தணிக்கை குழு ராயன் படத்திற்கு A சான்றிதழ் வழங்கியது

நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
தணிக்கை குழு ராயன் படத்திற்கு A சான்றிதழ் வழங்கியது
Published on

நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. மேலும் கடந்த மே 9 ஆம் தேதி இப்படத்தில் ஏர்.ஆர் ரகுமான் இசையில் தனுஷ் பாடிய 'அடங்காத அசுரன்' என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது.

இந்நிலையில், கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர். இதனால் 18 வயதிற்கு மேற்ப்பட்டோர் மட்டுமே பார்க்கும் விதமாக திரைப்படம் அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. திரைப்படம் 2 மணிநேரம் 25 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்கிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com