என் மலர்
நீங்கள் தேடியது "vinil scariah varghese"
- காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அவள் பெயர் ரஜ்னி’.
- இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அவள் பெயர் ரஜ்னி'. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

அவள் பெயர் ரஜ்னி
நவரசா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு 4 மியூசிக்ஸ் இசையமைக்கின்றனர். ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இன்வெஸ்டிகேசன் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

அவள் பெயர் ரஜ்னி
இந்நிலையில், 'அவள் பெயர் ரஜ்னி' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஒரு பரபரப்பான விசாரணை, அதன் பின்னால் அவிழும் பல முடிச்சுகள் என எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதத்தில் உருவாகியுள்ள இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அவள் பெயர் ரஜ்னி'.
- இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ளது.
நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அவள் பெயர் ரஜ்னி'. இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நவரசா ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு 4 மியூசிக்ஸ் இசையமைத்துள்ளனர். ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் கலந்து கொள்ள நடைபெற்றது. இவ்விழாவினில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

இவ்விழாவில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் பேசியதாவது, விஜய் சார் சொன்ன வாழ்க்கை ஒரு வட்டம் டயலாக் தான் ஞாபகம் வருகிறது. இதே இடத்தில் கமல் சார் என் கைபிடித்து, 10 வருடத்திற்கு முன் நடிகனாக என்னை அறிமுகப்படுத்தினார். இப்போது எனக்குப் பிடித்த இயக்குனர், எனக்கு விக்ரம் தந்த லோகேஷ் இங்கு வந்து இந்தப்படத்தை பெரிய படமாக்கியிருக்கிறார் நன்றி. தயாரிப்பாளர் காத்திருந்து, இப்படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. வித்தியாசம் என்று சொன்னாலே எல்லோரும் சொல்வது போல் ஆகிவிடும் ஆனால் உண்மையிலேயே இந்த படம் நான் இதுவரை செய்யாத ரோலில் மிக வித்தியாசமானதாக இருக்கும். பார்த்துவிட்டு சொல்லுங்கள் நன்றி என்று பேசினார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது, இன்று நான் செய்வது பெரிய படமாக இருக்கலாம் ஆனால் மாநகரம் செய்யும் போது சின்ன படமாக தான் இருந்தது. சின்ன படம் நன்றாக இருந்தால் பத்திரிக்கையாளர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். சினிமாவில் எதைப்பற்றி பேச வேண்டும் என்றாலும், ஒரு போன் காலில், ஆபிஸ் வந்து விடுவார் காளிதாஸ். சினிமா மீது அவருக்கு மிகப்பெரிய காதல் இருக்கிறது. அவருக்காக என் அசிஸ்டெண்ட்கள் நிறைய கதை எழுதி வருகிறார்கள். அவர் மிகச் சிறந்த நடிகர். இந்த படம் டிரைலரே ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. படமும் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று பேசினார்.






