கார்த்தியின் மெய்யழகன் படத்தை ஆகஸ்ட் 15-ல் வெளியிட படக்குழு திட்டம்

இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
கார்த்தியின் மெய்யழகன் படத்தை ஆகஸ்ட் 15-ல் வெளியிட படக்குழு திட்டம்
Published on

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குநர் பிரேம் குமார். தமிழ் சினிமாவில் தெய்வீக காதல் கதையை கூறிய திரைப்படங்களில் 96 திரைப்படம் முக்கியமானவை.

அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படம் படத்தை பிரேம் குமார் இயக்கி வருகிறார்.

'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர்கள் வரவேற்பை பெற்றநிலையில், இப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com