமறைவானார்.
இந்நிலையில், கோவையில் சிவராமன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீசார் அவரை பிடிக்க சென்றனர். அப்போது தப்பி ஓடிய அவர், தடுமாறி கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் எந்த என்.சி.சி. முகாமும் நடக்கவில்லை என்றும் போக்சோ வழக்கில் கைதான சிவராமன் என்.சி.சி.யை சார்ந்தவர் இல்லை என என்.சி.சி. தலைமை அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் வெளியான சில மணி நேரங்களில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவராமனை கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்.
- தன்னை தகாத உறவுக்கு அழைத்ததுடன், தோழிகளை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாகவும் பரபரப்பு புகார்.
நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவடி சம்பத் பாலியல் குற்றச்சாட்டு விடுத்துள்ளார். நடிகர் ரியாஸ் கான், செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாக நடிகை ரேவடி குற்றம்சாட்டியுள்ளார்.
தன்னை தகாத உறவுக்கு அழைத்ததுடன், தோழிகளை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாகவும் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் உள்ளிட்ட மேலும் சிலர் மீதும் பாலியல் புகார்கள் எழுந்துள்ளதால் மலையாள சினிமா உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
சித்திக் மீது புகார் கூறிய நடிகை ரேவதி சம்பத், ஒரு திரைப்பட திட்டம் பற்றி விவாதிக்கும் வகையில் சித்திக் தன்னை ஒரு ஓட்டல் அறைக்கு அழைத்தார். அப்போது எனக்கு 21 வயது. அங்கு அவர் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார். கடந்த 2019-ம் ஆண்டே இந்த குற்றச்சாட்டை கூறியதாகவும், அப்போது யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை என்றும் நடிகை ரேவதி சம்பத் கூறியுள்ளார்.
தற்போது, ரியாஸ் கான் மீது புகார் தெரிவித்துள்ள ரேவதி, நடிகர் சித்திக்கை திரைத்துறையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
- ஐ.ஜி தலைமையில் குழுவை அமைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு.
- தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல், பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் பேட்டி.
கேரள திரைத் துறையில் நடிகைகளால் முன்வைக்கப்படும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
அதன்படி, ஐ.ஜி தலைமையில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவை அமைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல், பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் பேட்டி அளித்தாலும், புகார் அளிக்க முன்வராததால் நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரங்களில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க 7 பேர் கொண்ட குழு உரிய பணிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பஹத் பாசில் இரட்டை வேடங்களில் நடித்த நத்தோலி ஒரு சிறிய மீனல்ல படத்தை வி.கே.பிரகாஷ் இயக்கினார்.
- கதாசிரியை ஒருவர் பிரபல மலையாள டைரக்டர் வி.கே.பிரகாஷ் மீது பாலியல் புகார் தெரிவித்து உள்ளார்.
ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கதாசிரியை ஒருவர் பிரபல மலையாள டைரக்டர் வி.கே.பிரகாஷ் மீது பாலியல் புகார் தெரிவித்து உள்ளார்.
பஹத் பாசில் இரட்டை வேடங்களில் நடித்த நத்தோலி ஒரு சிறிய மீனல்ல படத்தை வி.கே.பிரகாஷ் இயக்கி கவனிக்கப்பட்டார். நித்யாமேனன் நடித்த பாப்பின்ஸ், பிரணா ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார்.
பெண் கதாசிரியர் போலீஸ் டி.ஜி.பி.யிடம் அளித்த புகார் மனுவில், "என்னிடம் கதை இருக்கிறது என்று வி.கே.பிரகாசுக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பினேன். நேரில் வரும்படி ஓட்டலுக்கு அழைத்தார். ஓட்டலில் நள்ளிரவு எனது அறைக்குள் நுழைந்து கதையை சொல்லும்படி கேட்டார்.
அப்போது எனக்கு கொஞ்சம் மதுவும் வழங்கினார். பிறகு தோளை இறுக்கமாக பிடித்து என் கன்னத்தில் முத்தமிட முயன்றார். அவரது விருப்பத்துக்கு நான் உடன்படவில்லை என்று தெரிந்ததும் அறையை விட்டு வெளியேறி விட்டார்.
மறுநாள் உதவி இயக்குனர் மூலம் எனக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து அனுப்பி விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் என்று தெரிவித்தார்'' என்று கூறியுள்ளார்.
- நடிகைகள் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
- பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்து வரும் பாலியல் துன்புறுத் தல்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷனின் அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
அதில் மலையாள திரை உலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் வெட்டவெளிச்சத்துக்கு வந்தது.
மேலும் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
அவர்கள் மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினர்.
அதன்பேரில் விசாரணை நடத்த டி.ஐ.ஜி. அஜிதா பீகம், போலீஸ் சூப்பிரண்டுகள் பூங்குழலி, மெரின், ஐஸ்வர்யா ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை கேரள அரசு நியமித்தது.

அந்த குழுவினர் நேரடி விசாரணையை தொடங்கி உள்ளனர். அவர்களிடம் நடிகர்கள் உள்ளிட்டோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிய நடிகைகள் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
அதன்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் சிறப்பு விசாரணை குழு ஈடுபட்டு வருகிறது.

பாலியல் புகார்கள் தொடர்பாக நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர்கள் மேல் மேலும் பல நடிகைகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகர் முகேஷ் மீது கொச்சியை சேர்ந்த கவர்ச்சி நடிகை மினு பாலியல் புகார் கூறியிருக்கிறார். இதனால் அவருக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்கள் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது வீட்டை நேற்று 2-வது நாளாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மேலும் அந்த கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் அமைப்புகளை சேர்ந்த 100 பெண்கள் கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், அந்த பதவியில் இருந்து அவரை நீக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் கவர்ச்சி நடிகை புகாரின் பேரில் முகேஷ் எம்.எல்.ஏ. மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது.
முகேஷை தவிர நடிகையின் புகாரின் பேரில் நடிகர் மணியன்பிள்ளை ராஜூ, முன்னாள் பொதுச் செயலாளர் ஏவலபாபு ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
- தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும்.
சென்னை:
ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சினிமாவில் நடிக்க வரும் பெண்கள், மிகவும் கவனமாகவும், உஷாராகவும் இருக்க வேண்டும். தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும். கேரளாவில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதை போன்று தமிழ் திரையுலகில் பாலியல் சீண்டலை அறிய கமிட்டி அமைக்கப்படும்.
தமிழ் சினிமாவில் 10 பேர் கொண்ட குழுவுடன் ஒரு கமிட்டி அமைப்பது தொடர்பான பணிகள் நடைபெறுகிறது. தமிழ் திரையுலகில் பாலியல் சீண்டல் நடக்கிறதா இல்லையா என்று என்னால் செல்ல முடியாது.
சினிமாவில் நடிக்க வரும் பெண்களில் 20% பேருக்கு தான் வாய்ப்பு கிடைக்கிறது. 80% பேருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றுவோரை, செருப்பால் அடிக்க வேண்டும். எந்த பிரபலமாக இருந்தாலும் தப்பு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.
- முகேஷ் எம்.எல்.ஏ. மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
- இடதுசாரி முன்னணி பெண்களுக்கு ஆதரவாக உள்ளது என்றார்.
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்து வரும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷனின் அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
அதில் மலையாள திரை உலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் வெட்டவெளிச்சத்துக்கு வந்தது. மேலும் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
அதன்பேரில் விசாரணை நடத்த டி.ஐ.ஜி. அஜிதா பீகம், போலீஸ் சூப்பிரண்டுகள் பூங்குழலி, மெரின், ஐஸ்வர்யா ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை கேரள அரசு நியமித்தது. அந்த குழுவினர் நேரடி விசாரணையை தொடங்கி உள்ளனர். அவர்களிடம் நடிகர்கள் உள்ளிட்டோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிய நடிகைகள் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகர் முகேஷ் மீது கொச்சியை சேர்ந்த கவர்ச்சி நடிகை மினு பாலியல் புகார் கூறியிருக்கிறார். இதனால் அவருக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கவர்ச்சி நடிகை புகாரின் பேரில் முகேஷ் எம்.எல்.ஏ. மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில், முகேஷ் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்க சட்டரீதியாகவோ தார்மீக தகுதியோ அவருக்கு இல்லை என்று சிபிஐ தலைவர் ஆனி ராஜா கூறியுள்ளார்.
மேலும் ஆனி ராஜா கூறியதாவது:- "ஹேமா கமிஷனின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை அடுத்து, திரைப்படத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதற்கு மாநில அரசின் முயற்சிகளுக்கு இது துணைபுரியும்".
தற்போது முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்தப் பதவியில் நீடிக்க அவருக்கு தார்மீக அல்லது சட்டப்பூர்வ தகுதி இல்லை. எனவே அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
முகேஷ் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், மாநில அரசின் நேர்மையான முயற்சிகள் தடைபடும். இது மாநில அரசின் இமேஜையும் பாதிக்கும். இடதுசாரி முன்னணி பெண்களுக்கு ஆதரவாக உள்ளது என்றார்.
- பெண்களே உரையாடல்களையும், விவாதங்களையும் முன்னோக்கி எடுத்துச் செல்லுங்கள்.
- பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவனந்தபுரம்:
நீதிபதி ஹேமா கமிஷனின் அறிக்கை வெளியானதை தொடர்ந்து ஏராளமான நடிகைகள் மற்றும் சினிமா பெண் கலைஞர்கள் மலையாள திரையுலகில் தாங்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக கூறி வருகின்றனர். அவர்கள் பிரபல நடிகர்கள் உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.
ஹேமா கமிஷனின் அறிக்கை மற்றும் நடிகைகளின் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுகள் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக கூறிவரும் நடிகை களுக்கு ஏராளமான நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றனர்.
நடிகைகள் தொடர்ச்சியாக பலர் மீது பாலியல் புகார் தெரிவித்து வரும் நிலையில், மலையாள திரைப்பட நடிகர்கள் சங்க தலைவர் நடிகர் மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று முன்தினம் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

இதற்கு "தங்கலான்" பட நடிகை பார்வதி திருவோத்து கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர்கள் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்திருப்பது கோழைத்தனமான செயல் என்று அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
மலையாள திரைப்பட சங்கத்தில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. நடிகர்கள் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா என்ற செய்தியை கேட்டவுடன் நான் முதலில் இது எவ்வளவு கோழைத்தனம் என்று தான் நினைத்தேன்.
குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதற்கு பொறுப்பேற்க வேண்டிய நிலையில் இருந்து அவர்கள் எவ்வளவு கோழைத்தனமாக விலக்கிச் செல்கிறார்கள்.
அவர்களின் இந்த செயலால் மீண்டும் நம் மீது பொறுப்பு விழுகிறது. பெண்களே உரையாடல்களையும், விவாதங்களையும் முன்னோக்கி எடுத்துச் செல்லுங்கள்.
பெண்கள் புகார் அளித்தால் அதன்பேரில் வழக்கு பதிந்து, சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியே கொண்டு வர வேண்டும்.
ஆனால் இந்த விவகாரத்தில் அரசு கவனக்குறைவாக இருந்தது. பெண்களால் ஏற்படாத பிரச்சனைகளுக்கான பொறுப்பு எப்போதும் பெண்களின் மீதே சுமத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகை பீனா ஆன்டனி சித்திக்கை கட்டித்தழுவும் வீடியோ.
- சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் நடிகைக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி பலாத்காரம் செய்ததாக பிரபல நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகை பீனா ஆன்டனி சித்திக்கை கட்டித்தழுவும் வீடியோ ஒன்று வெளியாகி வைராகி வருகிறது.

இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகை பீனா ஆன்டனி , `இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன் சித்திக்கின் மகன் ஷாபி மரணம் அடைந்த போது என்னால் செல்ல முடியவில்லை. அதன்பின் இதனால் ஒரு நிகழ்வின் போது அவரை சந்திக்க நேர்ந்தது.
அப்போது அவரை ஆறுதல் படுத்துவதற்காக கட்டித்தழுவியதாகவும் சித்திக்கின் மகன் ஷாபி என்மீது அன்பாக இருந்ததால் அவனது இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இப்போது அந்த வீடியோவை தவறான கருத்துக்களுடன் நெட்டிசன்கள் பகிர்ந்து தன்னையும், தன்னுடைய குடும்பத்தினரையும் வேதனைப்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது' என்றும் கூறி உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.