வாடிப்பட்டி ஒன்றிய கலைத்திருவிழா

வாடிப்பட்டி ஒன்றிய கலைத்திருவிழா நடந்தது. ஆசிரியர் பயிற்றுநர் பெரியகருப்பன் நன்றி கூறினார்.
வாடிப்பட்டி ஒன்றிய கலைத்திருவிழா
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வட்டாரவளமையத்தில் நடந்தது. கவுன்சிலர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார்.

தலைமை ஆசிரியர்கள் இனிகோ எட்வர்ட்ராஜா, திலகவதி, விஜயகுமார், மலர்விழி, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய பொறுப்பாளர் கலைச்செல்வி வரவேற்றார்.

இந்த போட்டிகளை பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வாசுகி தொடங்கி வைத்தார். இதில் வாடிப்பட்டி ஒன்றிய அளவில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகள் இசை, கிராமிய நடனம், வில்லுப்பாட்டு, பேச்சு, கட்டுரை போட்டி, நாடகம், குழு நடனம், இசைசங்கமம், பலகுரல், வண்ணம் தீட்டுதல், கேலிசித்திரம், வரைந்துவண்ணம் தீட்டுதல், தலைப்பை ஒட்டிவரைதல், கையெழுத்து போட்டி, புகைப்படம் எடுத்தல், களிமண் பொம்மை செய்தல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

வட்டார கல்வி அலுவலர்கள் அகிலத்து இளவரசி, ஷாஜகான் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் பெரியகருப்பன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com