என் மலர்
நீங்கள் தேடியது "Anil Ambani"
- 2010 மற்றும் 2012 க்கு இடையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் தொடர்புடைய துணை நிறுவனங்கள் மீது குற்றச்ட்டு எழுந்தது.
- பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட இந்திய வங்கிகளில் இருந்து கடன் பெற்று நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கடன் மோசடி வழக்கு மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
நவம்பர் 14 ஆம் தேதி அவர் முன்பு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அறிவுறுத்தி உள்ளது.
2010 மற்றும் 2012 க்கு இடையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் தொடர்புடைய துணை நிறுவனங்கள் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட இந்திய வங்கிகளில் இருந்து கடன் பெற்று நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுகுறித்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் 2025 இல் அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
- அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது
- அசோக் குமார் பால் என்பவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர்.
சமீபத்தில் 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியின் மும்பை வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பணமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் பாலை அமலாக்கத்துறை கைது செய்தது. பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் அசோக் குமார் பால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசோக் பால், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் இருந்து நிதியைத் திசைதிருப்புவதிலும், பொதுத் துறை நிறுவனமான SECI- (Solar Energy Corporation of India) சிக்கவைக்க முக்கியப் பங்காற்றியதாக ED குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அசோக் பாலுக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வரும் திங்கள்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக அனில் அம்பானியிடம் விசாரணை நடைபெற்றது.
- மும்பையில் உள்ள வீட்டில் இன்று காலை முதல் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சமீபத்தில் 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், அனில் அம்பானியின் மும்பை வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு நிறைவு பெற்றது.
இதனிடையே, ரூ.2,929 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக கூறும் SBI வங்கி குற்றச்சாட்டுகளுக்கு அம்பானி மறுப்பு தெரிவித்துள்ளார்.
- 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியிடம் விசாரணை நடைபெற்றது.
- மும்பையில் உள்ள வீட்டில் இன்று காலை முதல் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை.
தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் உள்ள வீட்டில் இன்று காலை முதல் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அம்பானியும் அவரது குடும்பத்தினர் அனைவரும் உள்ளனர்.
- அனில் அம்பானிக்கு சொந்தமான அலுவலகங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது.
- அனில் அம்பானிக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியது.
ஜூலை 24 ஆம் தேதி, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு சொந்தமான மொத்தம் 50 நிறுவனங்கள், 25 வணிக கூட்டாளர்களின் வீடுகள் மற்றும் அம்பானி குழும நிறுவனங்களின் நிர்வாகிகளின் 35 க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் அமலாக்க இயக்குநரகம் திடீர் சோதனைகளை நடத்தியது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இந்த மூன்று நாள் சோதனைகளின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ரூ.17,000 கோடி மதிப்புள்ள கடன் மோசடி தொடர்பான வழக்கில் அனில் அம்பானிக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், இது தொடர்பான விசாரணைக்காக அனில் அம்பானி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜரானார்.
அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசா ரணை நடத்தினார்கள். 66 வயதான தொழில் அதிபர். அனில் அம்பானி மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் வாக்குமூலத்தை பதிவு செய்வார்கள்.
- ரூ.17,000 கோடி மதிப்புள்ள கடன் மோசடி தொடர்பான வழக்கில் அனுப்பப்பட்டது.
- பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் மூன்று நாள் சோதனை நடத்தப்பட்டது.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது. ரூ.17,000 கோடி மதிப்புள்ள கடன் மோசடி தொடர்பான வழக்கில் இந்த மாதம் 5 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக ஜூலை 24 ஆம் தேதி, அனில் அம்பானிக்கு சொந்தமான மொத்தம் 50 நிறுவனங்கள், 25 வணிக கூட்டாளர்களின் வீடுகள் மற்றும் அம்பானி குழும நிறுவனங்களின் நிர்வாகிகளின் 35 க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் அமலாக்க இயக்குநரகம் திடீர் சோதனைகளை நடத்தியது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இந்த மூன்று நாள் சோதனைகளின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
- அனில் அம்பானிக்கு சொந்தமான 50 நிறுவனங்களில் ED சோதனை நடத்தப்பட்டு வருகிறது
- அனில் அம்பானியின் பல்வேறு நிறுவனங்களுக்கு விதிகளை மீறி யெஸ் வங்கி கடன் வழங்கி இருந்தது.
பணமோசடி வழக்கில் டெல்லி, மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
கடன் பெற்று திரும்ப செலுத்தாததால், மோசடியாளர் என SBI அறிவித்த நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது.
அணில் அம்பானிக்கு சொந்தமான 35 இடங்களில் உள்ள 50 நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 25க்கும் மேற்பட்ட நபர்களும் விசாரிக்கப்பட்டனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு விதிகளை மீறி யெஸ் வங்கி பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கி இருந்தது. இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்ற புகாரில் ED சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
- ரிலையன்ஸ் எனர்ஜி லிமிடெட்டின் கீழ் இந்த நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது.
- குறைந்த விலையில் வீடுகள் கட்டிக்கொடுக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனமாக செயல்படும் எனக் கூறப்படுகிறது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Reliance Infrastructure) தனது தொழிலை விரிவடையச் செய்யும் வகையில் தற்போது புதிதாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கியுள்ளது. அந்த நிறுவனத்தறி்கு ஆர்.ஜே.பி.பி.எல். (Reliance Jai Properties Private Limited) எனப் பெயரிட்டுள்ளார்.
இந்த நிறுவனம் மூலம் மலிவான விலையில் வீடு கட்டிக்கொடுப்பதுதான் இலக்கு என அனில் அம்பானி நிறுவனம் தெரிவித்தள்ளது. ஏப்ரல் மாதத்தில் அனில் அம்பானி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 308 ரூபாய் இருந்தது. தற்போது 225.85. ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது இந்த நிலையில் அனில் அம்பானி நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
பிரதம மந்திரி வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தை குறிவைத்து குறைந்த விலையிலான வீடுகளை கட்டுக்கொடுக்கம் வேலையை குறிவைத்து இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் எனர்ஜி லிமிடெட்டின் கீழ் கடந்த 12-ந்தேதி ரிலையன்ஸ் ஜெய் பிராப்பர்ட்டிஸ் தனியார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. சொத்துக்கள் கையகப்படுத்துதல், விற்பனை செய்தல், குத்ததைக்கு விடுதல் போன்ற இந்த நிறுவனம் ஈடுபட உள்ளது.
சில மாதங்களுக்கு முன் வாங்கிய கடனை செலுத்த முடியாததால் இவருடைய நிறுவனங்கள் திவால் அடையும் நிலைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
- நிறுவனத்தின் நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- அனில் அம்பானிக்கு தடை மட்டுமின்றி ரூ.25 கோடி அபராதமும் விதித்து செபி உத்தரவிட்டுள்ளது.
மும்பை:
பிரபல தொழிலதிபரான அனில் அம்பானி பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி இந்தத் தடையை விதித்துள்ளது.
நிறுவனத்தின் நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அனில் அம்பானிக்கு இந்த தடையை செபி விதித்துள்ளது.
அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உள்பட 24 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுக்கு செபி தடை விதித்துள்ளது.
அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்துள்ள செபி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்த ஒரு நிறுவனத்திலும் இயக்குநராகவோ அல்லது முக்கிய பொறுப்பாளராகவோ இருக்கவும் தடை விதித்துள்ளது.
அத்துடன், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்துக்கு 6 மாதத்துக்கு தடை விதித்துள்ள செபி, அந்நிறுவனத்துக்கு ரூ.6 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
- இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் ஒருவருக்கு 10 ஆண்டு ஜெயில், அபராதம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தங்களுக்கு காலஅவகாசம் வேண்டும் என வருமான வரித்துறை தரப்பில் ஐகோர்ட்டில் கூறப்பட்டது.
மும்பை :
வருமான வரித்துறையினர் கடந்த மாதம் 8-ந் தேதி ரிலையன்ஸ் நிறுவன சேர்மன் அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அந்த நோட்டீஸ், அனில் அம்பானி வேண்டும் என்றே சுவீஸ் வங்கியில் 2 வங்கி கணக்கில் உள்ள ரூ.814 கோடி பணம் குறித்து வருமான வரித்துறையிடம் மறைத்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறியிருந்தனர்.
இந்த விவகாரத்தில் அனில் அம்பானி மீது கருப்பு பண ஒழிப்பு தடுப்பு சட்டம் பிரிவு 50, 51 கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்து இருந்தனர். இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் ஒருவருக்கு 10 ஆண்டு ஜெயில், அபராதம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் அனில் அம்பானி அவர் மீதான வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதிகள் கங்காபுர்வாலா, ஆர்.என். லத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அனில் அம்பானி தரப்பில் ஆஜரான வக்கீல், "அனில் அம்பானிக்கு எதிரான சட்டப்பிரிவு 2015-ம் ஆண்டு தான் நடைமுறைக்கு வந்தது. ஆனால் அவர் மேற்கொண்ட பணப்பரிவர்த்தனைகள் 2006-07 மற்றும் 2010-11-ம் ஆண்டு நடந்தவை. எனவே குறிப்பிட்ட சட்டப்பிரிவின் கீழ் அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்க முடியாது" என கூறினார்.
இதுகுறித்து பதில் அளிக்க தங்களுக்கு காலஅவகாசம் வேண்டும் என வருமான வரித்துறை தரப்பில் ஐகோர்ட்டில் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் மனு மீதான விசாரணையை நவம்பர் 17-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் அதுவரை அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு இடைக்கால தடை விதித்தனர்.
- அனில் அம்பானி, சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்குகளில் ரூ.420 கோடி வரி ஏய்ப்பு.
- அனில் அம்பானியிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி :
பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி, சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்குகளில் ரூ.814 கோடி அளவுக்கு முதலீடு செய்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அவர் வேண்டுமென்றே சுவிஸ் வங்கி முதலீடுகளை மறைத்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டி, அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அனில் அம்பானியிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ரபேல் ஒப்பந்தத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு தான் அனில் அம்பானி ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார் என காங்கிரஸ் சார்பு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. இதையடுத்து காங்கிரஸ் மீதும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீதும் அனில் அம்பானி சார்பில் ரூ.5 ஆயிரம் கோடி கேட்டு ஆமதாபாத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் அந்த வழக்கை வாபஸ் பெற அனில் அம்பானி முடிவு செய்துள்ளார். இது குறித்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலையொட்டி அரசியல் காரணங்களுக்காக தான் இது போன்ற செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தற்போது தேர்தல் முடிவடைந்து விட்டது. எனவே எங்கள் தரப்பில் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற முடிவு செய்திருக்கிறோம் என கூறப்பட்டு உள்ளது. எனினும் அறிக்கை யார் பெயரில் வெளியிடப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை.






