என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vemal"

    • யோகி பாபு, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
    • இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'பசங்க' படத்தின் மூலம் அறிமுகமாகி 'களவாணி, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'கலகலப்பு' போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விமல். இவரது நடிப்பில் 'சார்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெப் தொடர்கள் மற்றும் சில படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

    இதனிடையே, தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், யோகி பாபு, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'மகாசேனா'. இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'மகாசேனா' படத்தின் கதை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சில BTS ஸ்டில்களை பார்க்கும்போது கதை வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவையாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், 'மகாசேனா' படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாகும் என போஸ்டரை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 



    • மாசாணி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் R.ராஜசேகர் முதல் தயாரிப்பாக உருவாகும் திரைப்படம் 'வடம்.
    • இயக்குநர் V. கேந்திரன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

    மாசாணி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் R.ராஜசேகர் முதல் தயாரிப்பாக உருவாகும் திரைப்படம் 'வடம்.', நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் V. கேந்திரன் இயக்கத்தில், தமிழக பாரம்பரியங்களில் ஒன்றான மஞ்சு விரட்டு பின்னணியில், அருமையான கமர்ஷியல் படமாக  "வடம்" உருவாக இருக்கிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று கோலாகலமாக பூஜையுடன் துவங்கியது.

    பிரம்மாண்டமாக உருவாகும் "வடம்" படம், கோயம்புத்தூரில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில்,  படக்குழுவினர் கலந்துகொள்ள 1500 பேருக்கு அன்னதானம் அளித்து, பிரம்மாண்ட பூஜையுடன், இன்று இனிதே துவங்கியது.  

    தமிழக கலாச்சாரத்தின், பாரம்பரியத்தின் முக்கிய அம்சங்களில் வீர விளையாட்டுக்களில் ஒன்று மஞ்சுவிரட்டு, கிராம மக்கள் உயிராக நேசிக்கும் வட மஞ்சு விளையாட்டின் பின்னணியை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜல்லிக்கட்டு விளையாட்டை வைத்து பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளது. ஆனால் முதல் முறையாக மஞ்சு விரட்டு விளையாட்டை மையமாக வைத்து வடம் படம் உருவாகிறது. மேலும் காதல், நட்பு மற்றும் குடும்ப உணர்வைக் கூறும் கதையம்சத்துடன், கமர்ஷியல் ஆக்ஷன் படமாக உருவாகிறது.

    தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டிருக்கும் நடிகர் விமலின் அடுத்த திரைப்படமாக வடம் உருவாகிறது. தமிழ் திரையுலகில் கால் பதித்திருக்கும் மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம், தங்களது முதல் தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.

    இந்தப் படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக சங்கீதா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் பாலசரவணன், நரேன், ராமதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

     

    இயக்குநர் V. கேந்திரன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை பிரசன்னா எஸ் குமார் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொள்கிறார். இந்தப் படத்திற்கு வி.சசிகுமார் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

    சண்டைப்பயிற்சியை முருகன் வழங்க, தயாரிப்பு மேற்பார்வையை K.R.பாலமுருகன் கவனிக்கிறார். இந்தப் படத்தை மாசாணி பிக்சர்ஸ் நிறுவனமும் சன் மாறோ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

    இப்படத்தின்  படப்பிடிப்பை மதுரை, பொள்ளாச்சி, காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

    • விமலின் 34- வது திரைப்படமாக பரமசிவன் பாத்திமா படத்தில் நடித்துள்ளார்.
    • விமலுக்கு ஜோடியாக சாயாதேவி நடித்துள்ளார்.

    விமலின் 34- வது திரைப்படமாக பரமசிவன் பாத்திமா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இசக்கி கர்வண்ணன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் குடிமகன், பெட்டிக்கடை மற்றும் பகிரி ஆகிய திரைப்படங்களை இயக்கியவராவார்.

    இப்படம் ஒரு மலைக்கிராமத்தில் இரு மதத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசக்கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது.

    இரு வேறு மதத்தை சேர்ந்த விமல் மற்றும் சாயாதேவி காதலிக்கின்றனர். இவர்களின் காதலால் ஏற்படும் பிரச்சனைகள பற்றி கதைக்களம் அமைந்துள்ளது. படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

     

    விமலுக்கு ஜோடியாக சாயாதேவி நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ் பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, அதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.

    • விமலின் 34- வது திரைப்படமாக பரமசிவன் பாத்திமா படத்தில் நடித்துள்ளார்.
    • படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    விமலின் 34- வது திரைப்படமாக பரமசிவன் பாத்திமா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இசக்கி கர்வண்னன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் குடிமகன், பெட்டிக்கடை மற்றும் பகிரி ஆகிய திரைப்படங்களை இயக்கியவராவார்.

    இப்படம் ஒரு மலைக்கிராமத்தில் இரு மதத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசக்கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது.

    இரு வேறு மதத்தை சேர்ந்த விமல் மற்றும் சாயாதேவி காதலிக்கின்றனர். இவர்களின் காதலால் ஏற்படும் பிரச்சனைகள பற்றி கதைக்களம் அமைந்துள்ளது. படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    விமலுக்கு ஜோடியாக சாயாதேவி நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ் பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, அதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார்.

    படத்தின் முதல் பாடலான நான் மல்லி பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை ஏகாதேசி வரிகளில் பிரியா ஹமேஷ் பாடியுள்ளார். இப்பாடலில் கூல் சுரேஷ் நடனமாடிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • விமலின் 34- வது திரைப்படமாக பரமசிவன் பாத்திமா படத்தில் நடித்துள்ளார்
    • மலைக்கிராமத்தில் இரு மதத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசக்கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது.

    விமலின் 34- வது திரைப்படமாக பரமசிவன் பாத்திமா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இசக்கி கர்வண்னன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் குடிமகன், பெட்டிக்கடை மற்றும் பகிரி ஆகிய திரைப்படங்களை இயக்கியவராவார்.

    இப்படம் ஒரு மலைக்கிராமத்தில் இரு மதத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசக்கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது.

    இரு வேறு மதத்தை சேர்ந்த விமல் மற்றும் சாயாதேவி காதலிக்கின்றனர். இவர்களின் காதலால் ஏற்படும் பிரச்சனைகள பற்றி கதைக்களம் அமைந்துள்ளது. படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    விமலுக்கு ஜோடியாக சாயாதேவி நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ் பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, அதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார்.

    படத்தின் முதல் பாடலான நான் மல்லி பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • நடிகர் விமல் அடுத்ததாக அப்துல் மஜித் இயக்கத்தில் `கரம் மசாலா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது.

    நடிகர் விமல் அடுத்ததாக அப்துல் மஜித் இயக்கத்தில் `கரம் மசாலா' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது.

    இப்படம் ஒரு குடும்ப பொழுதுபோக்கான காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. மேலும் படத்தில் சம்பிகா, ராஜேந்திரன், எம்.எஸ் பாஸ்கர், ஜான் விஜய், ஸ்ரீனிவாசன், ரவி மரியா, சாம்ஸ் ,நமோ நாராயணன் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் ஒளிப்பதிவை கே கோகுல் மேற்கொள்ள. பைஜு ஜேகம் படத்திற்கு இசையமைத்துள்ளார். கரம் மசாலா படத்தை அப்துல் மஜித் தயாரித்துள்ளார். திரைப்படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது என படக்குழு அறிவித்துள்ளது.

    விமல் சமீபத்தில் நடித்து வெளியான ஓம் காளி ஜெய் காளி வெப் தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • விமலில் 34- வது திரைப்படமாக பரமசிவன் பாத்திமா படத்தில் நடித்துள்ளார்.
    • படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது

    விமலில் 34- வது திரைப்படமாக பரமசிவன் ஃபாதிமா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இசக்கி கர்வண்னன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் குடிமகன், பெட்டிக்கடை மற்றும் பகிரி ஆகிய திரைப்படங்களை இயக்கியவராவார்.

    இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் ஒரு மலைக்கிராமத்தில் இரு மதத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசக்கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது.

    இரு வேறு மதத்தை சேர்ந்த விமல் மற்றும் சாயாதேவி காதலிக்கின்றனர். மேலும் மலைப்பகுதியில் ஒவ்வொரு மதத்திற்கு என தனி கிராமம் இருக்கின்றனர். இவர்களுக்கு நடுவே மத கலவரம் ஏற்ப்பட்டு வருகிறது. இம்மாதிரியான காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. டிரெய்லர் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    விமலுக்கு ஜோடியாக சாயாதேவி நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ் பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, அதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விமல் அடுத்ததாக ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் ஒரு புதிய வெப் தொடரில் நடித்துள்ளார்.
    • இந்நிலையில் தொடரின் டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விமல். அதைத்தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சார் மற்றும் போகுமிடம் வெகுதூரமில்லை திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் விமல் அடுத்ததாக ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் ஒரு புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடருக்கு ஓம் காளி ஜெய் காளி என தலைப்பிட்டுள்ளனர்.

    ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான விலங்கு வெப் தொடருக்கு பின் விமல் நடிக்கும் வெப் தொடராகும். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசரை ஜியோ ஹாட்ஸ்டார் சமீபத்தில் வெளியிட்டது. இத்தொடரில் குவீன்ஸி, புகழ், கஞ்சா கறுப்பு, பாவ்னி ரெட்டி, கிரண், திவ்யா துரைசாமி, ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் தொடரின் டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    டிரெய்லர் காட்சிகளில் விமல் ஒரு ஆக்ஷன் ஹீரோ அவதாரத்தை எடுத்துள்ளார். விமல் ஒரு எம்.எல்.ஏ வை கொன்றுவிடுகிறார். இதனால் எம்.எல் ஏ க்கு நெருக்கமாக இருக்கும் 4 நபர்கள் விமலை கொல்ல வேண்டும் என தேடிவருகின்றனர். இதனால் விமல் வனதேசம் என்ற ஊருக்கு செல்கிறார். இதுப்போன்ற காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. தொடரைக்குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. விலங்கு வெப் தொடரை தொடர்ந்து இத்தொடரும் வெற்றி பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தெய்வ மச்சான்’.
    • இப்படம் வருகிற 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'தெய்வ மச்சான்'. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பாண்டியராஜன், 'ஆடுகளம்' நரேன், பாலசரவணன், வேல.ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனிதா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு காட்வின் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.



    'தெய்வ மச்சான்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’குலசாமி’.
    • இந்த படத்திற்கு பின்னணி பாடகர் மஹாலிங்கம் இசையமைக்கிறார்.

    நாயகன், பில்லா பாண்டி, போன்ற படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குலசாமி'. இந்த படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் போஸ் வெங்கட், குட்டிப்புலி சரவண சக்தி, முன்னாள் போலீஸ் அதிகாரி ஜாங்கிட் , வினோதினி, மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    குலசாமி

    நடிகர் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள இந்த படத்தை எம்.ஐ.கே. புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடேட் தயாரித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் பின்னணி பாடகர் மஹாலிங்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'குலசாமி' படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் விஜய்சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

    'குலசாமி' திரைப்படம் வருகிற ஏப்ரல் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • நடிகர் விமல், தற்போது 'துடிக்கும் கரங்கள்' படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    பசங்க, களவானி, மஞ்சப்பை, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்து பிரபலமடைந்த விமல், சமீபத்தில் நடித்திருந்த விலங்கு வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. விமல் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'துடிக்கும் கரங்கள்'. இப்படத்தில் மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வேலுதாஸ் இயக்க, ஒடியன் டாக்கீஸ் சார்பில் கே.அண்ணாதுரை, வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.



    இந்நிலையில் துடிக்கும் கரங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கிறார்.
    • 'பூவெல்லாம் உன் வாசம்' படத்திற்கு பிறகு இயக்குனர் எழிலுடன் இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

    துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தேசிங்கு ராஜா'. இதில் விமல் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார். காமெடி படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு 'தேசிங்கு ராஜா' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர் விமலே இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான 'ரங்கஸ்தலம்' படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.


    மேலும் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். 'பூவெல்லாம் உன் வாசம்' படத்திற்கு பிறகு இயக்குனர் எழிலுடன் இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

    கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்களின் கதையை மையமாக வைத்து காமெடி கலந்து உருவாகும் இந்த படத்தை மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    ×