என் மலர்
சினிமா

ஹன்சிகாவுடன் இணையும் வரலட்சுமி
முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வரலட்சுமி அடுத்ததாக தெலுங்கில் ஒரு படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். #Varalakshmi #Haniska
தமிழ் சினிமாவில் தற்போது அதிகமான படங்களில் நடிப்பது வரலட்சுமி தான். கதாநாயகியாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார்.
தான் நடிக்கும் படங்களில் வேறு கதாநாயகிகள் இருந்தாலும் கவலைப்படாமல் நடிக்கிறார். சர்கார், சண்டக்கோழி 2, மாரி 2 என்று அந்த வரிசையில் நீயா 2, காட்டேரி படங்களிலும் 2 ஆம் கதாநாயகியாக நடிக்கிறார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வெல்வெட் நகரம், சக்தி, ராஜபார்வை, டேனி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கன்னிராசி அடுத்ததாக ரிலீசாக இருக்கிறது.

இந்த நிலையில், தெலுங்கிலும் வரலட்சுமிக்கு வாய்ப்புகள் வருகின்றன. தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.,பிஎல் என்ற தெலுங்கு படத்தில், சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளார். அதில், வரலட்சுமியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கப்போகிறார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கவும் வரலட்சுமி திட்டமிட்டு உள்ளார். #Varalakshmi #Haniska
Next Story






