

தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் புளியால் அரசு பள்ளி மாணவர்கள் அதிக போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர். தனிப்போட்டி பிரிவில் 7-ம் வகுப்பு மாணவர் தமிழ் அமுதன் பறை போட்டியில் முதலிடமும், டிரம்ஸ் போட்டியில் ஜெகதீசுவரன் முதலிடமும், ஒயிலாட்ட போட்டியில் ஜீவிதாஷிரி முதலிடமும் பெற்றனர்.
9-ம் வகுப்பு மாணவர் வாசு பறை இசை போட்டியில் முதலிடமும், டிரம்ஸ் போட்டியில் அருண் முதலிடமும், கீ போர்டு போட்டியில் ஆல்வின் புஷ்பராஜ் முதலிடமும், செவ்வியல் நடனத்தில் சுருதி முதலிடமும், களிமண் சிற்ப போட்டியில் கமலேஷ் முதலிடமும், தனி நடன போட்டியில் முகிதா 2-ம் இடமும், பானை ஓவியப் போட்டியில் ஜெயபாலா 2-ம் இடமும், தலைப்பை ஒட்டி வரைதல் போட்டியில் பால் தினகரன் 2-ம் இடமும், பல குரல் பேச்சு போட்டியில் ஹரி சதிஷ் 2-ம் இடமும் வெற்றி பெற்றனர்.
குழுப் போட்டியில் விவாத மேடையில் ரித்திஷ்குமார் குழுவினர் முதலிடமும், சமூக நாடகத்தில் முகமது ஹாரிஸ், நித்திஷ்குமார் குழுவினர் முதலிடமும், கிராமிய நடனத்தில் வைஷ்ணவி, நிஷா குழுவினர் 2-ம் இடமும் பெற்றனர். அனைவரும் சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான கலைப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஜோசப் இருதயராஜ், ஜெயந்தி ஆகியோரையும் தலைமையாசிரியர் நாகேந்திரன், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், உதவித் தலைமையாசிரியை விமலா மற்றும் பலர் பாராட்டினர்.