அடுத்தடுத்து அப்டேட்டுகளை வெளியிட்ட 'மெய்யழகன்' படக்குழு

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார்.கார்த்தி 27 படத்தின் பூஜை வீடியோவை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக அறிவித்தது.
அடுத்தடுத்து அப்டேட்டுகளை வெளியிட்ட 'மெய்யழகன்' படக்குழு
Published on

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார். தமிழ் சினிமாவில் தெய்வீக காதல் கதையை கூறிய திரைப்படங்களில் 96 திரைப்படம் முக்கியமானவை.

அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்குகிறார். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கார்த்தி 27 படத்தின் பூஜை வீடியோவை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக அறிவித்தது.

படத்தின் அடுத்த அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. படத்திற்கு மெய்யழகன் என பெயரிட்டுள்ளனர். படத்தின் முதல் போஸ்டரை சில மணிநேரங்களுக்கு முன் வெளியிட்ட நிலையில், தற்பொழுது படத்தின் அடுத்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இப்போஸ்டரில் கார்த்தி காளை மாட்டை பார்த்து சிரிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இப்போஸ்டர் 1980 களில் வெளியிடப்பட்ட திரைப்படங்களின் போஸ்டரை போல் கருப்பு வெள்ளையில் காட்சி அளிக்கிறது. இப்போஸ்டரை கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com