என் மலர்

  நீங்கள் தேடியது "Varalakshmi Sarathkumar"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அனில் கட்ஸ் இயக்கி வரும் 'சபரி' படத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
  • இப்படத்தின் முக்கிய ஷெட்யூல் கொடைக்கானலில் வரலக்‌ஷ்மி சரத்குமார் நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இயக்குனர் அனில் கட்ஸ் இயக்கி வரும் 'சபரி' படத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் கணேஷ் வெங்கட்ராமன், ஷாஷங்க், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது. இப்படத்தை 'மஹா மூவிஸ்' பேனரில் மகேந்திர நாத் கொண்டலா தயாரிப்பில், மகரிஷி கொண்டலா வழங்குகிறார்.

   

  வரலக்‌ஷ்மி சரத்குமார்

  வரலக்‌ஷ்மி சரத்குமார்

  இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று, படத்தின் முக்கிய கட்டத்தை சமீபத்தில் படக்குழு முடித்துள்ளது. இதன் முக்கிய காட்சிகள் இரண்டு வாரங்களாக கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த கொடைக்கானல் படப்பிடிப்பில் வரலக்‌ஷ்மி மற்றும் படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய நடிகர்கள் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

  வரலக்‌ஷ்மி சரத்குமார்

  வரலக்‌ஷ்மி சரத்குமார்

   

  இப்படம் குறித்து இயக்குனர் அனில் கட்ஸ் கூறியதாவது, "படம் சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகையில் பரபரப்பான திருப்பங்களை கொண்டது. இதில் நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் பல கட்டங்களை உள்ளடக்கிய எமோஷனலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்னால் இது போன்ற வேடத்தில் அவர் நடித்ததில்லை. படத்தின் ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டும் சிறந்த வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு த்ரில்லிங்கான அனுபவத்தை தரும்" என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் வரலட்சுமி நடித்து வருகிறார்.
  • இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வீடியோ பதிவின் மூலம் அறிவித்துள்ளார்.

  'போடா போடி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் இவரின் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான 'தாரைதப்பட்டை' படம் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல அடையாளத்தை தந்தது. அதன்பின் வரலட்சுமி சரத்குமார், 'விக்ரம் வேதா', 'மாரி-2', 'கன்னிராசி', 'பாம்பன்', ' நீயா-2', 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்', 'மிஸ்டர் சந்திரமௌலி', ' சண்டக்கோழி-2', 'சர்க்கார்' உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் வரலட்சுமி நடித்து வருகிறார்.

  வரலட்சுமி சரத்குமார்

  வரலட்சுமி சரத்குமார்

  இந்நிலையில், நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக ஒரு வீடியோ பதிவின் மூலம் அவர் அறிவித்துள்ளார். அதில், "முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் அனைவரையும் முககவசம் அணியும்படி நடிகர்கள் வலியுறுத்த வேண்டும் ஏனென்றால் நடிகர்கள் ஆகிய நாம் படப்பிடிப்பின் போது முககவசம் அணிய முடியாது. சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் தயவு செய்து பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள், கவனமாக இருங்கள், முக கவசம் அணியுங்கள்" என்று வரலட்சுமி சரத்குமார் அறிவுறுத்தியுள்ளார்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எல்.கே.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் - கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நீயா 2’ படத்தின் விமர்சனம்.
  நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். ஜெய்யை பார்க்கும் கேத்தரின் தெரசாவுக்கு ஜெய் மீது காதல் வந்து, அவரை திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுகிறார். கேத்தரின் தனது காதலை ஜெய்யிடம் தெரிவிக்க, ஜெய் கேத்தரினை திருமணம் செய்ய மறுக்கிறார். கேத்தரின் விடாப்பிடியாக இருக்க, தனக்கு நாக தோஷம் இருப்பதால், நாக தோஷம் இருக்கும் பெண்ணை தான் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று ஜெய் கூறுகிறார்.

  பின்னர் தனக்கும் நாக தோஷம் இருப்பதாக கேத்தரின் கூற, இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு கேத்தரினுக்கு நாக தோஷம் இல்லை என்பது தெரிய வர, பரிகாரம் செய்வதற்காக இருவரும் கொடைக்கானல் செல்கின்றனர்.  அங்கு கடந்த ஜென்மத்தில் கிடைத்த சாபத்தால், பிரிந்த தனது காதலனான ஜெய்யுடன் சேருவதற்காக காத்திருக்கிறார் பாம்பு பெண்ணாகிய ராய் லட்சுமி.

  கடைசியில், ஜெய்யின் நாக தோஷம் நீங்கியதா? கேத்தரினுடன் இணைந்தாரா? ராய் லெட்சுமியுடன் இணைந்தாரா? ராய் லட்சுமியின் முன் வாழ்க்கைக் கதை என்ன? அவருக்கு சாபம் வழங்கியது யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.  நடிகர் ஜெய் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் வந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்துவிட்டுச் சென்றிருக்கிறார். காதல், ஆக்‌ஷன் என தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 

  ஜெய்யை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாபாத்திரத்தில் கேத்தரின் தெரசா ரசிகர்களை கவர்கிறார். காதல், கவர்ச்சி என கிறங்கடிக்கிறார். பாம்பு பெண்ணாக ராய் லட்சுமி ராயலான பாம்பாக வலம் வருகிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் வரலட்சுமி தனது கதாபாத்திரத்திற்கு மெருகேற்றிவிட்டு சென்றிருக்கிறார். பால சரவணன் காமெடியில் ஓரளவு சிரிக்க வைக்கிறார்.  நாக தோஷத்தை மையமாக வைத்து படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார் எல்.கே.சுரேஷ். முதல்பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியிலும் தொடர்ந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும். பாம்பு வரும் கிராபிக்ஸ் காட்சிகள் விறுவிறுப்பை தூண்டுகின்றன. படத்தில் எந்த அளவுக்கு விறுவிறுப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு கவர்ச்சியும் இருக்கிறது.

  ஷபீரின் பின்னணி இசையும், ராஜவேல் மோகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளன.

  மொத்தத்தில் ‘நீயா 2’ கவர்ச்சி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுந்தர் பாலு இயக்கும் ‘கன்னித்தீவு’ படத்தில் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி உள்ளிட்ட 4 நாயகிகள் மொட்டை ராஜேந்திரனுடன் இணைந்து முதலையுடன் சண்டையிடும் காட்சி படமாக்கப்படுகிறது. #KanniTheevu #Varalakshmi
  த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ஜனை படத்தை இயக்கிய சுந்தர் பாலு தயாரித்து இயக்கும் புதிய படம் ‘கன்னித்தீவு’. இதில் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, மொட்டை ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சர்மிளா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார்.

  இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற உள்ளது. மிகப் பெரிய ஏரி ஒன்றில் சுமார் 9 அடி நீளமான முதலையுடன் வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகிய நான்கு கதாநாயகிகளுடன் மொட்டை ராஜேந்திரன் இணைந்து முதலையுடன் மோதுகின்றனர்.  முதலையுடன் நாயகிகள் மோதும் இந்த சண்டைக்காட்சியை ஸ்டண்ட் சிவா இயக்குகிறார். ஆரோல் கரோலி இசையமைக்கும் இந்த படத்திற்கு சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். #KanniTheevu #Varalakshmi #AshnaZaveri #AishwaryaDutta #Subiksha

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுந்தர் பாலு இயக்கத்தில் உருவாகும் `கன்னித்தீவு' படத்தில் சமூக பிரச்சனைக்காக போராடும் கதாபாத்திரத்தில் வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கிறார்கள். #KanniTheevu #Varalakshmi
  த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு அடுத்ததாக ‘கன்னித்தீவு’ என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.

  படம் பற்றி இயக்குநர் சுந்தர் பாலு கூறுகையில், கன்னித்தீவு என்ற பெயர் தமிழ்மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பெயர், அதோடு கன்னித்தீவு என்றாலே அட்வெஞ்சர் என்பதாலும் இந்தப்பெயரை படத்திற்கு வைத்தோம். மேலும் படத்தில் நான்கு பெண்கள் இருப்பதால் இந்தப்பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். கன்னித்தீவு பெயருக்கு பொருத்தமாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை ஒரு தீவில் படம் பிடித்துள்ளோம்.  வட சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்திய கதை இது. சின்ன வயதில் இருந்தே தோழிகளான வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா நான்கு பேரும் சமூக அக்கறையுள்ளவர்கள். உலகத்தை காப்பாற்ற முடியாவிட்டாலும் தங்கள் பகுதியையாவையாவது நன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அந்த பகுதியில் நீண்ட நாளாக இருக்கும் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக போராட்டத்தில் குதிக்கிறார்கள். அந்த பகுதி மக்களின் பேராதரவோடு அந்த போராட்டத்தில் பெரிய வெற்றி பெறுகிறார்கள்.

  அந்த வெற்றியே இந்த நான்கு பேருக்கும் பெரிய பிரச்சினையாக மாறுகிறது. அந்த பிரச்சினை என்ன? அதில் இந்த நான்கு பேரும் எப்படி போராடி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆக்சன் த்ரில்லர் திரைக்கதையாக உருவாகுவதாக இயக்குநர் சுந்தர்பாலு கூறினார். #KanniTheevu #Varalakshmi #AshnaZaveri #AishwaryaDutta #Subiksha

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘கர்ஜனை’ படத்தை இயக்கிய சுந்தர் பாலு அடுத்ததாக இயக்கும் `கன்னித்தீவு' படத்தில் 4 கதாநாயகிகள் ஒப்பந்தமாகி உள்ளனர். #KanniTheevu #Varalakshmi
  த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கர்ஜனை’ படத்தை இயக்கிய சுந்தர் பாலு அடுத்தாக இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வரலட்சுமி, இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

  இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கிறார்கள். ஆரோல் கரோலி இசையமைக்க, சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.  கிருத்திகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுந்தர் பாலு இந்த படத்தை தயாரிக்கிறார். படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. #KanniTheevu #Varalakshmi #AshnaZaveri #AishwaryaDutta #Subiksha

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘சீதக்காதி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இருக்கும் இயக்குநர் டீகே, தான் படங்களை இயக்கவே விரும்புவதாக கூறினார். #Katteri #Deekay
  ‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே ‘காட்டேரி ’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அத்துடன் விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி’  படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார்.

  நடிகராக அறிமுகமானது பற்றி?

  நடிப்பது, இயக்குவதை விட கடினமாகவே இருந்தது. என்னை நடிகராக்கியதில் முழு பங்கும் இயக்குநர் பாலாஜி தரணிதரனையே சாரும். தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டவிரும்பவில்லை. நண்பருக்காகவே ‘சீதக்காதி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். தொடர்ந்து இயக்குவதில் தான் கவனம் செலுத்தி வருகிறேன். அதே சமயத்தில் பாலாஜி போன்ற என்னுடைய நண்பர்கள் அவர்களின் படத்தில் நடிக்க வாய்ப்பளித்தால் நடிப்பை தொடரலாம்.  காட்டேரி எப்படி வந்திருக்கிறது?

  ரொம்ப அற்புதமாக வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் என்னுடைய முதல் படம் காட்டேரி என்று கூட சொல்லலாம். இதனை சாதாரண ஹாரர் படமென்றோ, காமெடி கலந்த ஹாரர் படமென்றோ நினைத்துவிட வேண்டாம். அதையும் கடந்து ரசிகர்களை கவரக்கூடிய வித்தியாசமான அம்சம் ஒன்று படத்தில் இடம்பெற்றிருக்கிறது. படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

  ‘காட்டேரி’ படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ்.என்.பிரசாத் இசையமைத்திருக்கிறார். #Katteri #Deekay

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், முதல்முறையாக புதிய படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆக இருக்கிறார். #Varalakshmi
  கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது பயணத்தை மாற்றி வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார் வரலட்சுமி. இதனால் அவருக்கு வாய்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கின.

  இவரது நடிப்பில் தற்போது ‘வெல்வெட் நகரம், கன்னிராசி, நீயா 2, காட்டேரி, ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்நிலையில், முதல் முறையாக தெலுங்கு படத்தில் அறிமுகமாக இருக்கிறார்.  சந்தீப் கிஷன், ஹன்சிகா நடிக்க இருக்கும் புதிய படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். நாகேஷ்வர் ரெட்டி இப்படத்தை இயக்குகிறார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.கே. இயக்கத்தில் வைபவ் - வரலட்சமி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பஜ்வா மற்றும் மணாலி ரதோட் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காட்டேரி’ படத்தின் முன்னோட்டம். #Katteri #Vaibhav
  ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’.

  இதில் வைபவ் நாயகனாக நடிக்க, வரலட்சமி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பஜ்வா மற்றும் மணாலி ரதோட் நாயகிகளாக நடிக்கின்றனர். கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூடியூப் ’ புகழ் சாரா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.   ஒளிப்பதிவு - விக்கி, இசை - எஸ்.என்.பிரசாத், படத்தொகுப்பு - பிரவீன்.எச்.எல்., சண்டைப்பயிற்சி - டான் அசோக், ஆடை வடிவமைப்பு - குஷ்பு பானர்ஜி, தயாரிப்பு - ஸ்டூடியோ கிரீன், தயாரிப்பாளர் - கே.இ.ஞானவேல்ராஜா கலை - செந்தில், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - டீகே.

  காமெடி கலந்த திகில், திரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில், படத்தை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. #Katteri #Vaibhav

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் திருமணம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். #Varalakshmi #Rumours
  சிம்பு ஜோடியாக போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானாவர் வரலட்சுமி. பாலா இயக்கத்தில் இவர் நடித்த தாரை தப்பட்டை படத்தின் மூலம் கவனிக்கப்பட்டார்.

  தொடர்ந்து விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, மிஸ்டர்.சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் வரலட்சுமி சண்டக்கோழி 2, சர்கார் படங்களில் வில்லியாகவும் நடித்தார். 

  இவரும் விஷாலும் காதலிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுத்தார்கள். தொடக்கத்தில் இதுபற்றி பேசாத வரலட்சுமி, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில்,  நடிகர் விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா வி‌ஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மை இல்லை.

  விஷாலுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தால் நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தயார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். எதற்காக விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை என்று கூறியிருந்தார்.


  இந்த நிலையில், வரலட்சுமிக்கு திருமணம் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த வரலட்சுமி, எப்போதும் போல வருடத்தின் இறுதியில் வேலையில்லாத சிலர் எனக்கு திருமணம் என்ற வதந்தியை பரப்பி வருகிறார்கள். நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் சினிமாவில் தான் கவனம் செலுத்தப் போகிறன். அடுத்த ஆண்டு பார்க்கலாம். வதந்தியை பரப்புவது யார் என்று எனக்கு தெரியும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

  இதற்கிடையே விஷாலுக்கு ஆந்திர பெண்ணுடன் திருமணம் நடைபெறவிருக்கும் செய்தி வெளியாகி இருப்பதால், இருவரைப் பற்றிய காதல் கிசுகிசுக்ககளும் முடிவுக்கு வந்துள்ளன. #Varalakshmi #Rumours

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்துள்ளார். #VishalMarriage #Vishal #Anisha
  ‘செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமனாவர் விஷால். தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டு பிள்ளை, அவன் இவன், சமர், பட்டத்து யானை, பாண்டியநாடு, பூஜை, ஆம்பள, பாயும்புலி, மருது, கதகளி, துப்பறிவாளன், இரும்புத்திரை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரிக்கவும் செய்தார்.

  தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்ததும் திருமணம் செய்து கொள்வதாக விஷால் கூறியிருக்கிறார்.

  இந்த நிலையில், விஷால் - வரலட்சுமி இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது. சமீபத்தில் விஷால் நண்பர் மட்டுமே என்று வரலட்சுமி விளக்கம் அளித்திருந்தார். விஷால் கூறும்போது, வரலட்சுமி எனது பால்ய நண்பர். என் மனதுக்கு நெருக்கமானவர், சமயம் வரும்போது எனது திருமணம் குறித்தும், யாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்பது குறித்தும் தெளிவுபடுத்துவேன் என்று கூறியிருந்தார்.  நடிகர் சங்க கட்டிட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஷாலுக்கு பெண்பார்க்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டு, தற்போது மணமகளை தேர்வு செய்துள்ளனர்.

  மணப்பெண்ணின் பெயர், அனிஷா. ஆந்திராவை சேர்ந்தவர். விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. இதற்காக விஷால், குடும்பத்தினருடன் ஐதராபாத் செல்கிறார். நிச்சயதார்த்தத்தில் திருமண தேதியை முடிவு செய்கிறார்கள்.  விஷாலுக்கு மணமகள் முடிவானதையும், ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடப்பதையும் அவரது தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி பிரத்யேகமாக தெரிவித்தார். #VishalMarriage #Vishal #Anisha

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print