கேரளாவில் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தால் பரபரப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் கவர்னராக இருப்பவர் சி.வி. ஆனந்தபோஸ். இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவில் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தால் பரபரப்பு
Published on

திருவனந்தபுரம், மே.5-

மேற்கு வங்க மாநிலத்தில் கவர்னராக இருப்பவர் சி.வி. ஆனந்தபோஸ். இவர் மீது கவர்னர் அலுவலக பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் சி.வி. ஆனந்தபோஸ், கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள ஆலுவா வழியாக சென்றார். அப்போது அவருக்கு எதிராக கேரள இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com