ஜூன் 13 வருகிறான் அடங்காத அசுரன்

திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.படத்தின் முதல் பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது அப்பாடலிற்கு 'அடங்காத அசுரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஜூன் 13 வருகிறான் அடங்காத அசுரன்
Published on

திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது. படத்தின் போஸ்டரை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட்டனர்.

படத்தின் முதல் பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது அப்பாடலிற்கு 'அடங்காத அசுரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அப்டேட்டை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படம் எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com