என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா தரிசனம்
    X

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா தரிசனம்

    • ஸ்ரேயா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
    • ரெட்ரோ படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ரேயா நடனமாடி இருந்தார்.

    நடிகை ஸ்ரேயா தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், என பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

    திருமணத்திற்கு பின்பு திரைப்படங்களில் நடிப்பதை ஸ்ரேயா குறைத்து கொண்டார். இந்நிலையில், அண்மையில் வெளியான ரெட்ரோ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி மீண்டும் தமிழ் திரையுலகில் அவர் அடியெடுத்து வைத்துள்ளார்.

    இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    Next Story
    ×