என் மலர்

  நீங்கள் தேடியது "Arvind Swamy"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகை ராதிகா தயாரிக்கும் புதிய படத்தில் அரவிந்த்சாமியும் சிம்புவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #ArvindSwamy #STR #Simbu #Radhika
  அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என்று முக்கியமான நபர்களின் பயோபிக் படங்களுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தமிழில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்க சில இயக்குனர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

  ஜெயலலிதா வாழ்க்கை படத்தை தொடர்ந்து எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. ராதிகா சரத்குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். எம்.ஆர்.ராதாவின் பேரனான ஐக் இயக்குகிறார்.  இவர் ஏற்கனவே ஜீவா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை இயக்கி உள்ளார். எம்.ஜி.ஆர் வேடத்துக்கு அரவிந்த்சாமியிடமும் எம்.ஆர்.ராதாவாக நடிக்க சிம்புவிடமும் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வருகிறது.

  எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் மோதல் ஏற்பட்டதும் எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவமும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள். இந்த சம்பவங்கள் படத்தில் முக்கிய காட்சிகளாக இடம்பெறும் என்று தெரிகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரெஜினா, தன்னுடன் நடித்த நடிகர் பற்றி கூறியிருக்கிறார். #Regina #ReginaCassandra
  சதுரங்க வேட்டை -2’, ‘நரகாசூரன்’, ‘வணங்காமுடி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘கள்ளபார்ட்’ படத்தில் நடிக்கத் தொடங்கினார் அரவிந்த்சாமி. சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராஜபாண்டி இயக்கி வரும் இப்படத்தில் ரெஜினா நாயகியாக நடித்து வருகிறார்.

  இதில் அரவிந்த்சாமி ஹார்ட்வேர் என்ஜினீயராகவும், ரெஜினா நடன ஆசிரியையாகவும் நடித்து வருகிறார்கள். இதில் பார்த்தி என்ற புதுமுக நடிகரை வில்லனாக அறிமுகப்படுத்துகிறார்கள். ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.  அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்து வருகிறார். இதுவரை 75 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஏப்ரல் மாதம் இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.

  தனது வேடம் பற்றி ரெஜினா கூறும்போது ‘இது எனக்கு மிகவும் பிடித்த வேடம். எனது வேடத்துக்கு படத்தின் கதையில் நிறைய முக்கியத்துவம் உள்ளது. அரவிந்தசாமியுடன் நடித்ததில் மகிழ்ச்சி’ என்று கூறி இருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி - ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகி வரும் கள்ளபார்ட் படத்தை ஏப்ரலில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். #Kallapart #ArvindSwamy
  மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி, எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் `கள்ளபார்ட்'. அரந்த்சாமி - ரெஜினா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

  ஆக்‌ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை ராஜபாண்டி இயக்கி வருகிறார். படம் பற்றி இயக்குநர் கூறும்போது,   அரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பித்து விடக் கூடியவர். இதில் அதிபன் என்கிற ஹார்ட்வேர் கதாபாத்திரம். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள்வாங்கி பிரதிபலிப்பார். அது திரையில் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தும்படி இருக்கிறது. ரெஜினா டான்ஸ் டீச்சர் வேடம் ஏற்றிருக்கிறார். படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர உள்ளோம் என்றார்.

  அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். #Kallapart #ArvindSwamy #ReginaCassandra

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செக்கச் சிவந்த வானம் படத்தை இயக்கி வெளியிட்டிருக்கும் இயக்குனர் மணிரத்னத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். #CCV #Maniratnam
  மணிரத்னம் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  இப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், சென்னை அபிராமபுரத்தில் உள்ள இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

  தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலில், செக்கச் சிவந்த வானம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. #CCV
  மணிரத்னம் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘செக்கச்சிவந்த வானம்‘.

  தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்ததாலும் மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட நாள் கழித்து வரும் ஆக்‌‌ஷன் படம் என்பதாலும் படத்துக்கு எதிர்பார்ப்பு உண்டானது. படத்துக்கு அனைத்து தரப்பில் இருந்தும் நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால் 3 நாட்களாக திரையரங்குகள் நிரம்பி வருகின்றன. 

  ‘செக்கச்சிவந்த வானம்’ படம் முதல் நாளே 8.05 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இதனால் படக்குழு மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. படத்தின் வெற்றி தொடர்வதால் அடுத்தடுத்து வருவதற்கு திட்டமிட்டிருந்த படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அருண் விஜய், விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ், டயானா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் விமர்சனம். #CCV
  சென்னையை கலக்கும் மிகப்பெரிய தாதா பிரகாஷ் ராஜ். இவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் அரவிந்த் சாமி, பிரகாஷுடன் இருக்கிறார். இரண்டாவது மகன் அருண் விஜய் துபாயில் தொழில் செய்து வருகிறார். மூன்றாவது மகன் சிம்புவும் வெளிநாட்டில் இருக்கிறார்.

  பிரகாஷ் ராஜ்க்கும், மற்றொரு தாதாவான தியாகராஜனுக்கும் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பிரகாஷ் ராஜ் காரில் செல்லும் போது, வெடிகுண்டு விபத்தில் சிக்குகிறார். இதில் உயிர் பிழைத்து தீவிர சிகிச்சை பிரிவில் பிரகாஷ் அனுமதிக்கப்படுகிறார்.  இதையறிந்த அருண் விஜய்யும், சிம்புவும் வெளிநாட்டில் இருந்து வருகிறார்கள். மகன்கள் மூன்று பேரும், அப்பாவின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று விசாரிக்கிறார்கள். சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பும் பிரகாஷ் ராஜ், நெஞ்சுவலியால் உயிரிழக்கிறார். 

  அதன்பிறகு அவருடைய இடத்திற்கு யார் வருவது? என்று மகன்கள் மூன்று பேருக்கும் சண்டை ஏற்படுகிறது. இந்த பதவிச் சண்டையில் வெற்றி பெற்றது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.  படத்தில் மூத்த மகனாக நடித்திருக்கும் அரவிந்த் சாமி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தந்தையுடனே பயணிக்கும் இவர், நான் தான் அடுத்த தாதாவிற்கு தகுதியானவன் என்று கம்பீரத்துடன் நடித்திருக்கிறார். இரண்டாவது மகனான அருண் விஜய், துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மூன்றாவது மகன் சிம்பு, இளமை துள்ளலுடன் நடித்து அசத்தியிருக்கிறார். அரவிந்த் சாமியின் நண்பராகவும், போலீஸ் அதிகாரியாகவும் மிரட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. எல்லாவற்றிற்கும் மேலாக தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். 

  அரவிந்த்சாமியின் மனைவியாக வரும் ஜோதிகா, ரிப்போர்ட்டராக வரும் அதிதிராவ், அருண் விஜய்யின் மனைவியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்புவின் காதலியாக வரும் டயானா எரப்பா ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.   தாதாவான தந்தை இறந்த பிறகு, அந்த இடத்தை பிடிக்க நினைக்கும் மூன்று மகன்களின் போட்டா போட்டியை மையமாக வைத்து, தன்னுடைய பாணியில் திரைக்கதை அமைத்து சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். வழக்கமான கதை என்றாலும், அதை ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப வழங்கியிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக கையாண்டு,  கச்சிதமாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு பவர்புல்லான கேங்ஸ்டர் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.

  ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது திரையில் பார்க்கும் போது மிகவும் புத்துணர்ச்சியோடு இருக்கிறது. பின்னணி இசையை வேற லெவலில் கொடுத்திருக்கிறார். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

  மொத்தத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ செம வெயிட்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சதுரங்க வேட்டை 2 படத்தில் நடித்ததற்கு அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி இருப்பது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், பிரச்சனையை பேசி தீர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #SathurangaVettai2 #ArvindSwami
  நடிகர் மனோபாலா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்க `சதுரங்க வேட்டை 2' என்ற படம் உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அரவிந்த் சாமி தனது சம்பளபாக்கியான 1.79 கோடியை வட்டியுடன் அளிக்க வேண்டும் என்று மனோ பாலா மீது ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

  நீதிபதி எம்.சுந்தர் இந்த வழக்கை விசாரித்து மனோ பாலா பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மனோபாலா பதில் மனுவில் அரவிந்த்சாமியுடன் சமரசமாக செல்லத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

  ஐகோர்ட்டுக்கு தகவல் சொல்லாமல் தான் `சதுரங்க வேட்டை 2' படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேன் என்றும் முதல் தவணையாக 25 லட்சம் ரூபாய் தரத் தயாராக இருப்பதாகவும் உறுதியாக கூறி இருந்தார்.  இந்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு மனோபாலா, அரவிந்த்சாமி இரு தரப்பினரும் அக்டோபர் 12-ந் தேதி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. #SathurangaVettai2 #ArvindSwami

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி - ரெஜினா இணைந்து நடிக்கும் கள்ளபார்ட் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #Kallapart #ArvindSwamy
  விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தை தயாரித்த மூவிங் பிரேம் நிறுவனம் அடுத்ததாக அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் `கள்ளபார்ட்' படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

  `என்னமோ நடக்குது', `அச்சமின்றி' படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். படத்தில் இடம்பெறும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 

  நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்திற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைக்கப்பட்டு இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து முப்பது நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.  இன்று நடைபெற்ற படத்தின் பூஜையில் பா.ரங்கநாதன் எம்.எல்.ஏ, தொழிலதிபர்கள் எஸ்.செல்வம், சிவசங்கர், பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், இயக்குனர்கள் விஜய் சந்தர், ஜெயபிரகாஷ், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, குட்டிபத்மினி ஆகியோர் கலந்து கொண்டனர். #Kallapart #ArvindSwamy #ReginaCassandra

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  `சதுரங்க வேட்டை-2' படத்தில் நடித்ததற்கான சம்பள பாக்கி ரூ. 1.79 கோடியை பெற்றுத் தரக்கோரி நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்து வழக்கு விசாரணையில் மனோபாலாவுக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #SathurangaVettai2 #ArvindSwamy
  நடிகரும் இயக்குனருமான மனோபாலா தயாரிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் `சதுரங்க வேட்டை'.

  இதன் 2-ம் பாகமான சதுரங்க வேட்டை-2 படத்தை மனோபாலா தயாரிக்க அரவிந்த்சாமி, திரிஷா நடித்தனர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வெளியீட்டுக்கு முயற்சி செய்து வருகிறார்கள்.

  இதற்கிடையே அரவிந்த்சாமி தனது சம்பள பாக்கியான 1.79 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் மனோ பாலா மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.  இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், அரவிந்தசாமி தரப்பிடம் பட வெளியீட்டுக்கு தடை கேட்காத பட்சத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அரவிந்த்சாமி தரப்பில் பட வெளியீட்டை தடுப்பது எங்களது நோக்கம் அல்ல என்றும் சம்பள பாக்கி வந்துசேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

  அரவிந்த்சாமி தரப்பு வாதத்தை கேட்ட ஐகோர்ட்டு வழக்கை செப்டம்பர் 20-ந் தேதிக்கு தள்ளி வைத்தது. அன்று மனோபாலா தரப்பு அளிக்கும் பதிலை வைத்து அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி கிடைக்குமா? என்று தெரிய வரும். #SathurangaVettai2 #ArvindSwamy

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செக்கச் சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் ஜெயலலிதா ரசித்துக் கேட்ட பாடல் பற்றி பேசியிருக்கிறார். #CCV #ChekkaChivanthaVaanam
  மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டு படத்தை பற்றியும், படக்குழுவினர் பற்றியும் பேசினார்கள்.  பின்னர் வைரமுத்து பேசும்போது, ‘மணிரத்னம் இயக்கத்தில் எனது பாடல் வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்களில் எனக்கு பிடித்தது ‘பம்பாய்’ படத்தில் இடம் பெற்ற ‘கண்ணாலனே...’ என்ற பாடல்தான். இந்த பாடல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவிற்கு வந்து, ரசித்து கேட்ட பாடல் என்று கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செக்கச் சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் சிம்பு, மேடையில் பேசாமல் ஓடிவிட்டார். #CCV #ChekkaChivanthaVaanam #STR
  மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் பாடி காண்பித்தார். 

  அதன்பின் அரவிந்த்சாமி, அருண்விஜய், அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் படத்தை பற்றியும், படக்குழுவினர் பற்றியும், மணிரத்னம் பற்றியும் பேசினார்கள்.  பின்னர் மேடையேறிய சிம்பு, ‘நான் இங்கு வந்ததற்கு காரணம் ஒரு விஷயம் சொல்ல வந்தேன். அது என்னவென்றால் மணிரத்னம் அவர்களுக்கு நன்றி. நான் பேசுவேன். நிறைய பேசுவேன். ஆனால், இப்போ பேசமாட்டேன். இந்த படம் பேசும். அதன்பின் நான் பேசுவேன் என்று மேடையில் பேசாமல் ஓடிவிட்டார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print