search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    நரகாசூரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
    X

    நரகாசூரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `நரகாசூரன்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #Naragasooran
    `துருவங்கள் பதினாறு' படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `நரகாசூரன்'. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. 

    இதில், இயக்குநர் கார்த்திக் நரேன், நடிகர் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன் மற்றும் ஆத்மிகா கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. மேலும் படம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 



    கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரியோ சரண், ஆத்மிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    ரோன் ஈதன் யோகன் இசையமைக்கும் இந்த படத்தில் பாடல்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. #Naragasooran #AravindSwamy

    Next Story
    ×