search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arts Festival"

    • மன்னார்குடியில் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா நடை பெற்றது.
    • தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மதிப்பீட்டாளர்களாக செயல்பட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட அளவிலான அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் மன்னார் குடியில் உள்ள பின்லே அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தனராஜ் தலைமை தாங்கினார்.

    மன்னார்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் தனபால் வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் இன்பவேணி, தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மதிப்பீட்டாளர்களாக செயல்பட்டனர்.

    நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் சத்யா (நீடாமங்கலம்), அனுப்பிரியா (திருத்துறைப்பூண்டி) மற்றும் ஆசிரிய பயின்றுனர்கள் கலந்துக்கொண்டனர். நிறைவாக ஆசிரிய பயின்றுனர் காளிமுத்து நன்றி கூறினார்.

    • மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிக்கு புளியால் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • தலைமையாசிரியர் நாகேந்திரன், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், உதவித் தலைமையாசிரியை விமலா மற்றும் பலர் பாராட்டினர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் புளியால் அரசு பள்ளி மாணவர்கள் அதிக போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர். தனிப்போட்டி பிரிவில் 7-ம் வகுப்பு மாணவர் தமிழ் அமுதன் பறை போட்டியில் முதலிடமும், டிரம்ஸ் போட்டியில் ஜெகதீசுவரன் முதலிடமும், ஒயிலாட்ட போட்டியில் ஜீவிதாஷிரி முதலிடமும் பெற்றனர்.

    9-ம் வகுப்பு மாணவர் வாசு பறை இசை போட்டியில் முதலிடமும், டிரம்ஸ் போட்டியில் அருண் முதலிடமும், கீ போர்டு போட்டியில் ஆல்வின் புஷ்பராஜ் முதலிடமும், செவ்வியல் நடனத்தில் சுருதி முதலிடமும், களிமண் சிற்ப போட்டியில் கமலேஷ் முதலிடமும், தனி நடன போட்டியில் முகிதா‌ 2-ம் இடமும், பானை ஓவியப் போட்டியில் ஜெயபாலா 2-ம் இடமும், தலைப்பை ஒட்டி வரைதல் போட்டியில் பால் தினகரன் 2-ம் இடமும், பல குரல் பேச்சு போட்டியில் ஹரி சதிஷ் 2-ம் இடமும் வெற்றி பெற்றனர்.

    குழுப் போட்டியில் விவாத மேடையில் ரித்திஷ்குமார் குழுவினர் முதலிடமும், சமூக நாடகத்தில் முகமது ஹாரிஸ்‌, நித்திஷ்குமார் குழுவினர் முதலிடமும், கிராமிய நடனத்தில் வைஷ்ணவி, நிஷா குழுவினர் 2-ம் இடமும் பெற்றனர். அனைவரும் சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான கலைப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஜோசப் இருதயராஜ், ஜெயந்தி ஆகியோரையும் தலைமையாசிரியர் நாகேந்திரன், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், உதவித் தலைமையாசிரியை விமலா மற்றும் பலர் பாராட்டினர்.

    • திருப்புல்லாணியில் நடந்த கலை திருவிழாவில் 900 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
    • ஓவியப்போட்டி, நடனம், நாடகம், மொழி திறன் போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    கீழக்கரை

    தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான கலைத் திருவிழா திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 900 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தொடக்க விழாவில் ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்தார்.

    திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் புல்லாணி போட்டியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். வட்டார வளமையம் மேற்பார்வையாளர் சேதுபதி வரவேற்றார்.

    திருப்புல்லாணி ஊராட்சி மன்ற தலைவி கஜேந்திரமாலா ஒன்றிய கவுன்சிலர் கலா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3 நாட்கள் நடைபெற்ற கலைத்திருவிழாவில் மாணவ மாணவிகளின் ஓவியப்போட்டி, நடனம், நாடகம், மொழி திறன் போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    விழாவில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், உதவி திட்ட அலுவலர் கர்ணன், வட்டார கல்வி அலுவலர்கள் உஷாராணி, ஜெயா, திருப்புல்லாணி தலைமை ஆசிரியர் (பொ) பிரேமா, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் முருகவேல், செந்தில் குமார் மற்றும் ஆசி ரியர் பயிற்றுநர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஏராள மானோர் விழாவில் கலந்து கொண்டனர். இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் செய்தார்.

    • திருமங்கலத்தில் நடந்த கலைத்திருவிழாவில் 31 பள்ளிகள் பங்கேற்றன.
    • இந்த கலைத்திருவிழா திருமங்கலம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    திருமங்கலம்

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2022-2023ம் ஆண்டிற்கான கலைத்திருவிழா திருமங்கலம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 31 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    6-ம் வகுப்பு முதல் முதல் 8-ம் வகுப்பு வரை வரையிலான மாணவர்க ளின் கலைநிகழ்ச்சிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தொடங்கி வைத்தார். பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட உதவித்திட்ட அலுவலர் கார்மேகம், மாவட்ட கல்வி அலுவலர் செல்வகணேஷ், வட்டார கல்வி அலுவலர்கள் சின்னவெள்ளைச்சாமி, நமச்சிவாயம், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் ஸ்ரீதேவி சண்முகம் ஆகி யோர் விழாவில் கலந்து கொண்டனர்.

    விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாடகம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கர்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    இந்த கலைதிருவிழாவில் 1500 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகள் மாநில மற்றும் வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறலாம் என்பதால் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    • வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழா நடை பெற்றது.
    • இதில், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ–-மாண வியருக்கு இடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம், இசை உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழா நடை பெற்றது. இதில் பள்ளித் தலைமையாசிரியை ரமா தலைமை வகித்தார். ஆசிரியை சுமதி வரவேற்றார். முத்தம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ரம்யா செந்தில்குமார் கலைத்திருவிழா மற்றும் மாணவ–-மாணவியரின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்தார்.

    இதில், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ–-மாண வியருக்கு இடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம், இசை உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரேவதி சசிகுமார், உறுப்பினர்கள் பிரபாகரன், மாதேஸ்வன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். நிறைவாக, ஆசிரியை மலர்கொடி நன்றி கூறினார்.

    இதேபோல் பொன்னா ரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத்திரு விழாவிற்கு, பள்ளித் தலைமையாசிரியை புனித ஞானதிலகம் தலைமை வகித்தார். பல்வேறு கலைத்திறன் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ–மாணவியருக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி பிரபாகரன், முன்னாள் தலைவர் வசந்தா காசிவிஸ்வநாதன், துணைத் தலைவர் கலா வதி பூவராகவன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பழனி சாமி, ஆசிரியர் சங்க நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    • லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கலை விழா நடந்தது.
    • மேல்நிலை இரண்டாமாண்டு மாணவி மதுமிதா நன்றி கூறினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்துர் லயன்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் 44-வது கலைச் சங்கம ஆண்டு விழா பள்ளித் தாளாளர் லயன் வெங்கடாசலபதி தலைமையில் நடந்தது.

    மேல்நிலை முதலாமா ண்டு மாணவர் கோகுல்பிரசாத் வரவேற்றார். முதல்வர் எம்.பி.முருகன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக லயன்ஸ் சங்க ஆளுநர் விசுவநாதனும், லயன்ஸ் சங்க மகளிர் முதல் பெண் இயக்குநர் கலையரசி சிறப்பு அழைப்பாளராகவும் கலந்து கொண்டனர்.

    சிறப்பு அழைப்பா ளர்களை துணை முதல்வர் ஜெயராமகிருஷ்ணன் அறிமுகம் செய்தார். மாணவ, மாணவிகளுக்கு தனித்திறமைக்கான பரிசு மற்றும் கல்வியாண்டிற்கான பரிசுகளை சிறப்பு அழை ப்பாளர்கள் வழங்கினர்.

    லயன்ஸ் பள்ளியின் மாணவ-மாணவிகளின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில் பரதம், நாட்டுப்புற நடனம், வரவேற்பு நடனம், பல்சுவை நடனம், மைம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் லயன் ரெங்கராஜா, பள்ளிச் செயலாளர்-தாளாளர் வெங்கடாசலபதி, பொருளாளர் குணசேகரன் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மேல்நிலை இரண்டாமாண்டு மாணவி மதுமிதா நன்றி கூறினார்.

    ×