search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை மலங்கரை கத்தோலிக்க கல்லூரியின் 24-வது ஆண்டு விழா - நாளை நடக்கிறது
    X

    களியக்காவிளை மலங்கரை கத்தோலிக்க கல்லூரியின் 24-வது ஆண்டு விழா - நாளை நடக்கிறது

    • கல்லூரி தின விழா மற்றும் கலைவிழா நாளை 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது.
    • மலையாள திரைப்பட நடிகர் சாஜன் பல்லூர்தி கலைவிழா தின சிறப்புரை ஆற்றுகிறார்

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே உள்ள மரியகிரி மலங்காரா கத்தோலிக்க கல்லூரியின் 24-வது கல்லூரி தின விழா மற்றும் கலைவிழா நாளை 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது.

    நாளை 17-ந் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெறும் கலை விழாவை அருட்தந்தை அஜிஸ்ஜோகன் தொடங்கி வைக்கிறார். மலையாள திரைப்பட நடிகர் சாஜன் பல்லூர்தி கலைவிழா தின சிறப்புரை ஆற்றுகிறார். கல்லூரி பஸ்சார் அருட்தந்தை ராபின்சன் வாழ்த்துரை வழங்குகிறார். விழாவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்படுகிறது.

    18-ந் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு 24-வது கல்லூரி தின விழா கொண்டாடப்படுகிறது. விழாவில் கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் அருட்தந்தை அருள் தாஸ் வரவேற்புரை ஆற்றுகிறார். கல்லூரி முதல்வர் தம்பி தங்க குமரன் ஆண்டறிக்கை வாசிக்கிறார். மார்த்தாண்டம் பங்கு மண்டல பிஷப் அருட்தந்தை வின்சன்ட் மார் பால்ஸ் தலைமை உரையாற்றுகிறார். ஓய்வுபெற்ற கேரள போலீஸ் டிஜிபி ஜேக்கப் புன்னோஷா கல்லூரி தின விழா சிறப்புரை ஆற்றுகிறார். மலங்காரா கத்தோலிக்க கல்லூரியின் தாளாளர் பிரேம்குமார் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    மேலும் அருட்தந்தை ஜோஸ்பி ரைட். ஷீபா தேவ் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். முடிவில் கல்லூரி உதவிபேராசிரியர் லெனின் ஜான் நன்றி உரை ஆற்றுகிறார். விழாவில் மாணவ மாணவிகளின் நடன நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கல்லூரி தாளாளர் அருட்தந்தை அருள்தாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்

    Next Story
    ×