என் மலர்
இந்தியா

பணமோசடி வழக்கு: அனில் அம்பானியின் உதவியாளர் கைது
- அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது
- அசோக் குமார் பால் என்பவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர்.
சமீபத்தில் 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியின் மும்பை வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பணமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் பாலை அமலாக்கத்துறை கைது செய்தது. பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் அசோக் குமார் பால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசோக் பால், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் இருந்து நிதியைத் திசைதிருப்புவதிலும், பொதுத் துறை நிறுவனமான SECI- (Solar Energy Corporation of India) சிக்கவைக்க முக்கியப் பங்காற்றியதாக ED குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அசோக் பாலுக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வரும் திங்கள்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






