search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "My Dear Lisa"

    படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த விஜய் வசந்த், தற்போது காலில் ஸ்டீல் பிளேட் வைத்த பிறகு தான் நலமாக இருப்பதாக கூறியிருக்கிறார். #MyDearLisa #VijayVasanth
    விஜய் வசந்த் தற்போது `மை டியர் லிசா' என்ற படத்தில் நடித்து வருகிறார். ரஞ்சன் கிருஷ்ண தேவன் இயக்கத்தில் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ரியாஸ் கான், சுவாமிநாதன், மயில்சாமி, பர்னிகா சந்தோக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

    இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. விஜய் வசந்த் ரவுடிகளுடன் மோதும் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக விஜய் வசந்த் கால் தவறி பள்ளத்தில் சிக்கியதால் அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் முறிந்தது. உடனடியாக ஊட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர், சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். 

    தற்போது காலில் ஸ்டீல் பிளேட் வைத்த பிறகு தான் நலமாக இருப்பதாக விஜய் வசந்த் கூறியிருக்கிறார். மேலும் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.



    சென்னையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் 3 வாரம் வரை சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். #MyDearLisa #VijayVasanth
    ரஞ்சன் இயக்கத்தில் உருவாகி வரும் `மை டியர் லிசா' படத்தின் படப்பிடிப்பின் சண்டைக்காட்சியில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஜய் வசந்த்தின் கால் முறிந்தது. #MyDearLisa #VijayVasanth
    விஜய் வசந்த் - லீசா நடிப்பில் உருவாகி வரும் படம் `மை டியர் லிசா'. ரஞ்சன் கிருஷ்ண தேவன் இயக்கத்தில் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ரியாஸ் கான், சுவாமிநாதன், மயில்சாமி, பர்னிகா சந்தோக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

    இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், சண்டைக் காட்சியின் போது நடிகர் விஜய் வசந்த்தின் கால் முறிந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    சண்டைக் காட்சியில், விஜய் வசந்த் ரவுடிகளுடன் மோதும் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக விஜய் வசந்த் கால் தவறி பள்ளத்தில் சிக்கியதால் அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் முறிந்தது. உடனடியாக ஊட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர், சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். 



    சென்னையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் 3 வாரம் வரை சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.  படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டு ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. #MyDearLisa #VijayVasanth

    ×