என் மலர்
நீங்கள் தேடியது "CBI Raid"
- சிபிஐ சோதனைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்.
- அரசியல் ரீதியாக போராட ராஷ்டிரிய ஜனதாதளம் அழைப்பு.
மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 30 இடங்களில் 14 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. இதையடுத்து சிசோடியா, டெல்லி கலால் துறை அதிகாரிகள், மதுபான நிறுவன நிர்வாகிகள், டீலர்கள், ஊழியர்கள் உள்பட 15 பேர் மீது சிபிஐ தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிபிஐ சோதனை நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் மணீஷ் சிசோடியா கூறியுள்ளதாவது: சிபிஐ குழு, எனது வீட்டை சோதனை செய்து எனது கணினி மற்றும் தொலைபேசியை கைப்பற்றினர். எனது குடும்பத்தினர் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தனர், தொடர்ந்து ஒத்துழைப்போம். நாங்கள் எந்த ஊழலோ, தவறோ செய்யவில்லை. நாங்கள் பயப்படவில்லை. சிபிஐ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது எங்களுக்குத் தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சிசோடியா விட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. எதிர்க் கட்சிகளை மத்திய அரசு குறி வைப்பதாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளதை ராஷ்டிரிய ஜனதாதளம் விமர்சித்துள்ளது. மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக அரசியல் ரீதியாக ஆம் ஆத்மி போராட முன் வர வேண்டும் என்று அக்கட்சியின் எம்பி மனோஜ் ஜா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, டெல்லி மதுபான கடை உரிமம் வழங்கியதில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட அன்றே டெல்லி அரசு, மதுக் கொள்கையை வாபஸ் பெற்றதாகவும், ஒரு ஊழல்வாதி தன்னை நிரபராதி என்று நிரூபிக்க எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவர் ஊழல்வாதியாகவே இருப்பார் என்றும், அனுராக் தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை வக்பு வாரிய கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான புகாரை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து இந்த முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மண்ணடியில் உள்ள வக்பு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்தனர். அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு வக்பு வாரிய கல்லூரியில் நியமனம் நடந்துள்ளதாகவும், இந்த லஞ்சப் பணம் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர், வக்பு வாரிய தலைவருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #ChennaiWakfBoard #CBIRaids
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் நடத்தி வந்த நிறுவனத்தில் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் அதிக அளவில் முதலீடு செய்தார். இதற்கு பிரதிபலனாக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் இருந்து வீடியோகான் நிறுவனத்துக்கு 2012-ம் ஆண்டு ரூ.3 ஆயிரத்து 200 கோடி கடன் வழங்கப்பட்டது.
இதன் மூலம் தீபக் கோச்சாரின் குடும்பம் பலன் அடைந்திருப்பதாகவும், இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகார் எழுந்தது. அதன் பேரில் தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ. முதல்கட்டாக கடந்த ஆண்டு விசாரணை நடத்தியது. இந்நிலையில் 2 பேர் மீதும் சி.பி.ஐ. நேற்று வழக்குப்பதிவு செய்தது.
மேலும் மும்பை, அவுரங்காபாத்தில் உள்ள வீடியோகான் தலைமை அலுவலகங்கள், தீபக் கோச்சாரின் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் சி.பி.ஐ. நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டது. #Videocon #CBI
சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் லஞ்சப் புகார் காரணமாக நீக்கப்பட்டு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டது.
புதிய சி.பி.ஐ. இயக்குனராக தற்காலிகமாக இணை இயக்குனராக இருந்த நாகேஷ்வரராவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதிகாலையில் பதவி ஏற்ற அவர் அடுத்தடுத்து பல நடவடிக்கைகளை எடுத்தார். அலோக் வர்மா மற்றும் அஸ்தானா மீதான ஊழல் புகார்கள் பற்றி விசாரிக்க புதிய குழுவை நியமித்தார்.
மேலும் 14 அதிகாரிகளை அதிரடியாக இடம் மாற்றம் செய்தும் உத்தரவிட்டார். சி.பி.ஐ.யில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிரடி நடவடிக்கையின் கதாநாயகனான நாகேஷ்வர ராவ் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர். வாரங்கல் மாவட்டம் மங்க பேட்டா மண்டலம் போரு நர்சாபுரம் என்ற குக்கிராமத்தில் பிறந்தார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
மங்கபேட்டா அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தார். ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டு இருந்த போது சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.பி.எஸ். பணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
ஒடிசாவில் பணி நியமனம் செய்யப்பட்ட பின்னர் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும்பாலும் பணியாற்றினார். ஒடிசா மாநில டி.ஐ.ஜி.யாகவும் பதவி வகித்தார். கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் உள்ள தென் மண்டல சி.பி.ஐ. இணை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

காண்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையிலும் பணம், நகைகள் கைப்பற்றப்பட்டது. முன்னதாக தமிழக சட்டசபை தேர்தலின்போது நடந்த சோதனையும் தமிழகத்தையே உலுக்கி எடுத்தது. இதன் காரணமாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டன.
இவை அனைத்தும் அ.தி.மு.க. ஆதரவைப் பெறுவதற்காக பா.ஜனதா நடத்தியது என்று அரசியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் நாகேஷ்வரராவ் முக்கிய பங்கு வகித்தார் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. #CBIDirector #NageswaraRao
சென்னை:
குட்கா ஊழல் வழக்கில் செங்குன்றம் குடோன் அதிபர் மாதவராவ் அவரது பங்குதாரர்கள் உமாசங்கர், குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், திருவள்ளூர் மாவட்ட சுகாதார ஆய்வாளர் சிவகுமார் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அனைவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். வருகிற 17-ந்தேதி வரை 6 பேரையும் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக மேலும் 2 அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மத்திய சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி) வரி துறையை சேர்ந்த கூடுதல் கமிஷனர் செந்தில் வளவன், மத்திய கலால் வரி துறையில் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஸ்ரீ தரன் ஆகிய 2 பேரின் வீடுகளிளும் சோதனை நடந்தது.
குட்கா ஊழலில் இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
குட்கா ஊழல் வழக்கில் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், உதவி கமிஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் சம்பத்திடம் மட்டுமே சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. #gutkhaissue #cbi
தமிழகத்தில் குட்கா ஊழல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் இந்த வழக்கு மிகவும் தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதவராவ் கிடங்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், மத்திய வருவாய்த்துறை அதிகாரியான செந்தில் வளவன் மற்றும் கலால்துறை அதிகாரி ஸ்ரீதர் வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையை டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் நடத்தியதாக கூறப்படுகிறது. #GutkhaScam #CBI
தமிழகத்தில் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
