பெண் கதாசிரியர் பலவந்தம்: நித்யா மேனன் பட டைரக்டர் மீது புகார்

பஹத் பாசில் இரட்டை வேடங்களில் நடித்த நத்தோலி ஒரு சிறிய மீனல்ல படத்தை வி.கே.பிரகாஷ் இயக்கினார்.கதாசிரியை ஒருவர் பிரபல மலையாள டைரக்டர் வி.கே.பிரகாஷ் மீது பாலியல் புகார் தெரிவித்து உள்ளார்.
பெண் கதாசிரியர் பலவந்தம்: நித்யா மேனன் பட டைரக்டர் மீது புகார்
Published on

ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கதாசிரியை ஒருவர் பிரபல மலையாள டைரக்டர் வி.கே.பிரகாஷ் மீது பாலியல் புகார் தெரிவித்து உள்ளார்.

பஹத் பாசில் இரட்டை வேடங்களில் நடித்த நத்தோலி ஒரு சிறிய மீனல்ல படத்தை வி.கே.பிரகாஷ் இயக்கி கவனிக்கப்பட்டார். நித்யாமேனன் நடித்த பாப்பின்ஸ், பிரணா ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார்.

பெண் கதாசிரியர் போலீஸ் டி.ஜி.பி.யிடம் அளித்த புகார் மனுவில், "என்னிடம் கதை இருக்கிறது என்று வி.கே.பிரகாசுக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பினேன். நேரில் வரும்படி ஓட்டலுக்கு அழைத்தார். ஓட்டலில் நள்ளிரவு எனது அறைக்குள் நுழைந்து கதையை சொல்லும்படி கேட்டார்.

அப்போது எனக்கு கொஞ்சம் மதுவும் வழங்கினார். பிறகு தோளை இறுக்கமாக பிடித்து என் கன்னத்தில் முத்தமிட முயன்றார். அவரது விருப்பத்துக்கு நான் உடன்படவில்லை என்று தெரிந்ததும் அறையை விட்டு வெளியேறி விட்டார்.

மறுநாள் உதவி இயக்குனர் மூலம் எனக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து அனுப்பி விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் என்று தெரிவித்தார்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com