என் மலர்

  நீங்கள் தேடியது "Aishwarya Dutta"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா தத்தா.
  • இவரின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.

  தமிழ் திரையுலகில் நகுல் நடிப்பில் வெளியான 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன்பின் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக களம் இறங்கி அனைவரையும் கவர்ந்தார். இதன் மூலம் அவருடைய ரசிகர்கள் பட்டாளம் பெறுகியது.

   

  ஐஸ்வர்யா தத்தா

  ஐஸ்வர்யா தத்தா

   

  இவர் பிக்பாஸ் போட்டியாளர்களான ஆரியுடன் அலேகா, மஹத் உடன் 'கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா' , 'கன்னித்தீவு', 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' , மில்லர், காபி வித் காதல் என பல படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளது.

  ஐஸ்வர்யா தத்தா

  ஐஸ்வர்யா தத்தா

   

  சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் பதிவிட்டிருக்கும் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாறை மேல் ஏறி கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா தத்தாவின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா தத்தா.
  • இவரின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.

  தமிழ் திரையுலகில் நகுல் நடிப்பில் வெளியான 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன்பின் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக களம் இறங்கி அனைவரையும் கவர்ந்தார். இதன் மூலம் அவருடைய ரசிகர்கள் பட்டாளம் பெறுகியது.

   

  ஐஸ்வர்யா தத்தா

  ஐஸ்வர்யா தத்தா

  இவர் பிக்பாஸ் போட்டியாளர்களான ஆரியுடன் அலேகா, மஹத் உடன் 'கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா' , 'கன்னித்தீவு', 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' , மில்லர், காபி வித் காதல் என பல படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளது.

  ஐஸ்வர்யா தத்தா

  ஐஸ்வர்யா தத்தா

   

  சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் பதிவிட்டிருக்கும் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலாடை மட்டும் அணிந்து கவர்ச்சியின் எல்லைக்கே சென்ற ஐஸ்வர்யா தத்தாவின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எஸ்.எஸ்.ராஜமித்திரன் இயக்கத்தில் ஆரி - ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடிக்கும் அலேகா படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குநருக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. #Aleka #Aari #AishwaryaDutta
  தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். தற்போது கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

  இதில் அலேகா படத்தை புதுமுக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமித்திரன் இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக ஆரி நடிக்கிறார். போர்வைக்குள் காதலர்களின் கால்கள் மட்டும் தெரியும்படி உள்ள படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது காம படம் இல்லை, காதல் படமாக உருவாகிறது என்று படக்குழுவினர் விளக்கம் அளித்தனர்.  இந்த நிலையில், படப்பிடிப்பில் தற்போது இயக்குனருக்கும், ஐஸ்வர்யா தத்தாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, “படப்பிடிப்புக்கு தினமும் ஐஸ்வர்யா தத்தா தாமதமாக வந்தார். அவருக்காக மற்ற நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் காத்திருக்க வேண்டி இருந்தது. சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வரும்படி ஐஸ்வர்யா தத்தாவிடம் வற்புறுத்தியும் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் இயக்குனர் பொறுமை இழந்து அவரை கண்டித்தார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது” என்று கூறினர். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Aleka #Aari #AishwaryaDutta

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அலேகா படத்தில் பிசியாக நடித்து வரும் நடிகர் ஆரி, தன்னுடைய பிறந்த நாளை வித்தியாசமாக புதுமையான முறையில் கொண்டாடி இருக்கிறார். #Aari
  சமுதாயத்திற்கு பல நல்ல செயல்களை செய்து வரும் ஆரி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். தற்போது, காதலின் உயர்வை சொல்லும் 'அலேகா' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு கோடம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அவரது பிறந்த நாளுக்காக 5 கிலோ எடையுள்ள கேக்கை தயார் செய்திருந்தனர். 

  ஆனால், இயற்கை உணவுக்கு முன்னுரிமை தரும் ஆரி, கேக் என்பது இயற்கை உணவு வகையை சார்ந்தது கிடையாது என்று கூறி  படப்பிடிப்புத் தளத்தில் உள்ள அனைவருக்கும் இளநீர் கொடுத்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். உடன் ஐஸ்வர்யா தத்தாவும் இருந்தார்.  இப்படத்தை க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ் பி.தர்மராஜ் மற்றும் கிரியேட்டிவ் டீம்ஸ் இ.ஆர்.ஆனந்தன் தயாரிக்கிறார்கள். 'அய்யனார்' புகழ் எஸ்.எஸ்.ராஜா மித்ரன் இயக்குகிறார். இசை - சத்யா, ஒளிப்பதிவு - தில் ராஜ், படத்தொகுப்பு - கார்த்திக் ராம், பாடல்கள் - யுகபாரதி, விவேகா மற்றும் லாவரதன் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுந்தர் பாலு இயக்கும் ‘கன்னித்தீவு’ படத்தில் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி உள்ளிட்ட 4 நாயகிகள் மொட்டை ராஜேந்திரனுடன் இணைந்து முதலையுடன் சண்டையிடும் காட்சி படமாக்கப்படுகிறது. #KanniTheevu #Varalakshmi
  த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ஜனை படத்தை இயக்கிய சுந்தர் பாலு தயாரித்து இயக்கும் புதிய படம் ‘கன்னித்தீவு’. இதில் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, மொட்டை ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சர்மிளா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார்.

  இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற உள்ளது. மிகப் பெரிய ஏரி ஒன்றில் சுமார் 9 அடி நீளமான முதலையுடன் வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகிய நான்கு கதாநாயகிகளுடன் மொட்டை ராஜேந்திரன் இணைந்து முதலையுடன் மோதுகின்றனர்.  முதலையுடன் நாயகிகள் மோதும் இந்த சண்டைக்காட்சியை ஸ்டண்ட் சிவா இயக்குகிறார். ஆரோல் கரோலி இசையமைக்கும் இந்த படத்திற்கு சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். #KanniTheevu #Varalakshmi #AshnaZaveri #AishwaryaDutta #Subiksha

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுந்தர் பாலு இயக்கத்தில் உருவாகும் `கன்னித்தீவு' படத்தில் சமூக பிரச்சனைக்காக போராடும் கதாபாத்திரத்தில் வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கிறார்கள். #KanniTheevu #Varalakshmi
  த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு அடுத்ததாக ‘கன்னித்தீவு’ என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.

  படம் பற்றி இயக்குநர் சுந்தர் பாலு கூறுகையில், கன்னித்தீவு என்ற பெயர் தமிழ்மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பெயர், அதோடு கன்னித்தீவு என்றாலே அட்வெஞ்சர் என்பதாலும் இந்தப்பெயரை படத்திற்கு வைத்தோம். மேலும் படத்தில் நான்கு பெண்கள் இருப்பதால் இந்தப்பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். கன்னித்தீவு பெயருக்கு பொருத்தமாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை ஒரு தீவில் படம் பிடித்துள்ளோம்.  வட சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்திய கதை இது. சின்ன வயதில் இருந்தே தோழிகளான வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா நான்கு பேரும் சமூக அக்கறையுள்ளவர்கள். உலகத்தை காப்பாற்ற முடியாவிட்டாலும் தங்கள் பகுதியையாவையாவது நன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அந்த பகுதியில் நீண்ட நாளாக இருக்கும் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக போராட்டத்தில் குதிக்கிறார்கள். அந்த பகுதி மக்களின் பேராதரவோடு அந்த போராட்டத்தில் பெரிய வெற்றி பெறுகிறார்கள்.

  அந்த வெற்றியே இந்த நான்கு பேருக்கும் பெரிய பிரச்சினையாக மாறுகிறது. அந்த பிரச்சினை என்ன? அதில் இந்த நான்கு பேரும் எப்படி போராடி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆக்சன் த்ரில்லர் திரைக்கதையாக உருவாகுவதாக இயக்குநர் சுந்தர்பாலு கூறினார். #KanniTheevu #Varalakshmi #AshnaZaveri #AishwaryaDutta #Subiksha

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘கர்ஜனை’ படத்தை இயக்கிய சுந்தர் பாலு அடுத்ததாக இயக்கும் `கன்னித்தீவு' படத்தில் 4 கதாநாயகிகள் ஒப்பந்தமாகி உள்ளனர். #KanniTheevu #Varalakshmi
  த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கர்ஜனை’ படத்தை இயக்கிய சுந்தர் பாலு அடுத்தாக இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வரலட்சுமி, இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

  இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கிறார்கள். ஆரோல் கரோலி இசையமைக்க, சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.  கிருத்திகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுந்தர் பாலு இந்த படத்தை தயாரிக்கிறார். படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. #KanniTheevu #Varalakshmi #AshnaZaveri #AishwaryaDutta #Subiksha

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காதலை மையப்படுத்தி ஆரி, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு தற்போது பெயர் வைத்திருக்கிறார்கள். #Aari #AishwaryaDutta #HappyPongal2019
  ஆரி - ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தை அய்யனார் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்கி வருகிறார். கடந்து போன காதல், தற்போதைய காதல் என முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  பெயரிடப்படாமல் உருவாகி வந்த இப்படத்திற்கு தற்போது, ‘அலேகா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஏ.ஜி.மகேஷ் இசையமைக்க, தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப குழு மற்றும் தலைப்பு குறித்த தகவல்களை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது. ஈ.ஆர்.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் பி. தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள். #Aari #AishwaryaDutta
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதிய படத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் நடித்து வரும் ஆரி, படப்பிடிப்பில் கிறிஸ்துமஸ் விழாவை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடி இருக்கிறார். #Aari
  உலகமெங்கும் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர்கள் தங்களுடைய ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ஆரி கிறிஸ்துமஸ் விழாவை ஆசிரமக் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.

  ஆரியும், ஐஸ்வர்யா தத்தாவும், பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்கள். எஸ்.எஸ்.ராஜ மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இப்படத்தின் இடைவெளியின் போது படப்பிடிப்பில் இருந்த ஆரியும், ஐஸ்வர்யா தாத்தாவும், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆசிரம குழந்தைகளை படப்பிடிப்பு தளத்திற்கே வரவழைத்து பொம்மைகள், சான்டா கிளாஸ் மாதிரி பரிசு பொருட்கள் மற்றும் மதிய உணவும் கொடுத்து அவர்களுடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி உள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா, ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு என்று கூறியிருக்கிறார். #AishwaryaDutta
  ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி:- ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு, நிறைய படங்களில் நடிக்கிற வாய்ப்பு வந்தது. கதையைத் தேர்வு செய்வதில் ரொம்ப கவனமாக இருக்கிறேன். படத்துல ஹீரோவுக்கு மட்டுமல்ல, ஹீரோயின் ரோலுக்கும் முக்கியத்துவம் இருக்கணும். அதனால எனக்கு நடிக்க முக்கியத்துவம் இருக்கிற மாதிரியான கதையைத் தேர்வு செய்கிறேன். ஆரி கூட லவ் ஜானர்ல ஒரு படம் பண்றேன்.

  மகத்கூடவும் ஒரு படத்துல நடிக்கிறேன். இந்த ரெண்டுமே என்னுடைய கேரியர்ல முக்கியமான படங்களாக இருக்கும். என்னைப் பார்க்க வர்ற தமிழ் ரசிகர்கள், அவங்க வீட்டுப் பொண்ணா நெனைச்சு, என்கிட்ட பேசுறாங்க. பிக்பாஸ்ல என்கூட இருந்தவங்க எல்லார்கூடவும் தொடர்புல இருக்க முடியலை. ஆனா, எங்களுக்குனு ஒரு வாட்ஸ்அப் குரூப் இருக்கு. அதுல நிறைய அரட்டை அடிப்போம். தனிப்பட்ட முறையில யாஷிகா, மகத் கூட தொடர்ந்து பேசிட்டிருக்கேன். 

  யாஷிகா ஷூட்டிங்ல எவ்வளவு பிஸியா இருந்தாலும் என்மேல அக்கறை காட்டி விசாரிப்பாங்க. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிற ஸ்க்ரிப்ட் அமைஞ்சா செமயா இருக்கும். தேசிய விருது வாங்கணும்ங்கிறதுதான் என் கனவு. அதனால நம்ம படங்களுக்கு நம்மதான் டப்பிங் பேசணும். எனக்குத் தமிழ் தெரியாதுங்கிறதால, என்னுடைய முந்தைய படங்களுக்கு நான் டப்பிங் பேசினது இல்லை. 
  இப்போ நான் நல்லா தமிழ் கத்துகிட்டேன். இனிமேல் என் படங்களுக்கு நானே டப்பிங் பேசலாம்னு முடிவு பண்ணிட்டேன்.   என்னுடைய ஆல் டைம் பேவரைட் சிம்புதான். சினிமா வர்றதுக்கு முன்னாடியே எனக்கு சிம்புவைப் பிடிக்கும். ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு. இது வரைக்கும் அவர்கிட்ட இதைச் சொன்னது இல்லை. அதே மாதிரி நடிகைகள்ல நயன்தாரா, அதிதி பாலன், ரெண்டு பேருடைய நடிப்பும் ரொம்ப பிடிக்கும். ஏன்னா, இந்த ரெண்டு பேருமே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பாங்க. பெரிய இயக்குனர்கள் படங்கள்ல நடிக்கணும்னு ஆசை இருக்கு, அது சீக்கிரமே நிறைவேறும்’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்கத்தில் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகும் படத்தில் ஆரி ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா தத்தா ஒப்பந்தமாகியுள்ளார். #Aari #AishwaryaDutta
  பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு ஐஸ்வர்யா தத்தா, ஆரி ஜோடியாக காதல் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கிய நிலையில், தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

  60-களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது, 80-களில் ஜாதி தடையாக இருந்தது, 2000-த்தில் அந்தஸ்து தடையாக இருந்தது. இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது. இதை பிரதிபலிக்கும் விதமாக அனைத்து தரப்பினரையும் கவரும் கதைக்களத்துடன் இந்த படத்தை உருவாக்குவதாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமித்ரன் தெரிவித்துள்ளார். இவர் இதற்கு முன்பாக அய்யனார் என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்து போன காதல், தற்போதைய காதல் என முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி படம் உருவாகிறது.

  ஏ.ஜி.மகேஷ் இசையமைக்க, தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப குழு மற்றும் தலைப்பு குறித்த தகவல்களை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது. ஈ.ஆர்.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் பி. தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள். #Aari #AishwaryaDutta

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print