வரலக்‌ஷ்மி சரத்குமார் படத்தின் புதிய அப்டேட்

அனில் கட்ஸ் இயக்கி வரும் 'சபரி' படத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் முக்கிய ஷெட்யூல் கொடைக்கானலில் வரலக்‌ஷ்மி சரத்குமார் நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலக்‌ஷ்மி சரத்குமார்
வரலக்‌ஷ்மி சரத்குமார்
Published on

இயக்குனர் அனில் கட்ஸ் இயக்கி வரும் 'சபரி' படத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் கணேஷ் வெங்கட்ராமன், ஷாஷங்க், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது. இப்படத்தை 'மஹா மூவிஸ்' பேனரில் மகேந்திர நாத் கொண்டலா தயாரிப்பில், மகரிஷி கொண்டலா வழங்குகிறார்.

வரலக்‌ஷ்மி சரத்குமார்
வரலக்‌ஷ்மி சரத்குமார்

வரலக்‌ஷ்மி சரத்குமார்

இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று, படத்தின் முக்கிய கட்டத்தை சமீபத்தில் படக்குழு முடித்துள்ளது. இதன் முக்கிய காட்சிகள் இரண்டு வாரங்களாக கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த கொடைக்கானல் படப்பிடிப்பில் வரலக்‌ஷ்மி மற்றும் படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய நடிகர்கள் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

வரலக்‌ஷ்மி சரத்குமார்
வரலக்‌ஷ்மி சரத்குமார்

வரலக்‌ஷ்மி சரத்குமார்

இப்படம் குறித்து இயக்குனர் அனில் கட்ஸ் கூறியதாவது, "படம் சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகையில் பரபரப்பான திருப்பங்களை கொண்டது. இதில் நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் பல கட்டங்களை உள்ளடக்கிய எமோஷனலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்னால் இது போன்ற வேடத்தில் அவர் நடித்ததில்லை. படத்தின் ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டும் சிறந்த வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு த்ரில்லிங்கான அனுபவத்தை தரும்" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com