திருப்பதி கோவிலில் கணவருடன் சாமி தரிசனம் செய்தார் நடிகை வரலட்சுமி

நடிகை வரலட்சுமியை கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.நான் திருப்பதிக்கு பலமுறை வந்துள்ளேன்.
திருப்பதி கோவிலில் கணவருடன் சாமி தரிசனம் செய்தார் நடிகை வரலட்சுமி
Published on

நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். 'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமான இவரது நடிப்பில் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவை.

தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து உள்ளார். இவர் தற்போது விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளார்.

இதனிடையே, மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிலையில், தனது கணவருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை வரலட்சுமி சாமி தரிசனம் செய்துள்ளார். இன்று அதிகாலை நடைபெற்ற சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்தனர். கணவருடன் வந்த நடிகை வரலட்சுமியை கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து பேசிய நடிகை வரலட்சுமி, ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. நான் திருப்பதிக்கு பலமுறை வந்துள்ளேன். என் கணவருக்கு இதுதான் முதல்முறை. எங்களுடைய முதல் வருட திருமண நாள் வரப்போகிறது. அதற்காக வந்தோம். சாமி தரிசனம் செய்தது ரொம்ப நிம்மதியா, மன அமைதியா இருந்தது என்றார்.

முன்னதாக, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடிகை வரலட்சுமி தனது கணவருடன் ராகு-கேது பூஜை செய்து வழிபாடு செய்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com