என் மலர்
நீங்கள் தேடியது "ravikumar mp"
- தமிழிசை சௌந்தரராஜன் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற நிலையில், செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படவில்லை
- ‘ வழிபாட்டுத் தீண்டாமை’யை ஒழிக்க உறுதியான நடவடிக்கை தேவை
வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கில் செல்வப்பெருந்தகையை அனுமதிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழிசை சௌந்தரராஜன் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற நிலையில், செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படவில்லை.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வப்பெருந்தகை, "2000 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது. அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைபிடித்துள்ளனர். முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக் கூடாது என்பதால் மக்களோடு மக்களாக தரிசித்தேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக விசிக எம்.பி. ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா? அதற்குக் காரணமான அதிகாரிகள் யார் ? என்பதை அறிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அறநிலையத்துறை அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் . தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக் கோயில்களில் தொடரும் ' வழிபாட்டுத் தீண்டாமை'யை ஒழிக்க உறுதியான நடவடிக்கை தேவை" என்று தெரிவித்துள்ளார்.
- சமூகநீதி காக்கும் திமுக அரசிலும் அந்த அரசாணை இதுவரை நடைமுறைக்கு வராத நிலையே உள்ளது.
- இத்தகைய சிறிய முன்னெடுப்புகளையும்கூடப் புறக்கணிப்பது சமூகநீதிக்கு ஊறு விளைவிக்கும்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறுத்தி வைத்த, சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் அரசாணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிகுமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசுப் பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்பட வேண்டியவர்களின் பட்டியலில் சாதி மறுப்பு கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களையும் சேர்த்துத் தமிழக அரசு 1986 ஆம் ஆண்டில் ஆணையிட்டது. 2006 முதல் 2011 வரை முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியின் போது தமிழக அரசின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களில் சாதி மறுப்புக் கலப்புத் திருமணம் செய்துகொண்ட 287 பேர் பணி நியமனம் பெற்றனர். ஆனால் அதன் பிறகு அமைந்த அதிமுக ஆட்சியில் சாதி மறுப்புக் கலப்புத் திருமணம் செய்து கொண்ட எவரும் அரசுப் பணியில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்படவில்லை.
திரு எம்ஜிஆர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை அவரது வாரிசாகக் கூறிக்கொள்ளும் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் வலியுறுத்தியும் அவர் செயல்படுத்தவில்லை.
திமுக அரசு அமைந்ததும் இதை சுட்டிக்காட்டி மாண்புமிகு முதலமைச்சர் மு.க,.ஸ்டாலின் அவர்களுக்கும் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பினேன்.
சமூகநீதி காக்கும் திமுக அரசிலும் அந்த அரசாணை இதுவரை நடைமுறைக்கு வராத நிலையே உள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதில்லை என்பதால் இதை செயல்படுத்த முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அது ஏற்கத்தக்க காரணம் அல்ல. சனாதனக் கருத்தியல் செல்வாக்கால் தமிழ்நாட்டில் சாதிய காழ்ப்பு அதிகரித்துவரும் சூழலில் சமத்துவத்தை நோக்கிய இத்தகைய சிறிய முன்னெடுப்புகளையும்கூடப் புறக்கணிப்பது சமூகநீதிக்கு ஊறு விளைவிக்கும்.
தேர்தலுக்கு முன்பாக இந்த அரசாணையை மீண்டும் செயல்படுத்திட உரிய வழிகாட்டுதலை அதிகாரிகளுக்கு வழங்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா?
- ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தி கோட் படத்தை விமர்சித்து விழுப்புரம் எம்,பி. ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "விஜய் படத்தின் தலைப்பில் 'சனாதனம்'? The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? 'காலமெல்லாம் பெரியது இதுதான்' என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்.
'என்றும் மாறாதது' என்பதுதானே 'சனாதனம்' என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்.சொல். 157)" என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், "படத்தை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டும்" என்று ரவிக்குமார் எம்.பி. விமர்சனத்திற்கு த.வெ.க. பொதுச்செயலாளர் புதுவை என்.ஆனந்த் பதில் அளித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய் கட்சி ஆரம்பித்திருப்பதே விசிக உடன் எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ...!
- தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து அழைப்பு விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
"எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கலந்து கொள்வது உறுதியானது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்பதாக கூறப்பட்டது. பின்னர் விழாவில் பங்கேற்கமாட்டேன் என திருமாவளவன் தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் விஜய் கலந்து கொள்ளும் விழாவில் கலந்து கொள்ள நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் திருமாவளவன் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த விழாவில் பங்கேற்காததற்கான காரணத்தை திருமாவளவன் நீண்ட அறிக்கையில் மூலம் விளக்கியிருந்தார்.
இருந்தபோதிலும் நேற்றைய புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசும்போது கூட்டணி கட்சி நெருக்கடியால் அவர் பங்கேற்வில்லை எனக் கூறினார்.
இந்த நிலையில் திருமாவளவன் பற்றி விஜய் கூறியதை விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "வி.சி.க. தலைவர் திருமாவளவன் விரிவாக அறிக்கை கொடுத்ததற்கு பிறகும் விஜய் எங்கள் தலைவரை பற்றி பேசியதை பார்த்தால் அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விசிக உடன் எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ என எண்ணத் தோன்றுகிறது.
தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து அழைப்பு விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது" எனத் தெரிவித்துள்ளார்.






