search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arrol Corelli"

    சுந்தர் பாலு இயக்கும் ‘கன்னித்தீவு’ படத்தில் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி உள்ளிட்ட 4 நாயகிகள் மொட்டை ராஜேந்திரனுடன் இணைந்து முதலையுடன் சண்டையிடும் காட்சி படமாக்கப்படுகிறது. #KanniTheevu #Varalakshmi
    த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ஜனை படத்தை இயக்கிய சுந்தர் பாலு தயாரித்து இயக்கும் புதிய படம் ‘கன்னித்தீவு’. இதில் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, மொட்டை ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சர்மிளா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார்.

    இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற உள்ளது. மிகப் பெரிய ஏரி ஒன்றில் சுமார் 9 அடி நீளமான முதலையுடன் வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகிய நான்கு கதாநாயகிகளுடன் மொட்டை ராஜேந்திரன் இணைந்து முதலையுடன் மோதுகின்றனர்.



    முதலையுடன் நாயகிகள் மோதும் இந்த சண்டைக்காட்சியை ஸ்டண்ட் சிவா இயக்குகிறார். ஆரோல் கரோலி இசையமைக்கும் இந்த படத்திற்கு சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். #KanniTheevu #Varalakshmi #AshnaZaveri #AishwaryaDutta #Subiksha

    சுந்தர் பாலு இயக்கத்தில் உருவாகும் `கன்னித்தீவு' படத்தில் சமூக பிரச்சனைக்காக போராடும் கதாபாத்திரத்தில் வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கிறார்கள். #KanniTheevu #Varalakshmi
    த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு அடுத்ததாக ‘கன்னித்தீவு’ என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.

    படம் பற்றி இயக்குநர் சுந்தர் பாலு கூறுகையில், கன்னித்தீவு என்ற பெயர் தமிழ்மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பெயர், அதோடு கன்னித்தீவு என்றாலே அட்வெஞ்சர் என்பதாலும் இந்தப்பெயரை படத்திற்கு வைத்தோம். மேலும் படத்தில் நான்கு பெண்கள் இருப்பதால் இந்தப்பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். கன்னித்தீவு பெயருக்கு பொருத்தமாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை ஒரு தீவில் படம் பிடித்துள்ளோம்.



    வட சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்திய கதை இது. சின்ன வயதில் இருந்தே தோழிகளான வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா நான்கு பேரும் சமூக அக்கறையுள்ளவர்கள். உலகத்தை காப்பாற்ற முடியாவிட்டாலும் தங்கள் பகுதியையாவையாவது நன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அந்த பகுதியில் நீண்ட நாளாக இருக்கும் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக போராட்டத்தில் குதிக்கிறார்கள். அந்த பகுதி மக்களின் பேராதரவோடு அந்த போராட்டத்தில் பெரிய வெற்றி பெறுகிறார்கள்.

    அந்த வெற்றியே இந்த நான்கு பேருக்கும் பெரிய பிரச்சினையாக மாறுகிறது. அந்த பிரச்சினை என்ன? அதில் இந்த நான்கு பேரும் எப்படி போராடி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆக்சன் த்ரில்லர் திரைக்கதையாக உருவாகுவதாக இயக்குநர் சுந்தர்பாலு கூறினார். #KanniTheevu #Varalakshmi #AshnaZaveri #AishwaryaDutta #Subiksha

    ‘கர்ஜனை’ படத்தை இயக்கிய சுந்தர் பாலு அடுத்ததாக இயக்கும் `கன்னித்தீவு' படத்தில் 4 கதாநாயகிகள் ஒப்பந்தமாகி உள்ளனர். #KanniTheevu #Varalakshmi
    த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கர்ஜனை’ படத்தை இயக்கிய சுந்தர் பாலு அடுத்தாக இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வரலட்சுமி, இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கிறார்கள். ஆரோல் கரோலி இசையமைக்க, சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.



    கிருத்திகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுந்தர் பாலு இந்த படத்தை தயாரிக்கிறார். படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. #KanniTheevu #Varalakshmi #AshnaZaveri #AishwaryaDutta #Subiksha

    ராஜ்குமார் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் அண்ணனுக்கு ஜே படத்தில் மகிமா நம்பியார் மேக்கப் இல்லாமல் தர லோக்கல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். #AnnanukkuJai #MahimaNambiar
    இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அண்ணனுக்கு ஜே. அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் டிரைய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ராஜ்குமார், “இப்படத்திற்குப் பக்கபலமாக இருந்த வெற்றிமாறனுக்கு நன்றி. நடிகர் தினேசுக்கு முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன். மகிமா மேக்கப் கூட போடாமல் நடித்திருந்தார்.

    மயில்சாமி மற்றும் வையாபுரி இருவரும் எப்போதும் நகைச்சுவை நடிகர்களாகப் பல படங்களில் நடித்து இருப்பார்கள். இந்தப் படத்தில் சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்” என்று கூறினார். மகிமா நம்பியார் பேசும்போது, தான் டப்பிங் பேசி நடித்ததைக் குறிப்பிட்டார். “வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குனரின் தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.



    இந்தப் படத்தில் ‘தர லோக்கல்’ கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன்” என்று கூறினார். உள்ளூர் அரசியலை பேசி இருக்கிறோம். இந்த கதையை 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்குமார் கூறினார். ஆனால் இன்றுவரை அந்த கதை புதிதாகவே இருக்கிறது. காரணம் யாரும் அதிகம் தொடாத அரசியல் களம்’ என்றார். 

    அரோல் கரோலி இசை அமைக்க விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். ஜி.பி.வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். #AnnanukkuJai #MahimaNambiar

    “அண்ணனுக்கு ஜே” படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் தினேஷ், நான் ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன். தினகரனை ஆதரிப்பேன் என்று கூறினார். #AnnanukkuJai #Dinesh
    இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்துள்ள படம் “அண்ணனுக்கு ஜே”.

    அரசியலை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது ‘அட்டகத்தி’ தினேஷ் அளித்த பேட்டி வருமாறு:-

    இது தனிப்பட்ட நபர் யாரையும் குறிக்கும் கதை அல்ல. எனக்காக எழுதப்பட்ட கதை. பொதுவான ஒரு அரசியல் கட்சி பற்றிய கதை. நான் மட்டை சேகர் என்ற பெயரில் ஒரு ஏழைத் தகப்பனின் மகனாக வருகிறேன்.

    அரசியலே தெரியாமல் காதலித்துக் கொண்டு வெட்டியாக சுற்றிக்கொண்டிருக்கும் ஒருவன், ஒரு துரோகத்திற்கு பிறகு அரசியலுக்குள் நுழைந்து அரசியல்வாதியாகிறான் என்பதே படம். படத்தில் ஒரு தேசிய கட்சி, மாநில கட்சி இரண்டுக்குமான போட்டியாக இருக்கும்.



    சின்ன வயது முதலே எனக்கு அரசியல் ஆசை இருக்கிறது. அரசியலுக்கு வரும் எண்ணமும் உண்டு. அதற்கு அனுபவம் வேண்டும்.

    நியாயமான கோரிக்கைக்காக போராடினால் துப்பாக்கியால் சுடுகிறார்கள். அந்த ஆதங்கம் தான் அரசியலில் இறங்க காரணம். இங்கே வழிகாட்ட சரியான தலைவர் இல்லை. கேள்வி கேட்க கூட மறுக்கிறார்கள்.

    நான் ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன். தினகரனை ஆதரிப்பேன். இப்போது அவர் நன்றாக செயல்படுகிறார். பொதுமக்களில் ஒருவனாக கூறுகிறேன். அவர் பேசுவது எனக்கு பிடிக்கும். எல்லாவற்றையும் நேர்த்தியாக அணுகுகிறார்.

    “நீட்” தேர்வுக்காக லயோலா கல்லூரியில் நடந்த கூட்டத்தில் பேசினேன். பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். அடுத்த கட்டத்துக்கு செல்வதில்லை. ரஞ்சித் எடுக்கும் முயற்சிகள் நல்ல நோக்கத்தோடு இருக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார். #AnnanukkuJai #Dinesh

    ராஜ்குமார் இயக்கத்தில் தினேஷ் - மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் `அண்ணனுக்கு ஜே' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #AnnanukkuJai #Dinesh
    `அட்டகத்தி' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் தினேஷ். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான `உள்குத்து' படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், தினேஷ் நடிப்பில் அடுத்ததாக `அண்ணனுக்கு ஜே' என்ற படம் உருவாகி இருக்கிறது. 

    ராஜ்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தினேஷ் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில் தினேஷ் ஜோடியாக மகிமா நம்பியாரும், முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 
    கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கொரேலி இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை விஷ்ணு ரங்கசாமி கவனித்திருக்கிறார். விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. 

    தினேஷ் தற்போது `களவாணி மாப்பிள்ளை', `பல்லு படாம பாத்துக்கோ' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். #AnnanukkuJai #Dinesh #MahimaNambiar

    ×