என் மலர்
சினிமா செய்திகள்

ஐபிஎல் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் எப்போ?- வீடியோ மூலம் அறிவித்த டிடிஎஃப் வாசன்
நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
பிரபல யூடியூப்பரும், சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவருமான டிடிஎஃப் வாசன் தற்போது படம் ஒன்றில் நடித்து உள்ளார். அப்படத்திற்கு ஐபிஎல் (Indian Penal Law) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். கருணாநிதி இயக்கி உள்ள இப்படத்தை ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.
ஐபிஎல் படத்தின் டீசர் கடந்த 24ஆம் தேதி வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் "அப்போ இப்போ" பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அஷ்வின் வினாயகமூர்த்தி இசையமைத்துள்ளார்.
Next Story






