search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Mayilswamy"

  ராஜ்குமார் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் அண்ணனுக்கு ஜே படத்தில் மகிமா நம்பியார் மேக்கப் இல்லாமல் தர லோக்கல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். #AnnanukkuJai #MahimaNambiar
  இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அண்ணனுக்கு ஜே. அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் டிரைய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

  நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ராஜ்குமார், “இப்படத்திற்குப் பக்கபலமாக இருந்த வெற்றிமாறனுக்கு நன்றி. நடிகர் தினேசுக்கு முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன். மகிமா மேக்கப் கூட போடாமல் நடித்திருந்தார்.

  மயில்சாமி மற்றும் வையாபுரி இருவரும் எப்போதும் நகைச்சுவை நடிகர்களாகப் பல படங்களில் நடித்து இருப்பார்கள். இந்தப் படத்தில் சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்” என்று கூறினார். மகிமா நம்பியார் பேசும்போது, தான் டப்பிங் பேசி நடித்ததைக் குறிப்பிட்டார். “வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குனரின் தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.  இந்தப் படத்தில் ‘தர லோக்கல்’ கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன்” என்று கூறினார். உள்ளூர் அரசியலை பேசி இருக்கிறோம். இந்த கதையை 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்குமார் கூறினார். ஆனால் இன்றுவரை அந்த கதை புதிதாகவே இருக்கிறது. காரணம் யாரும் அதிகம் தொடாத அரசியல் களம்’ என்றார். 

  அரோல் கரோலி இசை அமைக்க விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். ஜி.பி.வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். #AnnanukkuJai #MahimaNambiar

  “அண்ணனுக்கு ஜே” படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் தினேஷ், நான் ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன். தினகரனை ஆதரிப்பேன் என்று கூறினார். #AnnanukkuJai #Dinesh
  இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்துள்ள படம் “அண்ணனுக்கு ஜே”.

  அரசியலை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது ‘அட்டகத்தி’ தினேஷ் அளித்த பேட்டி வருமாறு:-

  இது தனிப்பட்ட நபர் யாரையும் குறிக்கும் கதை அல்ல. எனக்காக எழுதப்பட்ட கதை. பொதுவான ஒரு அரசியல் கட்சி பற்றிய கதை. நான் மட்டை சேகர் என்ற பெயரில் ஒரு ஏழைத் தகப்பனின் மகனாக வருகிறேன்.

  அரசியலே தெரியாமல் காதலித்துக் கொண்டு வெட்டியாக சுற்றிக்கொண்டிருக்கும் ஒருவன், ஒரு துரோகத்திற்கு பிறகு அரசியலுக்குள் நுழைந்து அரசியல்வாதியாகிறான் என்பதே படம். படத்தில் ஒரு தேசிய கட்சி, மாநில கட்சி இரண்டுக்குமான போட்டியாக இருக்கும்.  சின்ன வயது முதலே எனக்கு அரசியல் ஆசை இருக்கிறது. அரசியலுக்கு வரும் எண்ணமும் உண்டு. அதற்கு அனுபவம் வேண்டும்.

  நியாயமான கோரிக்கைக்காக போராடினால் துப்பாக்கியால் சுடுகிறார்கள். அந்த ஆதங்கம் தான் அரசியலில் இறங்க காரணம். இங்கே வழிகாட்ட சரியான தலைவர் இல்லை. கேள்வி கேட்க கூட மறுக்கிறார்கள்.

  நான் ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன். தினகரனை ஆதரிப்பேன். இப்போது அவர் நன்றாக செயல்படுகிறார். பொதுமக்களில் ஒருவனாக கூறுகிறேன். அவர் பேசுவது எனக்கு பிடிக்கும். எல்லாவற்றையும் நேர்த்தியாக அணுகுகிறார்.

  “நீட்” தேர்வுக்காக லயோலா கல்லூரியில் நடந்த கூட்டத்தில் பேசினேன். பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். அடுத்த கட்டத்துக்கு செல்வதில்லை. ரஞ்சித் எடுக்கும் முயற்சிகள் நல்ல நோக்கத்தோடு இருக்கின்றன.

  இவ்வாறு அவர் கூறினார். #AnnanukkuJai #Dinesh

  ராஜ்குமார் இயக்கத்தில் தினேஷ் - மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் `அண்ணனுக்கு ஜே' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #AnnanukkuJai #Dinesh
  `அட்டகத்தி' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் தினேஷ். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான `உள்குத்து' படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், தினேஷ் நடிப்பில் அடுத்ததாக `அண்ணனுக்கு ஜே' என்ற படம் உருவாகி இருக்கிறது. 

  ராஜ்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தினேஷ் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில் தினேஷ் ஜோடியாக மகிமா நம்பியாரும், முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 
  கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கொரேலி இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை விஷ்ணு ரங்கசாமி கவனித்திருக்கிறார். விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. 

  தினேஷ் தற்போது `களவாணி மாப்பிள்ளை', `பல்லு படாம பாத்துக்கோ' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். #AnnanukkuJai #Dinesh #MahimaNambiar

  ரஞ்சன் இயக்கத்தில் உருவாகி வரும் `மை டியர் லிசா' படத்தின் படப்பிடிப்பின் சண்டைக்காட்சியில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஜய் வசந்த்தின் கால் முறிந்தது. #MyDearLisa #VijayVasanth
  விஜய் வசந்த் - லீசா நடிப்பில் உருவாகி வரும் படம் `மை டியர் லிசா'. ரஞ்சன் கிருஷ்ண தேவன் இயக்கத்தில் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ரியாஸ் கான், சுவாமிநாதன், மயில்சாமி, பர்னிகா சந்தோக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

  இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், சண்டைக் காட்சியின் போது நடிகர் விஜய் வசந்த்தின் கால் முறிந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

  சண்டைக் காட்சியில், விஜய் வசந்த் ரவுடிகளுடன் மோதும் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக விஜய் வசந்த் கால் தவறி பள்ளத்தில் சிக்கியதால் அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் முறிந்தது. உடனடியாக ஊட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர், சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.   சென்னையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் 3 வாரம் வரை சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.  படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டு ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. #MyDearLisa #VijayVasanth

  ×