search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஷ்ணு விஷாலின் 6 ஆண்டு போராட்டம்
    X

    விஷ்ணு விஷாலின் 6 ஆண்டு போராட்டம்

    ராட்சசன் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் வருகிற வாரத்தில் வெளியாக இருக்கிறது. #SilukkuvarpattiSingam #VishnuVishal
    விஷ்ணு விஷால் ராட்சசன் படம் வெற்றி பெற்ற உற்சாகத்தில் அடுத்து சிலுக்குவார்பட்டி சிங்கமாக களம் இறங்குகிறார். அவர் அளித்த பேட்டி:

    திரும்ப காமெடி பக்கமே வந்து விட்டீர்களா?

    ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படப்பிடிப்பின் போதே, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ கதையை இயக்குனர் செல்லா அய்யாவு சொன்னார். ஜாலியா இருக்கே. நம்ம பேனர்லயே தயாரிக்கலாம் என்று திட்டமிட்டு தொடங்கிய படம். ‘ராட்சசன்’ சீரியஸ் போலீஸ், இது காமெடி போலீஸ். ரெஜினா, ஓவியா, யோகிபாபுன்னு ஒரு பெரிய பட்டாளமே வர்றாங்க. இது என் சொந்த படம். சீரியஸ் போலீஸையும், காமெடி போலீசையும் அடுத்தடுத்து விடவேண்டாம் என்று தான் காத்திருந்தேன்.

    காமெடி படங்களையே தொடர்ந்து தயாரிப்பது ஏன்?

    ஜாலியான படங்களை தயாரிப்பது எளிது. சீரியசான படங்களை தயாரித்தால் நமக்கு பிர‌ஷர் அதிகமாகி விடும். இனி என் தயாரிப்பில் எல்லா விதமான படங்களும் வரும். ராட்சசன், நீர்ப்பறவை போன்ற சீரியஸ் படங்கள் எனக்கு எளிது. காமெடி படங்கள் தான் கஷ்டம். காமெடியை தாண்டி இந்த படத்தில் சின்ன கதையும் இருக்கும்.

    ஓவியா கவுரவ வேடத்தில் நடித்தது எப்படி?

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே அவர் நடித்த படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் அவர் பிக்பாசில் கலந்துகொள்ள போவதாக கூறினார். இதில் கனகா என்னும் வேடத்தில் வருகிறார். கதையை நகர்த்தும் முக்கிய வேடம்.



    காடன் எந்த மாதிரியான படம்?

    பிரபு சாலமன் படம். தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழிகளில் வளரும் படம். முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டோம். இதில் யானைப் பாகனாக நடிக்கிறேன். மூணாறு உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துறோம். உடனே ‘கும்கி 2’ என்ற முடிவுக்கு வரவேண்டாம். அதில் இருந்து முற்றிலும் வித்தியாசமா இருக்கும். இதில் ராணா 50 வயது நபரா நடிக்கிறார்.

    ஒரு தயாரிப்பாளராக கதாநாயகன் தோல்வியில் இருந்து மீண்டு விட்டீர்களா?

    அதுக்கு பின்னாடி பெரிய கதை இருக்கு. முதலில் ‘வீர தீர சூரன்’ என்று ஒரு படம் ஒப்பந்தமாகி நடிக்க ஆரம்பிச்சேன். சில பிரச்சினைகளால் நடுவிலயே அது நின்றுவிட்டது. அந்த படத்தின் கதையை மாற்றி எடுக்கப்பட்ட படம்தான் ‘கதாநாயகன்’. படம் சரியாக போகவில்லை. ஆனால் எனக்கு நடிப்பு, அனுபவம்னு சில வி‌ஷயங்களை அந்த படம் கற்றுத் தந்தது.

    ராட்சசன் வெற்றி பொறுப்பை அதிகமாக்கி விட்டதா?

    ஆமாம். ‘ராட்சசன்’ படத்துக்கு பிறகு நிறைய கதை கேட்டிருக்கிறேன். இன்னும் எதையும் ஓ.கே. பண்ணல. என்னுடைய பலம் என்ன என்று இப்போதுதான் புரிந்து இருக்கிறது. வித்தியாசமான படங்கள் தான் என் கேரியரில் என்னை தூக்கி விட்டிருக்கின்றன. எனவே இனி 4 படங்கள் சீரியஸ் படங்கள் என்றால் ஒரு படமாவது காமெடி படம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். இப்போ கிடைத்திருக்கிற இந்த இடத்துக்கு வர 6 வரு‌ஷங்களுக்கு மேல போராடியிருக்கேன். அதே வேகத்தில் அப்படியே ஏறுமுகமா இருக்கணும். #SilukkuvarpattiSingam #VishnuVishal

    Next Story
    ×