search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Oviyaa"

  ராஜதுரை இயக்கத்தில் சஞ்ஜெய் - ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஓவியாவ விட்டா யாரு சீனி' படத்தின் விமர்சனம்.
  மனோஜ்குமார்-மீராகிருஷ்ணன் தம்பதியின் மகன் சஞ்ஜெய். தன் அப்பாவை போல மாத சம்பளத்துக்கு வேலை செய்ய விரும்பாமல் சுயமாக தொழில் செய்து பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இவரும், பக்கத்து வீட்டுப்பெண்ணான ஓவியாவும் காதலிக்கிறார்கள்.

  இந்த நிலையில், பணம் சம்பாதிப்பற்கான வழியை காட்டுவதாக கூறி ஆசை வளர்க்கிறார் ராதாரவி. மண்ணுளி பாம்பு, சஞ்சீவி குச்சி, நாகரத்னம், நட்சத்திர ஆமை ஆகியவை மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று சஞ்ஜெய்யின் தொழிலதிபராகும் ஆசையை தூண்டிவிடுகிறார்.  ராதாரவி-சஞ்ஜெய் இருவரும் சொல்வதை நம்பி, மாவட்ட கலெக்டரான அருள்தாஸ், போலீஸ் அதிகாரி ரவிமரியா உள்ளிட்டோர் ஏமாறுகிறார்கள். இதற்கிடையே வியாபாரியான சரவணனும், ஓவியாவை ஒருதலையாக காதலிக்கிறார். அவருக்கு சஞ்ஜெய்-ஓவியாவின் காதல் தெரியவர சஞ்ஜெய்யை கொலை செய்ய எண்ணுகிறார். மறுபக்கம் ஏமாந்தவர்கள் சஞ்ஜெய்யை துரத்துகிறார்கள்.

  இவர்களிடம் இருந்து சஞ்ஜெய் எப்படி தப்புகிறார்? தொழிலதிபர் ஆனாரா? ஓவியாவுடன் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.  வேலை வெட்டி எதுவும் செய்யாமல் நண்பர்களுடன் சுற்றும் சஞ்ஜெய் ஓவியாவுடன் காதல்-டூயட், ரவுடிகளுடன் சண்டை என ஒரு கதாநாயகனுக்கு உரிய வேலைகளை சுறுசுறுப்பாக செய்திருக்கிறார். ஓவியா டைட்டிலில் ஆரம்பித்து, படம் முழுக்க வருகிறார். பாடல் காட்சிகளில் உள்ளாடை தெரியும்படி ஆடி, கவர்ச்சி விருந்து கொடுக்கிறார். டைட்டிலைப்போல் பாடல்களிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

  படத்தின் கூடுதல் அம்சமாக ராதாரவியின் நகைச்சுவை கலந்த வில்லத்தனம் அமைந்திருக்கிறது. அவர் தொடர்பான காட்சிகளில், தியேட்டரில் கலகலப்பும், எதிர்பார்ப்பும் அதிகமாகின்றன. இன்னொரு வில்லனாக ரவிமரியா காமெடி செய்கிறார். கடைசி சண்டை காட்சியில், மிரட்டுகிறார். வியாபாரி சரவணன் திடீர் வில்லனாக மாறுவது, எதிர்பாராத திருப்பம். யானைப்பாகனாக செந்தில், சஞ்ஜெய்யின் தாத்தாவாக டி.பி.கஜேந்திரன் ஆகியோரும் சிரிக்க வைக்கிறார்கள்.  மூடநம்பிக்கையை மூலதனமாக வைத்து மோசடி செய்யும் ஆசாமிகளை நம்ப வேண்டாம் என்ற கருத்தை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார், இயக்குனர் ராஜதுரை. படத்தின் முதல் பாதி மெதுவாகவும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் நகர்கிறது.

  ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் செம குத்து. ஈ.கே.நாகராஜின் ஒளிப்பதிவு ரசனை.

  மொத்தத்தில் `ஓவியாவ விட்டா யாரு சீனி' ஆசை.

  ‘களவாணி-2’ பட விவகாரத்தில் படத்தை வெளியிடுவது குறித்து சிலர் தன்னை மிரட்டுவதாகவும், அடியாட்களை ஏவி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் இயக்குநர் சற்குணம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். #Sargunam
  ‘களவாணி-2’ பட இயக்குனர் சற்குணம், நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  ‘களவாணி-2’ படத்தை நானே தயாரித்து இயக்கி உள்ளேன். நடிகர் விமல் அந்த படத்தில் கதாநாயகனாக நடித்து உள்ளார். இம்மாதம் படத்தை திரையிட திட்டமிட்டு இருந்தேன். அதுபோல விளம்பரமும் செய்திருந்தேன்.

  ஆனால் படத்தை வெளியிட ஐகோர்ட்டு தடை விதித்துவிட்டது. தற்போது அந்த தடையை ஐகோர்ட்டு விலக்கிவிட்டது. படத்தை வெளியிடலாம் என்றும் ஐகோர்ட்டு கூறிவிட்டது. இந்த நிலையில் ‘களவாணி-2’ படத்தை எப்படி நீ வெளியிடுகிறாய், பார்ப்போம்? என்று என்னை போனில் சிலர் மிரட்டுகிறார்கள். அடியாட்கள் நேரடியாக என்னிடம் அனுப்பி கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.  இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

  இவ்வாறு இயக்குனர் சற்குணம் கூறினார். #Kalavani2 #Sargunam #Vemal #Oviyaa

  நடிகை ஓவியா தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய நிலையில், இந்த விழாவில் நடிகர் ஆரவ்வும் பங்கேற்று ஓவியாவை வாழ்த்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Oviyaa #Arav
  கடந்த 2017-ம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொண்டார். இதன் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

  நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினாலும் ரசிகர்கள் ஆதரவால் ஓவியாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. சமீபத்தில் இவரது நடிப்பில் 90 எம்.எல் திரைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அடுத்து காஞ்சனா 3 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சக போட்டியாளரான ஆரவ்வை காதலிப்பதாக கூறினார் ஓவியா. பின்னர் நண்பர் என்றார். இந்நிலையில் ஆரவ்வுடன் தனது 28-வது பிறந்தநாளை நேற்று ஓவியா கொண்டாடி இருக்கிறார்.  நள்ளிரவில் ஆரவ், காயத்ரி உள்ளிட்ட பிக்பாஸ் பிரபலங்கள் மத்தியில் பிறந்தநாள் கொண்டாடும் படங்கள் வைரலாகி வருகின்றன. ஆரவ் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘ராஜ பீமா’ திரைப்படத்தில், ஒரு பாடலுக்கு ஓவியா நடனமாடி இருக்கிறார். #Oviyaa #Arav

  சற்குணம் இயக்கத்தில் விமல் - ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் `களவாணி 2' படத்திற்கு நீதிமன்றம் முதலில் தடை விதித்திருந்த நிலையில், தற்போது தடையை நீக்கியுள்ளது. #Kalavani2 #Vemal
  நடிகர் விமல், ஓவியா உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் `களவாணி 2'. இந்த திரைப்படம் வருகிற மே 4-ந் தேதி வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வர்மாண்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது.

  இந்த படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் குமரன் வழக்கு தொடர்ந்தார். அதில், களவாணி 2 என்ற திரைப்படத்தின் உரிமையை மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளேன். அதனால், அந்த திரைபடத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், `களவாணி 2' திரைப்படத்தை ஜூன் 10-ந் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.  இந்த நிலையில், இந்த தடையை நீக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வர்மாண்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.சற்குணம் என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில், ‘களவாணி 2 தலைப்பை, களவாணி திரைப்படத்தை தயாரித்த ஷெர்ளி பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கினேன். களவாணி 2 திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளேன். இந்த தலைப்புக்கும், திரைப்படத்துக்கும், குமரன், மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிங்காரவேலன் ஆகியோருக்கு தொடர்பு எதுவும் இல்லை. தவறான தகவல்களை அளித்து, இந்த திரைபடத்துக்கு தடை பெற்றுள்ளனர். எனவே, இந்த தடையை நீக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

  இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சுதா ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, களவாணி 2 திரைப்படத்துக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார். #Kalavani2 #Vemal #Oviyaa #Sargunam

  சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களவாணி 2’ படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இதுகுறித்து விநியோகஸ்தர் சிங்காரவேலன் விளக்கம் அளித்துள்ளார். #Kalavani2 #Vemal
  விமல், ஓவியா நடிப்பில் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘களவாணி’. தற்போது அதே கூட்டணியில் ‘களவாணி 2’ படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

  இந்த நிலையில் விநியோகஸ்தரும். தயாரிப்பாளருமான சிங்காரவேலன் இந்த படத்தை வெளியிட நீதிமன்றம் மூலம் ஆறு வார இடைக்காலத் தடை பெற்றுள்ளார்.

  இதுகுறித்து படத்தின் இயக்குனர் சற்குணம் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த படத்தை தான் தயாரித்துள்ளதாகவும், விமலுக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் இடையே உள்ள பணப் பிரச்சினை தொடர்பாக, ‘களவாணி 2’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சிங்கார வேலன் இடைக்கால தடை வாங்கி உள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

  இதுகுறித்து விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

  ‘விமல் சொந்தமாகத் தயாரித்து நடித்த ‘மன்னர் வகையறா’ என்கிற படத்திற்கு என்னிடம் மூன்று கோடி ரூபாய் பைனான்ஸ் பெற்றிருந்தார். மூன்று கோடியில் அவரால் படத்தை முடிக்க முடியவில்லை.  இன்னும் இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால்தான் படத்தை முடித்து வெளியிட முடியும் என்றும், இல்லை என்றால் இந்தப் படத்தை அப்படியே கிடப்பில் போட்டு விடுவேன் என்கிற ரீதியில் ஒரு மறைமுகமான மிரட்டல் விடுத்தார். நான் மேற்கொண்டு பணம் கொடுக்கவில்லை.

  சில நாட்கள் கழித்து என்னை அழைத்து பேசிய விமல், ‘களவாணி 2’ படத்தைத் தயாரிக்க ஒரு குறிப்பிட்ட தொகையை பைனான்ஸ் செய்து உதவுமாறும் அந்தத் தொகையை வைத்து ஏற்கனவே நின்று கொண்டிருக்கும் மன்னர் வகையறா படத்தை முடித்து வெளியிட்டு விடுவோம் என்றும் ‘களவாணி 2’ படத்தையும் தொடங்கி விடுவோம் என்றும் மன்னர் வகையறா படத்துக்காக நீங்கள் கொடுத்த பணம் உங்களைத் தேடி வந்துவிடும் என்றும் கேட்டுக்கொண்டார்.

  நானும் அதற்கு ஒப்புக் கொண்டு மேலும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து என்னிடம் வாங்கிய பணத்தின் மதிப்பிற்கு களவாணி 2 படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என விமலிடம் கூறி அதை அக்டோபர் 17-ந் தேதி ஒப்பந்தமாகவும் பதிவு செய்து கொண்டேன்.

  இன்றைய தேதி வரையில் விமல் எனக்கு 4.32 கோடி ரூபாய் தர வேண்டி இருக்கிறது. இந்தநிலையில் தான் ‘களவாணி 2’ படம் வர்மன்ஸ் புரொடக்‌‌ஷன்ஸ் சார்பில் தயாராகி வருவதாக அறிவிப்பு வெளியானது.  நான் இயக்குநர் சற்குணத்திடமும். விமலிடமும் ஏற்கனவே காப்பிரைட் அடிப்படையில் இந்தப் படத்தை எடுத்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டிருக்கிறீர்கள் என்றும் அதை மீறி இவ்வாறு விளம்பரப்படுத்துவது முறை அல்ல என்றும் பல முறை கூறியும் அவர்களிடம் இருந்து பதில் இல்லாததால் நீதிமன்றத்தை அணுகினேன். அங்கேயும் அவர்கள் ஆஜராகவில்லை. எங்கள் தரப்பு வாதங்களையும். ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிமன்றம் ‘களவாணி 2’ படத்துக்கான காப்பிரைட் உரிமை எங்களுக்குத்தான் என்று கூறி தீர்ப்பு வழங்கியதுடன், களவாணி 2 படத்தை வேறு யாரும் வெளியிடக் கூடாது என ஆறு வார கால இடைக்கால தடையும் விதித்துள்ளது.

  நீதிமன்றம் நல்ல தீர்ப்பைத் தரும் என இயக்குநர் சற்குணம் கூறியிருக்கிறார். உண்மையிலேயே நீதிமன்றம் எங்களுக்கு நல்ல தீர்ப்பைத்தான் கொடுத்துள்ளது. இதன் மீதான விசாரணை வரும் ஜூன் 10-ந் தேதி நடைபெற இருக்கிறது’.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Kalavani2 #Vemal #Oviyaa #Sargunam #Singaravelan

  சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படத்தின் டிரைலரை அருண் விஜய் வெளியிட்டுள்ளார். #Kalavani2Trailer
  கடந்த 2010-ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘களவாணி’.  சற்குணம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம்தான் ஓவியா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  நடிகர் விமலின் திரையுலக வாழ்க்கையை புதிய பாதைக்கு திருப்பிய ‘களவாணி’ படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறார். மேலும் சூரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், இளவரசு என முதல் பாகத்தில் நடித்த பலரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.  இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அரசியல் கலந்த இந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ் நாயகனாக நடிக்கும் `ராஜ பீமா' படத்தின் படப்பிடிப்பு முழுவதுவமாக முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. #RajaBheema #Arav
  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஆரவ் நாயகனாக நடிக்கும் நடிக்கும் படம் `ராஜ பீமா'. நரேஷ் சம்பத் இயக்கும் இந்த படத்தில் ஆரவ் ஜோடியாக ஆஷிமா நர்வால் நடிக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஓவியா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதோடு, ஆரவ் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார்.

  படத்தில் யானைக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மனித, விலங்கு முரணை பேசும் படமாக உருவாகியிருக்கிறது.

  படம் குறித்து இயக்குநர் நரேஷ் சம்பத் பேசும் போது,

  " பல்வேறு இடங்களில், குறிப்பாக அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பை நடத்தியது மிகப்பெரிய சவாலாக இருந்தது. சில விஷயங்களை காகிதங்களில் கதையில் எழுதும்போது நன்றாக இருக்கும், ஆனால் படப்பிடிப்பில் எதிர்பாராத அனுபவங்களை சந்தித்தது, தாண்ட முடியாத பெரிய தடையாக இருந்தது. குறிப்பாக, யானையுடன் நடித்த நாயகன் ஆரவ்விற்கு இது கடினமாக இருந்தது. அவர் படப்பிடிப்புக்கு முன்பே யானையுடன் நட்பாக இருந்த போதிலும், முற்றிலும் எதிர்பாராத விஷயங்கள் இருந்தது. காடுகளில் வழுக்கும் பாறைகள் மற்றும் தரைகள் இன்னொரு தடங்கலாக இருந்தது. இருப்பினும், படப்பிடிப்பை சிறப்பாக முடித்து விட்டு வந்திருக்கிறோம் " என்றார். 


  படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை சத்யஜோதி பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. #RajaBheema #Arav #AshimaNarwal
  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஓவியா நடிப்பில் வெளியாக இருக்கும் 90 எம்.எல். படத்தின் அதிகாலை சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்கவிருப்பதாக ஓவியா தெரிவித்துள்ளார். #90ML #Oviyaa
  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவியா பிரபலம் ஆனார். ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பல பக்கங்களை வைத்துள்ளனர். ஆனால் அந்த புகழை பயன்படுத்தி சில படங்களை ஒப்புக்கொண்டு திரையுலகில் மீண்டும் ஒரு ரவுண்டு வராமல் தனக்கு பிடித்த கதாபாத்திரத்துக்காகக் காத்திருந்தார்.

  தற்போது 90 எம்.எல் என்ற அடல்ட் ஒன்லி படத்தில் ஒவியா நடித்துள்ளார். டிரெய்லரில் இடம்பெற்ற காட்சிகளுக்கும், வசனங்களுக்கும் விமர்சனங்கள் அதிக அளவில் வர அதற்கான பதிலையும் அதே பாணியில் கூறினார்.


  தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்றைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 90 எம்.எல் திரைப்படம் பிப்ரவரி 22-ம் தேதி வெளியாக உள்ளது.

  அன்று தான் ரசிகர்களுடன் சேர்ந்து அதிகாலை சிறப்பு காட்சியைப் பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த படத்துக்கு சிம்பு இசையமைத்திருக்கிறார். யோகி பாபு, சிம்பு, பிரபுதேவா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் வலம் வருகின்றனர். #90ML #Oviyaa #STR #AnitaUdeep

  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் ஓவியா நடிக்கும் 90 எம்.எல். படத்தில், அவருக்கு துணிச்சலான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் அனிதா உதீப் தெரிவித்துள்ளார். #90ML #Oviyaa
  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியாவுக்கு பெரிய ரசிகர் கூட்டம் கிடைத்தது. அவர் முதன்மை கதாநாயகியாக நடித்துள்ள படம் 90 எம்.எல். இந்த படத்தில் ஓவியாவின் கதாபாத்திரம் பற்றி படத்தின் இயக்குனர் அனிதா உதீப்பிடம் கேட்டபோது,

  ‘இங்கே ஒரு ஆண் நினைப்பதுபோல வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் பெண் அப்படி வளர்வதில்லை.

  ஒரு குறிப்பிட்ட கட்டமைப்புக்குள் பெண்கள் வளர்வதால் பல வி‌ஷயங்களை வெளியே அவர்களும் சொல்வதில்லை. அந்த மாதிரி வி‌ஷயங்களை உடைத்து அவர்கள் நிஜ வாழ்க்கையில் என்ன நினைக்கிறாங்க? எப்படி வாழணும்னு ஆசைப்படுறாங்க? அவங்களோட நட்பு எப்படி இருக்கணும்? காதல், திருமண வாழ்க்கை உள்ளிட்ட எதிர்பார்ப்பு இதையெல்லாம் கருத்தாக இல்லாமல் வெளிப்படையாக சொல்கிற களம்தான் இந்த ‘90 எம்.எல்’. சிலருக்கு இது பிடிக்கும். சிலருக்கு பிடிக்காமலும் போகலாம். ஆனால் இதுதான் நிஜம். ஓவியா அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் துணிச்சலான ஒரு பெண்ணாக வருகிறார். அதுக்காக எல்லாவற்றுக்கும் சண்டைபோடும் நபர் இல்லை.  ஒரு மிடில் கிளாஸ் அபார்ட்மென்ட் வீட்டில் வசிக்கும் 4 பெண்களை அவர் சந்திக்கிறார். தினம் தினம் தங்களுடைய எண்ணங்களை அந்த வீட்டின் மொட்டை மாடியில் நின்று ஒவ்வொருவரும் பகிர்கிறார்கள். படம் முழுக்க காமெடி, துணிச்சல், சில இடங்களில் இரட்டை அர்த்த வசனங்கள்கூட இருக்கும்’. இவ்வாறு அவர் கூறினார். #90ML #Oviyaa #AnitaUdeep #STR

  பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா - ஆரவ் காதலித்து, பிறகு பிரிந்த நிலையில், ஆரவ்வோடு தான் புரிதலில் இருக்கிறேன் என்று ஓவியா கூறியுள்ளார். #Oviyaa #Arav
  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா பிசியான நடிகையாகி விட்டார். பிக்பாசில் அவர் காதலித்து பிரிந்த ஆரவ்வுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். 

  ஆரவ் பற்றி கேட்டதற்கு ஒரு பேட்டியில் ‘அவரும் நானும் நல்ல புரிதலில் இருக்கிறோம். எனக்காக இவர் இருக்கிறார் என்று ஆரவ்வை சொல்லலாம். நாங்கள் லிவிங் டு கெதரில் இல்லை. சிலர் எங்களை பற்றி தவறாக எழுதுகிறார்கள். அதை கவனிக்க எங்களுக்கு நேரம் இல்லை. இருவருமே படங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறோம். திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை’ என்று கூறி இருக்கிறார்.  ஓவியா நடிப்பில் அடுத்ததாக காஞ்சனா 3, 90 எம்.எல்., உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருக்கின்றன. #Oviyaa #Arav