அர்ஜூன் தாஸ், காளிதாஸ் நடிக்கும் "போர்"- 2வது பாடலின் வீடியோ வெளியீடு

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
அர்ஜூன் தாஸ், காளிதாஸ் நடிக்கும் "போர்"- 2வது பாடலின் வீடியோ வெளியீடு
Published on

இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கி விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் "போர்" திரைப்படத்தின் 2வது பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

தமிழில் டேவிட், சோலோ உள்ளிட்ட திரைப்படங்கள், நவரசா, ஸ்வீட் காரம் காபி போன்ற பிரபல வெப் சீரீஸ்களை இயக்கியவர் இயக்குனர் பிஜோய் நம்பியார்.

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். 

தமிழ் மாட்டு இல்லாமல், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், தமிழ் மற்றும் இந்தியில் உருவாகி இருக்கும் "போர்" படம் வரும் மார்ச் 1ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தியில் "டாங்கே" என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தில் தமிழில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர்

இந்த படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், போர் படத்தின் 2வது பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. "நண்பகல் நேரம்" என்ற இந்த பாடல் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com