என் மலர்

  நீங்கள் தேடியது "Leesha"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீயோன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் - கருணாகரன் - அனு சித்தாரா, சுபிக்‌ஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `பொது நலன் கருதி' படத்தின் முன்னோட்டம். #PodhuNalanKaruthi #Karunakaran
  ஏ.வி.ஆர். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.ஆர்.அன்புவேல்ராஜன் தயாரித்துள்ள படம் `பொது நலன் கருதி'.

  கருணாகரன், சந்தோஷ் பிரதாப், அனு சித்தாரா, சுபிக்‌ஷா, லீசா, அருண்ஆதித், யோக்ஜாப்பி, இமான் அண்ணாச்சி, முத்துராம், சுப்பிரமணியபுரம் ராஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

  இசை - ஹரிகணேஷ், படத்தொகுப்பு - கிரேசன், கலை இயக்குநர் - கோபிஆனந்த், சண்டைப்பயிற்சி - ஓம்பிரகாஷ், தயாரிப்பு - ஏ.வி.ஆர். புரொடக்‌ஷன்ஸ், தயாரிப்பாளர் - வி.ஆர்.அன்புவேல்ராஜன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சீயோன்.  படம் பற்றி இயக்குநர் கூறும்போது,

  தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படமாக ‘பொது நலன் கருதி’ உருவாகி இருக்கிறது. 5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையை அலசியிருப்பதாக கூறினார். 

  படம் வருகிற பிப்ரவரி 8-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. #PodhuNalanKaruthi #Karunakaran #SanthoshPrathap

  பொது நலன் கருதி டிரைலர்:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஞ்சன் இயக்கத்தில் உருவாகி வரும் `மை டியர் லிசா' படத்தின் படப்பிடிப்பின் சண்டைக்காட்சியில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஜய் வசந்த்தின் கால் முறிந்தது. #MyDearLisa #VijayVasanth
  விஜய் வசந்த் - லீசா நடிப்பில் உருவாகி வரும் படம் `மை டியர் லிசா'. ரஞ்சன் கிருஷ்ண தேவன் இயக்கத்தில் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ரியாஸ் கான், சுவாமிநாதன், மயில்சாமி, பர்னிகா சந்தோக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

  இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், சண்டைக் காட்சியின் போது நடிகர் விஜய் வசந்த்தின் கால் முறிந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

  சண்டைக் காட்சியில், விஜய் வசந்த் ரவுடிகளுடன் மோதும் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக விஜய் வசந்த் கால் தவறி பள்ளத்தில் சிக்கியதால் அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் முறிந்தது. உடனடியாக ஊட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர், சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.   சென்னையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் 3 வாரம் வரை சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.  படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டு ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. #MyDearLisa #VijayVasanth

  ×