தக் லைஃப் படத்தின் `புது' அப்டேட்

இயக்குநர் மணி ரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தக் லைஃப். தக் லைஃப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
தக் லைஃப் படத்தின் `புது' அப்டேட்
Published on

இயக்குநர் மணி ரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தக் லைஃப். இந்த படத்தின் மூலம் கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர்.

முன்னதாக இருவர் கூட்டணியில் உருவாகி வெளியான "நாயகன்" திரைப்படம் தமிழ் திரையுலகில் பெரும் பாராட்டை பெற்றிருக்கிறது. தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளன.

சில நாட்களுக்கு முன் சிம்பு இப்படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியதாக அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். நேற்று கமல்ஹாசன் அவரது டப்பிங் பணிகளை தொடங்கினார், அதற்கான ஒரு சின்ன ப்ரோமோ வீடியோவும் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.

தற்பொழுது படத்தில் நாசர் மற்றும் அபிராமி நடிப்பதை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com