என் மலர்
நீங்கள் தேடியது "அமலாக்கத்துறை"
- பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கி அமலாக்கத்துறை சீல்.
- அடுத்தகட்ட விசாரணைக்கு விரைவில் சம்மன் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அனில் அம்பானியின் ரூ.3,716 கோடி மதிப்பிலான மும்பை இல்லத்தை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கி அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது.
Yes Bank தொடர்பான பணமோசடி வழக்கில் இதோடு சேர்த்து ரூ.15,700 கோடி மதிப்பிலான சொத்துக்களை ED முடக்கியுள்ளது. அடுத்தகட்ட விசாரணைக்கு விரைவில் சம்மன் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- அமைச்சர் மீதான புகார்கள் குறித்து முதற்கட்ட விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
- அமைச்சர் கே.என்.நேரு மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக நகராட்சி அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகார்கள் குறித்து அமலாக்கத்துறை விரிவான விசாரணையை மேற்கொண்டிருந்தது. இந்த விசாரணையின் அடிப்படையில், உரிய ஆதாரங்களுடன் வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத்துறை 2 முறை கடிதம் எழுதி இருந்தது. இருப்பினும், மாநில லஞ்ச ஒழிப்புத்துறை இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் ஜே.எஸ். இன்பதுரை கடந்த மாதம் 7-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், அமலாக்கத்துறை வழங்கிய வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணையை முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அமைச்சர் மீதான புகார்கள் குறித்து முதற்கட்ட விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
இருப்பினும், அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆதாரங்கள் தீவிரமானவை என்பதால், அதன் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது.
- நெய் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்ட பொருள், ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்ட பாமாயில் மற்றும் இதர பொருட்கள் என்று சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்தது.
- குற்றப் பத்திரிகையில், 9 தேவஸ்தான அதிகாரிகள், 5 பால்வள நிபுணர்கள் உள்பட 36 பேர் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.
ஆந்திராவில் முன்பு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க வினியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பகிரங்க குற்றம் சாட்டினார். இதனால் உலகம் முழுவதும் பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது.
முந்தைய ஆட்சிக்காலத்தில் சுமார் ரூ.250 கோடி மதிப்புள்ள 60 லட்சம் கிலோ கலப்பட நெய் தேவஸ்தானத்துக்கு வினியோகிக்கப்பட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு கூறினார்.
இவ்விவகாரம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. நெய் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்ட பொருள், ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்ட பாமாயில் மற்றும் இதர பொருட்கள் என்று சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்தது.
இதுதொடர்பாக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், 9 தேவஸ்தான அதிகாரிகள், 5 பால்வள நிபுணர்கள் உள்பட 36 பேர் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.
இந்நிலையில், அமலாக்கத்துறையும் தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளது. திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்தும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டவிரோதமாக திரட்டிய பணம் குறித்தும் விசாரிக்க இந்த வழக்கை பதிவு செய்துள்ளது.
இந்த விசாரணைக்காக சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கு, ஆவணங்கள் மற்றும் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹவாலா பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் விசாரணை நடத்தவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
- சபரிமலையில் இருந்து கொண்டு சென்ற தங்க கவசங்களை வைத்து வழிபாடு செய்யததாகவும் புகார் எழுந்தது.
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில், உன்னிகிருஷ்ணன் போற்றி, தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு உள்பட 12 பேரை சிறப்பு விசாரணை குழுவினர் அடுத்தடுத்து கைது செய்தனர். இந்த வழக்கு குறித்து கொச்சி அமலாக்கத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முராரி பாபுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு மலையாள பிரபல நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும் உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் விசாரணை நடத்தவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவர் சமீபத்தில் ஜாமின் பெற்று திருவனந்தபுரம் சிறையில் இருந்து வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.
உன்னிகிருஷ்ணன் போற்றி மீது துவார பாலகர் சிலைகள் மற்றும் சபரிமலை சன்னதி படிகளில் இருந்து தங்கத்தை பிரித்து எடுத்து கொள்ளையடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. அத்துடன் கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான கோவர்தன் மற்றும் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி ஆகியோருடன் இணைந்து இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் உன்னிகிருஷ்ணன் போற்றி, சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் பூஜைகளை செய்ததாகவும், அங்கு சபரிமலையில் இருந்து கொண்டு சென்ற தங்க கவசங்களை வைத்து வழிபாடு செய்யததாகவும் புகார் எழுந்தது.
இந்த சம்பவத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஏற்கனவே நடிகர் ஜெயராம் தெரிவித்து இருந்தார். சமீபத்தில் அவரிடம் சென்னையில் உள்ள வீட்டில் வைத்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி இருந்தனர். தற்போது விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இதன் மூலம் வருகிற நாட்களில் நடிகர் ஜெயராம் கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளதாக தெரிகிறது.
- கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதி சூர்யகாந்த் இடம் நேருக்கு பேர் மம்தா பானர்ஜி இந்த வேண்டுகோளை விடுத்தார்.
- நீதித்துறை மட்டுமே எங்களின் கடைசி நம்பிக்கை, எனவே அரசியலமைப்பைப் பாதுகாக்க நீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும்
மத்திய அரசு அமைப்புகளிடம் இருந்து சாதாரண மக்களையும், நாட்டின் அரசியலமைப்பையும் பாதுகாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் இடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதி சூர்யகாந்த் இடம் நேருக்கு பேர் மம்தா பானர்ஜி இந்த வேண்டுகோளை விடுத்தார்.
மேடையில் பேசிய அவர், "மத்திய ஏஜென்சிகள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை ஜனநாயகத்தைச் சீர்குலைக்கின்றன.
அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளின் தேவையற்ற தலையீடுகளில் இருந்து சாதாரண மக்களையும், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் தயவுசெய்து காப்பாற்றுங்கள்.
நீதித்துறை மட்டுமே எங்களின் கடைசி நம்பிக்கை, எனவே அரசியலமைப்பைப் பாதுகாக்க நீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும்." என்று தெரிவித்தார்.
சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள ஐ-பாக் தேர்தல் வியூக அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது, மம்தா பானர்ஜி நேரில் சென்று அந்தச் சோதனையைத் தடுத்ததாக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் மம்தா பானர்ஜி மற்றும் டிஜிபி ராஜீவ் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- கடந்த வாரம் ஐ-பேக் (I-PAC) நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
- மேற்கு வங்க அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் 'கேவியட்' மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குநர் ராஜீவ் குமாரை பணியிடை நீக்கம் செய்யக் கோரி அமலாக்கத்துறை, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், விசாரணை முகமைக்கு மேற்கு வங்க காவல்துறையின் மூத்த அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்றும், அவர்கள் தவறாக நடந்துகொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அவர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமலாக்கத்துறை கோரியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தை அமலாக்கத்துறை வலியுறுத்தியுள்ளது.
கடந்த வாரம் தேர்தல் உத்தி வகுப்பாளரான ஐ-பேக் (I-PAC) நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இச்சோதனையின் நடுவே மம்தா பானர்ஜி வந்து, விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும், சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிறரின் பங்கு குறித்து சிபிஐ விசாரணை கோரி அமலாக்கத்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. அங்கு உடனடி நிவாரணம் கிடைக்காததைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
கடந்த வாரம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற அறையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால், நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரிக்கும்.
ஐ-பேக் (I-PAC) மீது நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைகள் தொடர்பாக, தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என்று கோரி மேற்கு வங்க அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் 'கேவியட்' மனுவைத் தாக்கல் செய்துள்ளது.






