search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலை விழா"

    • சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவகங்களும் அமைக்கப்படுகின்றன.
    • சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் இன்று முதல் 5 நாட்கள் சென்னை நகரையே கோலாகலமாக்க உள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை யொட்டி தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழா என்ற கலைவிழா சென்னையில் இன்று தொடங்குகிறது. சென்னை தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு சென்னை சங்கமம்- நம்ம ஊரு திரு விழாவை தொடங்கி வைக்கிறார்.

    இதையடுத்து நாளை (14-ந்தேதி) முதல் வருகிற 17-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சென்னையின் முக்கிய சந்திப்புகளில் சென்னை மக்களுக்கு விருந்து படைக்கும் வகையில் கிராமிய கலைஞர்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. சென்னையில் 18 இடங்களில் இந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    சென்னை தீவுத்திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெரம்பூர் முரசொலிமாறன் மேம்பால பூங்கா, ராயபுரம் ராபின்சன் விளையாட்டு மைதானம், மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழிப் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டு திடல், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், தி.நகர் நடேசன் பூங்கா எதிரில் உள்ள மாநகராட்சி மைதானம் ஆகிய இடங்க ளில் நடத்தப்படுகிறது.

    மேலும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் பழனியப்பா நகர் லேமேக்ஸ் பள்ளி வளாகம், அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா, அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டு மைதானம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் ஆகிய இடங்களிலும் இந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    சென்னை சங்கமம் விழாவில் நாட்டுப்புற பாடல்கள், கானா பாட்டு, ராப் இசை, இருளர் பாட்டு, காணிக்காரன் பாட்டு, நையாண்டி மேளம், பறையாட்டம், புரவி, காளை, மயிலாட்டம், பம்பையாட்டம், படுகர் நடனம், துடும்பு, மகுடம், சிலம்பாட்டம், கொம்பு, தாரை, ஆலியாட்டம், சேவையாட்டம், கும்மியாட்டம், ஜிக்காட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

    மேலும் பஞ்சாப்பின் பாங்ரா மற்றும் ஜிந்துவா நடனம், ஒடிசாவின் சம்பல்புரி நடனம், மணிப்பூரின் லை ஹரோபா நனடம், காஷ்மீரின் ரூப் நடனம், பரதநாட்டியம், காவடியாட்டம், தெருக்கூத்து, தப்பாட்டம், மேளம், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, நாட்டுப்புற ஆடல்- பாடல், வில்லிசை, கையுறை பாவைக்கூத்து, கோல்கால் ஆட்டம், இறை நடனம், தேவராட்டம், கணியான் கூத்து, ஜிம்பளா மேளம், களரி, மெல்லிசை, கட்டைக்கூத்து, நாடகம் உள்ளிட்ட ஏராளமான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படு கின்றன.

    சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் கலைப்பொருட்கள் விற்படை செய்யும் கடைகள் மற்றும் உணவகங்களும் அமைக்கப்படுகின்றன. இங்கு மூலிகை உணவுகள், கடல் உணவுகள், பாரம்பரிய மசாலாவுடன் கூடிய சுவையான கிராமிய உணவு வகைகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை நகர மக்கள் தமிழகத்தின் பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும் வெளிப்படுத்தும் நமது நாட்டுப்புறக் கலைகளை கண்டுகளிக்கவும், நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன்பெறும் வகையிலும் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் இன்று முதல் 5 நாட்கள் சென்னை நகரையே கோலாகலமாக்க உள்ளது.

    • கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட விற்பனையகம் அமைக்கப்பட்டிருந்தது.
    • மாணவிகள் தங்களது சொந்த தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

    மணவாளக்குறிச்சி ;

    வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந் துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் கண்காட்சி மற்றும் கலைவிழா நடை பெற்றது. இந்த விழாவை திருவனந்தபுரத்தை சேர்ந்த திரைப்பட நடிகையான அன்கிதா வினோத் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவகர் தலைமை உரையாற்றினார். அப்போது மாணவிகள் வேலையில்லாதவராக இல்லாமல் சுயதொழில் தொடங்குவோராக மாற வேண்டும். இதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படு கிறது என கூறினார்.

    கல்லூரியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி வாழ்த்துரை வழங்கினார். இந்த கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட விற்பனையகம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மாணவிகள் தங்களது சொந்த தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

    குமரி மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவி கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவிகளுக்கிடை யிலான நடனப்போட்டி நடை பெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவி களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்க ளையும் கல்லூரியின் தாளாளர் வழங்கினார்.

    நிகழ்ச்சியின் முடிவில் டி.ஜே. இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி துணை தாளாளர் சுனி கிருஷ்ணசுவாமி, இயக்கு னர் தருண் சுரத், துறை தலைவர்கள், பேரா சிரிய, பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டி ஒன்றிய கலைத்திருவிழா நடந்தது.
    • ஆசிரியர் பயிற்றுநர் பெரியகருப்பன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வட்டாரவளமையத்தில் நடந்தது. கவுன்சிலர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார்.

    தலைமை ஆசிரியர்கள் இனிகோ எட்வர்ட்ராஜா, திலகவதி, விஜயகுமார், மலர்விழி, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய பொறுப்பாளர் கலைச்செல்வி வரவேற்றார்.

    இந்த போட்டிகளை பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வாசுகி தொடங்கி வைத்தார். இதில் வாடிப்பட்டி ஒன்றிய அளவில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகள் இசை, கிராமிய நடனம், வில்லுப்பாட்டு, பேச்சு, கட்டுரை போட்டி, நாடகம், குழு நடனம், இசைசங்கமம், பலகுரல், வண்ணம் தீட்டுதல், கேலிசித்திரம், வரைந்துவண்ணம் தீட்டுதல், தலைப்பை ஒட்டிவரைதல், கையெழுத்து போட்டி, புகைப்படம் எடுத்தல், களிமண் பொம்மை செய்தல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

    வட்டார கல்வி அலுவலர்கள் அகிலத்து இளவரசி, ஷாஜகான் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் பெரியகருப்பன் நன்றி கூறினார்.

    • மத்திய அரசு இளைஞர்களின் நலன்கருதி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
    • இளைஞர்கள் சுய தொழில் தொடங்குவதற்கு இந்திய அரசும் பல்வேறு வகையில் வங்கிக் கடன் வழங்கி வருகிறது.

    தென்காசி:

    மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திரா சார்பாக தென்காசி மாவட்டம் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி வளாகத்தில் மாவட்ட அளவிலான இளையோர் கலைவிழா நடைபெற்றது.

    வாழ்க்கையில் முன்னேற வேண்டும்

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் பேசியதாவது:-

    மத்திய அரசு இளைஞர்களின் நலன்கருதி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றது. அவற்றை பயன்படுத்தி இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மேலும் இளைஞர்கள் சுய தொழில் தொடங்குவதற்கு இந்திய அரசும் பல்வேறு வகையில் வங்கிக் கடன் வழங்கி வருகிறது. எனவே அவற்றை பயன்படுத்தி முறையாக அணுகி தொழில் முனைவோராக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் பராசக்தி கல்லூரி முதல்வர் ஜெயினிலா சுந்தரி, மாவட்ட இளையோர் அலுவலர் ஞானச்சந்திரன், கள விளம்பர உதவி அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் அரங்குகளும் இடம் பெற்றிருந்தன. மேலும் இந்திய அரசு மத்திய மக்கள் தொடர்பகம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு சேவை, ஏழைகள்நலன், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் உள்ளடக்கிய புத்தங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டது. இதனை மாணவ, மாணவிகள் பார்வையிட்டு, வாங்கி சென்றனர்.

    தொடர்ந்து பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டிகளும் மதியம் கிராமிய குழு நடனமும் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி தின விழா மற்றும் கலைவிழா நாளை 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது.
    • மலையாள திரைப்பட நடிகர் சாஜன் பல்லூர்தி கலைவிழா தின சிறப்புரை ஆற்றுகிறார்

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே உள்ள மரியகிரி மலங்காரா கத்தோலிக்க கல்லூரியின் 24-வது கல்லூரி தின விழா மற்றும் கலைவிழா நாளை 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது.

    நாளை 17-ந் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெறும் கலை விழாவை அருட்தந்தை அஜிஸ்ஜோகன் தொடங்கி வைக்கிறார். மலையாள திரைப்பட நடிகர் சாஜன் பல்லூர்தி கலைவிழா தின சிறப்புரை ஆற்றுகிறார். கல்லூரி பஸ்சார் அருட்தந்தை ராபின்சன் வாழ்த்துரை வழங்குகிறார். விழாவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்படுகிறது.

    18-ந் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு 24-வது கல்லூரி தின விழா கொண்டாடப்படுகிறது. விழாவில் கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் அருட்தந்தை அருள் தாஸ் வரவேற்புரை ஆற்றுகிறார். கல்லூரி முதல்வர் தம்பி தங்க குமரன் ஆண்டறிக்கை வாசிக்கிறார். மார்த்தாண்டம் பங்கு மண்டல பிஷப் அருட்தந்தை வின்சன்ட் மார் பால்ஸ் தலைமை உரையாற்றுகிறார். ஓய்வுபெற்ற கேரள போலீஸ் டிஜிபி ஜேக்கப் புன்னோஷா கல்லூரி தின விழா சிறப்புரை ஆற்றுகிறார். மலங்காரா கத்தோலிக்க கல்லூரியின் தாளாளர் பிரேம்குமார் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    மேலும் அருட்தந்தை ஜோஸ்பி ரைட். ஷீபா தேவ் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். முடிவில் கல்லூரி உதவிபேராசிரியர் லெனின் ஜான் நன்றி உரை ஆற்றுகிறார். விழாவில் மாணவ மாணவிகளின் நடன நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கல்லூரி தாளாளர் அருட்தந்தை அருள்தாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்

    ×