என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TTF Vasan"

    • TTF வாசன் நடித்துள்ள ஐபிஎல் படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
    • இயக்குனர் ஷங்கர், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்

    ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜி.ஆர். மதன்குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர்- TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் "ஐபிஎல்".

    பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    ஐபிஎல் படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய TTF வாசன், "தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவது போன்ற அரசியல் ஆசை இல்லை. நடிகர் விஜயுடன் என்னை ஒப்பீடு செய்ய வேண்டாம், இயக்குனர் ஷங்கர், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்" என்று தெரிவித்தார். 

    • கருணாநிதி இயக்கி உள்ள இப்படத்தை ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.
    • நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

    பிரபல யூடியூப்பரும், சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவருமான டிடிஎஃப் வாசன் தற்போது படம் ஒன்றில் நடித்து உள்ளார். அப்படத்திற்கு ஐபிஎல் (Indian Penal Law) என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இப்படத்தில் நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். கருணாநிதி இயக்கி உள்ள இப்படத்தை ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

    இப்படத்திற்கு அஷ்வின் வினாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். படத்தின் "அப்போ இப்போ" பாடல் அண்மையில் வெளியானது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  

    நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

    பிரபல யூடியூப்பரும், சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவருமான டிடிஎஃப் வாசன் தற்போது படம் ஒன்றில் நடித்து உள்ளார். அப்படத்திற்கு ஐபிஎல் (Indian Penal Law) என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இப்படத்தில் நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். கருணாநிதி இயக்கி உள்ள இப்படத்தை ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

    ஐபிஎல் படத்தின் டீசர் கடந்த 24ஆம் தேதி வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் "அப்போ இப்போ" பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அஷ்வின் வினாயகமூர்த்தி இசையமைத்துள்ளார்.

    • இப்படத்தில் நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
    • டீசரை வாசன் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    பிரபல யூடியூப்பரும், சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவருமான டிடிஎஃப் வாசன் தற்போது படம் ஒன்றில் நடித்து உள்ளார். அப்படத்திற்கு ஐபிஎல் (Indian Penal Law) என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

    கருணாநிதி இயக்கி உள்ள இப்படத்தை ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.



    இந்த நிலையில், ஐபிஎல் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அதில், காதல், ரேஸ், ஆக்ஷன் என மாஸான வசனங்களில் வாசன் பேசி உள்ளார். டீசரை வாசன் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 



    • டி.டி.எப். வாசன் தனது திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
    • இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப். வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார்.

    இந்நிலையில், டி.டி.எப் வாசன் 5 வருடமாக காதலித்து வந்த தனது மாமன் மகளை திருமணம் செய்துள்ளார். தற்போது டி.டி.எப். வாசன் தனது திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    குறிப்பாக மனைவியின் காலில் டி.டி.எப். வாசன் மெட்டி போடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனையடுத்து பலரும் டி.டி.எப். வாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • பிரபல யூடியூபராக இருப்பவர் டி.டி.எஃப்.வாசன்
    • யூடியூபர் டி.டி.எப்.வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது.

    பிரபல யூடியூபராக இருந்தவர் டி.டி.எஃப்.வாசன். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காரணத்தினால். யூடியூபர் டி.டி.எப்.வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில் இதனை மேல்முறையீடு செய்து உயர்நீதிமன்றத்தில் டி.டி.எஃப் வழக்கை தொடர்ந்தார். இன்று அவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    • வாகனங்களை அப்புறப்படுத்தாததால் டிடிஎஃப் ஆதரவாளர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
    • சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரசிகர்களின் வாகனங்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர், புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குநர் செந்தில் என்பவரது அலுவலகத்தை திறந்து வைக்க யூடியூபர் டிடிஎஃப் வாசன் வந்தார். இவரை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் அவர்களது இருசக்கர வாகனத்தில் அதிக ஒலி எழுப்பியதாலும், வாகனத்தை தாறுமாறாக நிறுத்தியதாலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனையடுத்து போலீசார் உடனடியாக அந்த பகுதியில் இருந்து வாகனங்களை அப்புறப்படுத்துமாறு ஒலிபெருக்கி மூலமாக அறிவித்தனர். இருப்பினும் அந்த வாகனங்களை அப்புறப்படுத்தாததால் அங்கு வந்திருந்த டிடிஎஃப் ஆதரவாளர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

    அதன்பிறகு டிடிஎஃப் மீண்டும் புறப்படும்போது அதேபோல் அவரது ஆதரவாளர்கள் இருசக்கர வாகனத்தில் ஒலி எழுப்பியபடி அந்த பகுதியில் சென்றனர். அப்போது புதுபாளையம் ஆற்றங்கரை பகுதியில் நடந்து சென்றவர்கள் மீது அந்த வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளனது.

    அதன் பிறகு போலீசார் அந்த பகுதியில் இதுபோன்ற அதிகப்படியான ஒலிஎழுப்பிய வாகனங்கள் மற்றும் தாறுமாறாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் என 200க்கும் மேற்பட்ட வாகனங்களின் சாவிகளை கைப்பற்றி அவர்கள் மீது வழங்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த பகுதியில் உள்ள வாகனங்களின் மீது வழங்கு பதிவு செய்யப்பட்டன.

    தற்போது யூடியூபர் டிடிஎஃப் வாசன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செந்தில் செல்வம் மற்றும் விக்னேஷ் ஆகிய 3 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், அளவுக்கு அதிகமாக கூட்டத்தை கூட்டுதல், காவல்துறையினருக்கு இடையூறு ஏற்படுத்தியது போன்று பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • பிரபல தனியார் யூடியூப் செய்தி சேனல் செய்தியாளர் ஒருவரை தரக்குறைவாக பேசி, டி.டி.எப் வாசன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
    • பிரபல தனியார் யூடியூப் செய்தி சேனல் நிறுவனம் சார்பில் காரமடை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன் என்ற வைகுண்ட வாசன் (25).

    இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

    இந்த நிலையில் பிரபல தனியார் யூடியூப் செய்தி சேனல் செய்தியாளர் ஒருவரை தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த நிறுவனம் சார்பில் காரமடை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் டி.டி.எப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இவர் மீது ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் சில வழக்குகளில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கடிதமும் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் குழந்தைகள் இவரது யூடியூப் பக்கத்தை பாலோ செய்வதால் அவரை மாதிரியே தாங்களும் வாகனங்களை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கலாம் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர். இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

    மேலும், இதுவரை தனது யூடியூப் பக்கத்தில் தனக்கு எதிராக யாராவது பேசினால் அவர்களுக்கு எதிராக வசனம் பேசி வீடியோ வெளியிட்டு வந்த அவர், தற்போது தனியார் யூடியூப்பை சேர்ந்த ஒருவரை மிரட்டுகிறார். எனவே அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • யூடியூப் மூலம் பிரபலமடைந்தவர் டி.டி.எப் வாசன்.
    • இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார்.

    இந்நிலையில், யூடியூபர் டி.டி.எப் வாசன் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கவுள்ளார். அதாவது, இவர் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வரும் 29-ஆம் தேதி டி.டி.எப்.வாசன் பிறந்தநாள் அன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • டி.டி.எப்.வாசன் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார்.
    • இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார்.


    இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கவுள்ளார். அதாவது, இயக்குனர் செல்அம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தை தி பட்ஜெட் பிலிம் கம்பெனி தயாரிக்கிறது. இதையடுத்து இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் டி.டி.எப் வாசனின் பிறந்த நாளான இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.


    இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'மஞ்சள் வீரன்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. டி.டி.எப்.வாசன் கையில் சூலாயுதத்துடன் புல்லட் பைக்கில் சீறிப் பாய்வது போல உள்ள இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரில் '299 கி.மீ. வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.



    • டி.டி.எப்.வாசன் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார்.
    • இவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார்.



    இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கவுள்ளார். இயக்குனர் செல்அம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தை தி பட்ஜெட் பிலிம் கம்பெனி தயாரிக்கிறது. இதையடுத்து இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் டி.டி.எப் வாசனின் பிறந்த நாளான நேற்று வெளியானது.




    'மஞ்சள் வீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரில் டி.டி.எப்.வாசன் கையில் சூலாயுதத்துடன் புல்லட் பைக்கில் சீறிப் பாய்வது போல இடம்பெற்றுள்ளது. மேலும் முதல் தோற்ற போஸ்டரில் '299 கி.மீ. வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. மேலும் இப்படத்தில் கூல் சுரேஷ் குணசித்திர வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் அமைக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

    • டி.டி.எப்.வாசன் கதாநாயகனாக நடிக்கும் 'மஞ்சள் வீரன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
    • இப்படத்தில் அனிருத் பாடல் பாடவுள்ளதாக கூறப்படுகிறது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார்.



    இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். இயக்குனர் செல்அம் இயக்கத்தில் 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் நடிக்கிறார். தி பட்ஜெட் பிலிம் கம்பெனி தயாரிக்கும் இப்படத்திற்கு அனிவி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்நிலையில் 'மஞ்சள் வீரன்' படத்தின் அறிமுக பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடவுள்ளதாக கூறப்படுகிறது. 

    ×