`அந்த வெள்ளக்காரனே இங்க பிச்ச எடுக்கதான் வந்தான்' - பரமசிவன் பாத்திமா டிரெய்லர் வெளியானது

விமலில் 34- வது திரைப்படமாக பரமசிவன் பாத்திமா படத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது
`அந்த வெள்ளக்காரனே இங்க பிச்ச எடுக்கதான் வந்தான்' - பரமசிவன் பாத்திமா டிரெய்லர் வெளியானது
Published on

விமலில் 34- வது திரைப்படமாக பரமசிவன் ஃபாதிமா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இசக்கி கர்வண்னன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் குடிமகன், பெட்டிக்கடை மற்றும் பகிரி ஆகிய திரைப்படங்களை இயக்கியவராவார்.

இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் ஒரு மலைக்கிராமத்தில் இரு மதத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசக்கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது.

இரு வேறு மதத்தை சேர்ந்த விமல் மற்றும் சாயாதேவி காதலிக்கின்றனர். மேலும் மலைப்பகுதியில் ஒவ்வொரு மதத்திற்கு என தனி கிராமம் இருக்கின்றனர். இவர்களுக்கு நடுவே மத கலவரம் ஏற்ப்பட்டு வருகிறது. இம்மாதிரியான காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. டிரெய்லர் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விமலுக்கு ஜோடியாக சாயாதேவி நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ் பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, அதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com