என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோரை செருப்பால் அடிக்க வேண்டும்- நடிகர் விஷால்
    X

    பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோரை செருப்பால் அடிக்க வேண்டும்- நடிகர் விஷால்

    • சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
    • தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும்.

    சென்னை:

    ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சினிமாவில் நடிக்க வரும் பெண்கள், மிகவும் கவனமாகவும், உஷாராகவும் இருக்க வேண்டும். தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும். கேரளாவில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதை போன்று தமிழ் திரையுலகில் பாலியல் சீண்டலை அறிய கமிட்டி அமைக்கப்படும்.

    தமிழ் சினிமாவில் 10 பேர் கொண்ட குழுவுடன் ஒரு கமிட்டி அமைப்பது தொடர்பான பணிகள் நடைபெறுகிறது. தமிழ் திரையுலகில் பாலியல் சீண்டல் நடக்கிறதா இல்லையா என்று என்னால் செல்ல முடியாது.

    சினிமாவில் நடிக்க வரும் பெண்களில் 20% பேருக்கு தான் வாய்ப்பு கிடைக்கிறது. 80% பேருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றுவோரை, செருப்பால் அடிக்க வேண்டும். எந்த பிரபலமாக இருந்தாலும் தப்பு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

    இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

    Next Story
    ×