என் மலர்
சினிமா

பிறந்தநாளில் புகை பிடிக்கும் காட்சியை வெளியிட்ட ஸ்ரேயா
ஸ்ரேயா தற்போது தெலுங்கில் நடித்து வரும் ‘வீர போக வசந்த ராயலு’ வீடியோவில் அவரது பிறந்தறாளில் வெளியாகிய நிலையில், அதில் ஸ்ரோயா புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. #ShriyaSaran
நடிகை ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படம் மூலம் அறிமுகமானார். விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், விஷாலுடன் தோரணை, விக்ரமுடன் கந்தசாமி, தனுசுடன் திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, உத்தமபுத்திரன், ஆர்யாவுடன் சிக்குபுக்கு, ஜீவாவுடன் ரெளத்திரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தும் 2011-க்குப் பிறகு வாய்ப்புகள் குறைந்தன. அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்த நரகாசூரன் வெளியாக இருக்கிறது.

நேற்று முன் தினம் ஸ்ரேயாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் தெலுங்கில் நடித்து வரும் ‘வீர போக வசந்த ராயலு’ என்ற படத்தின் சிறிய காட்சி வெளியாகி உள்ளது. அதில் ஸ்ரேயா புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. #ShriyaSaran
Next Story






