என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HipHop Tamizha"

    • ‘மீசைய முறுக்கு-2’ படம் கோடையில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    குஷ்பு சுந்தர் தயாரிப்பில், கடந்த 2017ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்திருந்த படம் மீசைய முறுக்கு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தைப் போலவே இதையும் ஹிப்ஹாப் தமிழா ஆதியே இயக்கி, இசையமைக்கிறார்.

    இப்படத்தையும் குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் மற்றும் ஏ.சி.எஸ் அருண்குமாரின் பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் ஆதியுடன் இணைந்து பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான், சைத்ரா ஜே. ஆச்சார், கேத்திகா சர்மா, ரம்யா ரங்கநாதன், நாசர், கருணாஸ், ஷா ரா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.

    இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசரின்படி படம் 1980-களில் நடக்கும் ஒரு இசைக் கலைஞனின் கதை மற்றும் தற்போதைய காலகட்டம் என இரண்டு காலக்கட்டங்களில் பயணிக்கிறது. இதில் மறைந்த நடிகர் விவேக்கின் குரல் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் கோடையில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடல் மார்ச் 4ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • மறைந்த நடிகர் விவேக்கின் குரல் இடம்பெற்றுள்ளது
    • படம் கோடையில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    குஷ்பு சுந்தர் தயாரிப்பில், கடந்த 2017ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்திருந்த படம் மீசைய முறுக்கு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தைப் போலவே இதையும் ஹிப்ஹாப் தமிழா ஆதியே இயக்கி, இசையமைக்கிறார்.

    இப்படத்தையும் குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் மற்றும் ஏ.சி.எஸ் அருண்குமாரின் பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் ஆதியுடன் இணைந்து பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான், சைத்ரா ஜே. ஆச்சார், கேத்திகா சர்மா, ரம்யா ரங்கநாதன், நாசர், கருணாஸ், ஷா ரா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.

    இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசரின்படி படம் 1980-களில் நடக்கும் ஒரு இசைக் கலைஞனின் கதை மற்றும் தற்போதைய காலகட்டம் என இரண்டு காலக்கட்டங்களில் பயணிக்கிறது. இதில் மறைந்த நடிகர் விவேக்கின் குரல் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் கோடையில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மீசைய முறுக்கு 2 படத்தையும் சுந்தர் சி, குஷ்பு தயாரிக்கின்றனர்.

    "மீசைய முறுக்கு" திரைப்படத்தின் மூலம் கதாநாயகன், இயக்குநர் அவதாரம் எடுத்தவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தத் திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியானது. சுந்தர் சி தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் ஆத்மிகா, விவேக், ஆர்.ஜே. விக்னேஷ் காந்த் மற்றும் விஜயலட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டங்களை எளிமையாக சொல்லிய இந்தப் படம் இளைஞர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் இந்தப் படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் இரண்டாம் பாகமாக "மீசைய முறுக்கு 2" படத்தை எடுக்கப் போவதாக, மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி அறிவித்து இருந்தார்.

    மீசைய முறுக்கு படத்தை போன்றே இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் சுந்தர் சி, குஷ்பு தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஆதி இயக்குகிறார்.

    இந்த நிலையில், மீசைய முறுக்கு 2 படத்தின் ரிவீல் டீசர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிப் ஹாப் ஆதி தமிழா இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், மீசைய முறுக்கு 2 படத்தின் ரிவீல் டீசர் இன்று வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • மீசைய முறுக்கு படம் கடந்த 2017 ஆம் ஆண்டு சுந்தர் சி தயாரிப்பில் வெளியானது.
    • இப்படத்தில் ஆத்மிகா, விவேக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    இசையமைப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய ஹிப் ஹாப் தமிழா ஆதி, தனது முதல் படமான மீசைய முறுக்கு மூலம் கதாநாயகன், இயக்குநர் என இரு வேடங்களிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு சுந்தர் சி தயாரிப்பில் வெளியானது. இப்படத்தில் ஆத்மிகா, விவேக், ஆர்ஜே விக்னேஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டங்களை எளிமையாக சொல்லிய அந்த படம் இளைஞர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் இந்த படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமாக மீசைய முறுக்கு 2 படத்தை எடுக்கப் போவதாக, மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி அறிவித்துள்ளார்.

    சுந்தர் சி – குஷ்பு ஆகியோர் முதல் பாகத்தை தயாரித்தது போலவே, இந்தத் தொடர்ச்சிப் படத்தையும் தயாரிக்க உள்ளனர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஆதி இயக்க உள்ளார்.

    இசை நிகழ்ச்சியில் பேசிய ஹிப் ஹாப் ஆதி, "'மீசைய முறுக்கு 1', ஆதி - ஜீவா என்ற இரு நண்பர்களை பற்றிய கதை. 'மீசைய முறுக்கு 2'வும் நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட, இரு நண்பர்களை பற்றிய படம்தான். அந்த இருவரில் ஒருவராக நான் நடிக்கிறேன், இன்னொரு பாத்திரம் யார் என்றால், அவர் உண்மையிலேயே எனக்கு நண்பர், உண்மையிலேயே எனக்கு தம்பி; நடிக்கிறாயா என விளையாட்டாக கேட்டேன், உடனே சரி எனக் கூறினான், ஹர்ஷத்கான் தான் அது" என்று தெரிவித்தார்.

    • BTS புகைப்படங்களை ஹிப்ஹாப் ஆதி வெளியிட்டு உள்ளார்.
    • சில சமயங்களில் நாம் சாத்தியமற்றது என்று நினைத்த விஷயங்கள் ஒரு படி தூரத்தில்தான் இருக்கும்.

    தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. திரைத்துறையில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். இவரின் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

    'தனி ஒருவன்', 'ஆம்பள', 'அரண்மனை' உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார். 'மீசையை முறுக்கு', 'நட்பே துணை', 'நான் சிரித்தால்', 'சிவகுமாரின் சபதம்', 'அன்பறிவு' ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார். 'கடைசி உலகப் போர்' எனும் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து, இசை அமைத்திருந்தார்.

    இந்த நிலையில், 'கடைசி உலகப்போர்' திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து அப்படத்தின் BTS புகைப்படங்களை ஹிப்ஹாப் ஆதி வெளியிட்டு உள்ளார். BTS புகைப்படங்களை வெளியிட்ட ஹிப்ஹாப் ஆதி அடுத்த பட அப்டேட்டை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    ஹிப்ஹாப் ஆதி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கடைசி உலகப்போர்' வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. சில சமயங்களில் நாம் சாத்தியமற்றது என்று நினைத்த விஷயங்கள் ஒரு படி தூரத்தில்தான் இருக்கும். இந்தப் படம் எனக்கு நிறைய அனுபவங்களைத் தந்துள்ளது. இது எப்போதும் எனக்கு ஒரு சிறப்புப் படமாக இருக்கும். மிகவும் உற்சாகமான ஒன்றுக்குத் தயாராகி வருகிறேன். விரைவில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

    ஹிப்ஹாப் ஆதி பதிவால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

    ஹிபிஹாப் ஆதி மீசைய முறுக்கு மூலம் கதாநாயகன், இயக்குநர் என இரு வேடங்களிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

    இசையமைப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய ஹிப் ஹாப் தமிழா ஆதி, தனது முதல் படமான மீசைய முறுக்கு மூலம் கதாநாயகன், இயக்குநர் என இரு வேடங்களிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு சுந்தர் சி தயாரிப்பில் வெளியானது. இப்படத்தில் ஆத்மிகா, விவேக், ஆர்ஜே விக்னேஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டங்களை எளிமையாக சொல்லிய அந்த படம் இளைஞர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் இந்த படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமாக மீசைய முறுக்கு 2 படத்தை ஹிப்ஹாப் ஆதி இயக்க இருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை என அனைத்தையும் ஹிப்ஹாப் தமிழன் மேற்கொள்கிறார்.

    சுந்தர் சி – குஷ்பு ஆகியோர் முதல் பாகத்தை தயாரித்தது போலவே, இந்தத் தொடர்ச்சிப் படத்தையும் தயாரிக்க உள்ளனர். 

    • விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.
    • இசையமைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார்.

    2011 ஆம் ஆண்டு க்லப்புல மப்புல பாடலின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை ஹிப்ஹாப் ஆதி ஆரம்பித்தார்.

    அதைதொடர்ந்து ஹிப்ஹாப் தமிழா என்ற ஆல்பம் பாடலை உருவாக்கினார். இந்த ஆல்பம் பாடல் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பின் பல தமிழ் திரைப்படங்களில் பின்னணி பாடகராக பாடியுள்ளார்.

    2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கவண், இமைக்கா நொடிகள் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    இசையமைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார். இப்படம் மக்களிடையெ மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

    அதைத்தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு மற்றும் வீரன் படத்தில் நடித்தார். தற்பொழுது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் பிடி சார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் வேனுகோபாலன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் விளையாட்டு ஆசிரியர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    காஷ்மிரா, அனிகா சுரேந்திரன், பாண்டியராஜன், தியாகராஜன், முனிஸ்காந்த் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் இப்படத்திற்கு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தின் பாடலான குட்டி பிசாசே வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹிப்ஹாப் ஆதி. இசையமைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார்.
    • படம் வரும் மே மாதம் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹிப்ஹாப் ஆதி. இசையமைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார். இப்படம் மக்களிடையெ மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

    அதைத்தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு மற்றும் வீரன் படத்தில் நடித்தார். தற்பொழுது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் பிடி சார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் வேனுகோபாலன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இது இவர் இசையமைக்கும் 25-வது படமாகும். காஷ்மிரா, அனிகா சுரேந்திரன், பாண்டியராஜன், தியாகராஜன், முனிஸ்காந்த் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் இப்படத்திற்கு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

    இப்படத்தில் விளையாட்டு ஆசிரியர் கதாப்பாத்திரத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன் படத்தின் முதல் பாடல் வெளியாகியது. தற்பொழுது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பள்ளிக் கூடத்தில் அன்பான பி.டி வாத்தியாராக நடித்துள்ளார் ஆதி. அதன்பிறகு அந்த பள்ளிக் கூடத்தில் சிறுமி பாலியல் ரீதியாக பாதிக்கப் படுகிறாள். அதை ஆதி தட்டி கேட்கும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. படம் வரும் மே மாதம் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பி.டி.சார். படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
    • படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வரும் 24-ந் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது .

    ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பி.டி.சார். படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக காஷ்மிரா மற்றும் அனிகா சுரேந்திரன், பிரனதி, பிரபு, கே.பாக்யராஜ், பாண்டியராஜன், தியாகராஜன், முனீஸ் காந்த், மதுவந்தி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வரும் 24-ந் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது . இதையொட்டி படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நேற்று மாலை நடந்தது.

    விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    எங்கள் நிறுவனத்தில் இந்தப் படத்தை தயாரித்தது திருப்திகரமாக உள்ளது. இந்த கதையை ஆதி என்னிடம் கூறியவுடன் உடனே தயாரிக்க சம்மதம் சொன்னேன். இப்பொழுது படத்தை பார்க்கும் பொழுது முழு திருப்தி ஏற்படுகிறது.

    இந்த படத்தில் வருவது போல பி.டி. சாருக்கும், இங்கிலீஷ் டீச்சருக்கும் காதல் என்பது பல இடங்களில் நடந்து கொண்டிருப்பது தான்.என்னுடைய பள்ளி பருவ காலத்திலும் பிடி சாரும் இங்கிலீஷ் டீச்சரும் காதலித்தனர். அவர்கள் காதலை சேர்த்து வைத்து திருமணத்தையே நான் தான் செய்து வைத்தேன். அப்பொழுது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இந்த படத்தில் நல்ல செய்தி இருக்கிறது. குடும்பத்தோடு வந்து பார்க்கும் படமாக இது இருக்கும் என்றார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஐசரி கணேஷ்,  ரஜினிகாந்த் நடிக்கும் 172-வது படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதே என்று கேட்டதற்கு, இது தொடர்பாக ரஜினிகாந்த்தை சந்தித்தது உண்மை. அவரிடம் பேசி உள்ளோம் விரைவில் நல்ல செய்தி வெளியாகும், இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார்.
    • காஷ்மிரா, அனிகா சுரேந்திரன், பாண்டியராஜன், தியாகராஜன், முனிஸ்காந்த் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கவண், இமைக்கா நொடிகள் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    இசையமைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார். இப்படம் மக்களிடையெ மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

    அதைத்தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு மற்றும் வீரன் படத்தில் நடித்தார். தற்பொழுது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் பிடி சார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் வேனுகோபாலன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் விளையாட்டு ஆசிரியர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    காஷ்மிரா, அனிகா சுரேந்திரன், பாண்டியராஜன், தியாகராஜன், முனிஸ்காந்த் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் இப்படத்திற்கு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தின் பாடலான குட்டி பிசாசே வீடியோ யூடியூபில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் . படத்தின் அடுத்த பாடலான நக்கல் புடிச்சவன் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

    இத்திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுந்தர் சி இயக்கிய படங்களில் அரண்மனை 1,2,3 போன்ற படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தன.
    • இதில் தமன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க சுந்தர் சி தமன்னாவிற்கு அண்ணனாக நடித்திருந்தார்.

    சுந்தர். சி தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர். தமிழ் சினிமாவிற்கு பல நல்ல திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

    அவர் இயக்கிய படங்களில் அரண்மனை 1,2,3 போன்ற படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தன. காமெடி கலந்த ஹாரர் படமாக வெளியான இந்த படங்கள்  ஹாலிவுட் திரையுலகில் சில திரைப்படங்களை ஃப்ரான்சிஸ் திரைப்படங்கள் சிலவற்றை இருக்கும், ஃபெண்டாஸ்டிக் 4, ஃபைனல் டெஸ்டினேஷன், ஃபாஸ்ட் அண்ட் ஃபுரீயஸ் என்ற அந்த வரிசையில் தமிழ் சினிமாவிற்கு ஃப்ரான்சிஸ் திரைப்படமாக உருவாகிக் கொண்டு வருகிறது அரண்மனையின் 1,2,3 பாகங்கள்,

    இந்நிலையில் அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் கடந்த மே 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இதில் தமன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க சுந்தர் சி தமன்னாவிற்கு அண்ணனாக நடித்திருந்தார்.

    மேலும் ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களின் பேராதரவை பெற்ற இந்த படம் வெளியான நாள் முதலே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூலிலும் 100 கோடியை தாண்டி இந்தாண்டின் முதல் வெற்றிபெற்ற தமிழ் படமாக அமைந்தது.

    இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசை அமைத்திருந்த நிலையில் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. 30 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் இந்த படமானது வருகின்ற ஜூன் 21ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த மாதம் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் பி.டி சார் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
    • மீண்டும் இயக்குனர் அவதாரத்தை கையில் எடுத்து இருக்கிறார் ஆதி.

    2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கவண், இமைக்கா நொடிகள் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    இசையமைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார். இப்படம் மக்களிடையெ மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

    அதைத்தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு மற்றும் வீரன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். கடந்த மாதம் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் பி.டி சார் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

    இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்பொழுது மீண்டும் இயக்குனர் அவதாரத்தை கையில் எடுத்து இருக்கிறார் ஆதி. ஆனால் இம்முறை இயக்குனருடன் சேர்ந்து தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ளார்.

    இப்படத்திற்கு கடைசி உலகப்போர் என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஆதியின் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது. ஆதி நடிக்கும் 8 - வது திரைப்படமாக இது உருவாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    மிகவும் வித்தியாசமான போஸ்டராக இது அமைந்துள்ளது. முகத்தில் ரத்தம் வழிந்தும், தலைக்குள் போர், வன்முறை, குண்டு வெடிப்பு போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை நாளை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×