என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவிகுமார்"

    • சமூகநீதி காக்கும் திமுக அரசிலும் அந்த அரசாணை இதுவரை நடைமுறைக்கு வராத நிலையே உள்ளது.
    • இத்தகைய சிறிய முன்னெடுப்புகளையும்கூடப் புறக்கணிப்பது சமூகநீதிக்கு ஊறு விளைவிக்கும்.

    அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறுத்தி வைத்த, சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் அரசாணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிகுமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசுப் பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்பட வேண்டியவர்களின் பட்டியலில் சாதி மறுப்பு கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களையும் சேர்த்துத் தமிழக அரசு 1986 ஆம் ஆண்டில் ஆணையிட்டது. 2006 முதல் 2011 வரை முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியின் போது தமிழக அரசின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களில் சாதி மறுப்புக் கலப்புத் திருமணம் செய்துகொண்ட 287 பேர் பணி நியமனம் பெற்றனர். ஆனால் அதன் பிறகு அமைந்த அதிமுக ஆட்சியில் சாதி மறுப்புக் கலப்புத் திருமணம் செய்து கொண்ட எவரும் அரசுப் பணியில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்படவில்லை.

    திரு எம்ஜிஆர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை அவரது வாரிசாகக் கூறிக்கொள்ளும் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் வலியுறுத்தியும் அவர் செயல்படுத்தவில்லை.

    திமுக அரசு அமைந்ததும் இதை சுட்டிக்காட்டி மாண்புமிகு முதலமைச்சர் மு.க,.ஸ்டாலின் அவர்களுக்கும் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பினேன்.

    சமூகநீதி காக்கும் திமுக அரசிலும் அந்த அரசாணை இதுவரை நடைமுறைக்கு வராத நிலையே உள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதில்லை என்பதால் இதை செயல்படுத்த முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அது ஏற்கத்தக்க காரணம் அல்ல. சனாதனக் கருத்தியல் செல்வாக்கால் தமிழ்நாட்டில் சாதிய காழ்ப்பு அதிகரித்துவரும் சூழலில் சமத்துவத்தை நோக்கிய இத்தகைய சிறிய முன்னெடுப்புகளையும்கூடப் புறக்கணிப்பது சமூகநீதிக்கு ஊறு விளைவிக்கும்.

    தேர்தலுக்கு முன்பாக இந்த அரசாணையை மீண்டும் செயல்படுத்திட உரிய வழிகாட்டுதலை அதிகாரிகளுக்கு வழங்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


    • சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’அயலான்’.
    • இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    அயலான் போஸ்டர்

    இந்நிலையில், 'அயலான்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டீசர் அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு புதிய போஸ்டரை பகிர்ந்து மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


    • சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’.
    • இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.

    ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, "தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று சொல்லியிருந்தோம். ஆனால் சின்ன சின்ன வேலைகள் இருந்ததால் பொங்கலுக்கு தள்ளி வைத்தோம். 'இன்று நேற்று நாளை' படத்தை பார்த்ததும் இயக்குனருக்கு போன் செய்து பேசினேன். அப்போது இயக்குனர் என்னை சந்திக்க வேண்டும் என்று கூறினார். அப்போதே முடிவு செய்துவிட்டேன் இவருடன் படம் பண்ண வேண்டும் என்று.


    ரவிக்குமார் மேல் இருந்த நம்பிக்கையில் தான் இந்த படத்தை நான் ஒத்துக் கொண்டேன். 95 நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்துவிட்டார். இது போன்ற ஏலியன் வைத்து முன்னாடி எம்.ஜி.ஆர். ஒரு படம் செய்திருந்தார். அதன் பிறகு இப்போது நாம்தான் முயற்சி செய்கிறோம். தமிழ் சினிமாவில் அத்தனை வருடங்களுக்கு பிறகு இப்போது தான் இப்படி ஒரு கான்ஸ்செப்ட் வருது என்று முத்துராஜ் சார் சொன்னார்.

    யூடியூபர்கள் எம்.ஜி.ஆருக்கு அடுத்தது நான் தான் என்று சிவகார்த்திகேயன் சொன்னார் என்று போட்டுவிடாதீர்கள். இன்னும் நிறைய சர்ப்ரைஸ் இந்த படத்தில் இருக்கிறது. குழந்தைகளுக்கு தவறான விஷயத்தை புகுத்தும் படமாக இந்த படம் இருக்காது " என்று பேசினார்.

    • 'அயலான்’ படத்தில் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.
    • சிவகார்த்திகேயனுடன் நான் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை.

    நகைச்சுவை, குணச்சித்திரம், கதாநாயகன் என தனக்குக் கொடுக்கப்பட்ட எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக் கூடியவர் நடிகர் கருணாகரன். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து நாளை வெளியாக இருக்கும் 'அயலான்' படத்தில் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சிக்காகவும் தொழில்நுட்பக்குழு தங்களது சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளது என்பவர் இந்தப் படத்தில் பணிபுரிந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம் என்கிறார்.


    நடிகர் சிவகார்த்திகேயனுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து அவர் பேசியதாவது, சிவகார்த்திகேயனுடன் நான் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை. ஒவ்வொரு காட்சியிலும் தான் மட்டுமே சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்காமல் தனது சக நடிகர்களுடனும் கலந்தாலோசித்து சிறப்பான அவுட்புட்டைக் கொண்டு வருவார் சிவா.


    அதேபோல, இயக்குனர் ரவிகுமாரும் சிறந்த தொழில்நுட்பக்குழுவையும் புதிய ஐடியாவையும் இந்தப் படத்தில் கொண்டு வந்துள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் ரவிகுமார் இருவரும் படத்தின் மீது வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கை தான் எங்கள் பலம். நிச்சயம் படம் பெரிய வெற்றி பெறும். ஏ.ஆர். ரகுமானின் இசை படத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெயினராக, குறிப்பாக குழந்தைகளுக்கான படமாக 'அயலான்' வந்துள்ளது என்றார்.


    'அயலான்' தவிர நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, '96' புகழ் பிரேம்குமார் இயக்கும் புதிய படம், நளன்குமாரசாமி இயக்கத்தில் கார்த்தியுடன் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார் கருணாகரன். இதுமட்டுமல்லாது, நாகசைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் புதிய படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார். மேலும், விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்கும் புதிய படம், மிர்ச்சி சிவாவுடன் 'சூது கவ்வும் 2' மற்றும் கருணாகரன் கதாநாயகனாக நடித்து விரைவில் வெளியாக இருக்கும் 'குற்றச்சாட்டு' ஆகிய படங்கள் அடுத்தடுத்து அவரது கைவசம் உள்ளது.

    ×