search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Aruldoss"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜதுரை இயக்கத்தில் சஞ்ஜெய் - ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஓவியாவ விட்டா யாரு சீனி' படத்தின் விமர்சனம்.
  மனோஜ்குமார்-மீராகிருஷ்ணன் தம்பதியின் மகன் சஞ்ஜெய். தன் அப்பாவை போல மாத சம்பளத்துக்கு வேலை செய்ய விரும்பாமல் சுயமாக தொழில் செய்து பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இவரும், பக்கத்து வீட்டுப்பெண்ணான ஓவியாவும் காதலிக்கிறார்கள்.

  இந்த நிலையில், பணம் சம்பாதிப்பற்கான வழியை காட்டுவதாக கூறி ஆசை வளர்க்கிறார் ராதாரவி. மண்ணுளி பாம்பு, சஞ்சீவி குச்சி, நாகரத்னம், நட்சத்திர ஆமை ஆகியவை மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று சஞ்ஜெய்யின் தொழிலதிபராகும் ஆசையை தூண்டிவிடுகிறார்.  ராதாரவி-சஞ்ஜெய் இருவரும் சொல்வதை நம்பி, மாவட்ட கலெக்டரான அருள்தாஸ், போலீஸ் அதிகாரி ரவிமரியா உள்ளிட்டோர் ஏமாறுகிறார்கள். இதற்கிடையே வியாபாரியான சரவணனும், ஓவியாவை ஒருதலையாக காதலிக்கிறார். அவருக்கு சஞ்ஜெய்-ஓவியாவின் காதல் தெரியவர சஞ்ஜெய்யை கொலை செய்ய எண்ணுகிறார். மறுபக்கம் ஏமாந்தவர்கள் சஞ்ஜெய்யை துரத்துகிறார்கள்.

  இவர்களிடம் இருந்து சஞ்ஜெய் எப்படி தப்புகிறார்? தொழிலதிபர் ஆனாரா? ஓவியாவுடன் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.  வேலை வெட்டி எதுவும் செய்யாமல் நண்பர்களுடன் சுற்றும் சஞ்ஜெய் ஓவியாவுடன் காதல்-டூயட், ரவுடிகளுடன் சண்டை என ஒரு கதாநாயகனுக்கு உரிய வேலைகளை சுறுசுறுப்பாக செய்திருக்கிறார். ஓவியா டைட்டிலில் ஆரம்பித்து, படம் முழுக்க வருகிறார். பாடல் காட்சிகளில் உள்ளாடை தெரியும்படி ஆடி, கவர்ச்சி விருந்து கொடுக்கிறார். டைட்டிலைப்போல் பாடல்களிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

  படத்தின் கூடுதல் அம்சமாக ராதாரவியின் நகைச்சுவை கலந்த வில்லத்தனம் அமைந்திருக்கிறது. அவர் தொடர்பான காட்சிகளில், தியேட்டரில் கலகலப்பும், எதிர்பார்ப்பும் அதிகமாகின்றன. இன்னொரு வில்லனாக ரவிமரியா காமெடி செய்கிறார். கடைசி சண்டை காட்சியில், மிரட்டுகிறார். வியாபாரி சரவணன் திடீர் வில்லனாக மாறுவது, எதிர்பாராத திருப்பம். யானைப்பாகனாக செந்தில், சஞ்ஜெய்யின் தாத்தாவாக டி.பி.கஜேந்திரன் ஆகியோரும் சிரிக்க வைக்கிறார்கள்.  மூடநம்பிக்கையை மூலதனமாக வைத்து மோசடி செய்யும் ஆசாமிகளை நம்ப வேண்டாம் என்ற கருத்தை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார், இயக்குனர் ராஜதுரை. படத்தின் முதல் பாதி மெதுவாகவும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் நகர்கிறது.

  ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் செம குத்து. ஈ.கே.நாகராஜின் ஒளிப்பதிவு ரசனை.

  மொத்தத்தில் `ஓவியாவ விட்டா யாரு சீனி' ஆசை.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா - மஹிமா நம்பியார், இந்துஜா நடிப்பில் உருவாகி வந்த ‘மகாமுனி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. #MagaMuni #Arya #MahimaNambiar #Indhuja
  `கஜினிகாந்த்' படத்திற்கு பிறகு ஆர்யா நடிப்பில் அடுத்ததாக படங்கள் வெளிவரவில்லை. கடந்த மார்ச் மாதம் சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால், சாயிஷாவுடன் இணைந்து `காப்பான்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

  இதுதவிர சாந்தகுமார் இயக்கத்தில் ‘மகாமுனி’ மற்றும் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் `டெடி' படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களையும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனமே தயாரிக்கிறது.

  இதில் ‘மகாமுனி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


  மகாமுனி படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா நாயகிகளாக நடித்துள்ளனர். ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  மௌன குரு படத்திற்கு பிறகு சாந்தகுமார் இயக்கியிருக்கும் இந்த படம் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

  அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார். #MagaMuni #Arya #MahimaNambiar #Indhuja 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜீஷ் பாலா இயக்கத்தில் விதார்த் - சாந்தினி தமிழரசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வண்டி' படத்தின் விமர்சனம். #VandiReview #Vidharth #ChandiniTamilarasan
  விதார்த், கிஷோர், ஸ்ரீராம் கார்த்திக் மூன்று பேரும் சாந்தினி வீட்டிற்கு அருகில் ஒன்றாக வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான உதவிகளை அவ்வப்போது செய்து கொடுக்கிறார் சாந்தினியின் அப்பா. விதார்த்தும், சாந்தினியும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர்.

  இந்த நிலையில் விதார்த் ஒரு பிரச்சனையில் சிக்குகிறார். அந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேலை ஒன்றில் சேர முடிவு செய்கிறார். வண்டி இருந்தால் தான் வேலை கிடைக்கும் என்ற நிர்பந்தத்துக்கு தள்ளப்படுப்படும் விதார்த் எப்படியாவது அந்த வேலையை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், பைக் ஸ்டாண்ட்டில் பணிபுரியும் ஸ்ரீராம் மூலம், ஒரு வண்டியை வாங்கிக் கொண்டு போகிறார்.   தான் ஓட்டிச் செல்வது திருட்டு வண்டி என்பதை அறியாமல் போலீசில் சிக்கிக் கொள்ளும் விதார்த்துக்கு, அந்த வண்டியால் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது.

  இவ்வாறாக வண்டியின் மூலம் வரும் பிரச்சனைகளில் இருந்து விதார்த் எப்படி தப்பிக்கிறார்? சாந்தினியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.  கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் விதார்த் இந்த படத்திலும் ஒரு நாயகனுக்கு உண்டான அலட்டல் இல்லாமல், இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சாந்தினியும் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சாதாரண பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர் குமார், ஜான் விஜய், அருள்தாஸ், விஜித் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.

  படத்தின் கதையில் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர் ராஜீஷ் பாலா, திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தேவையில்லாத காட்சிகளும், வசனங்களும் படத்தின் வேகத்திற்கு தடையாக அமைந்துள்ளன. தேவையில்லாத இடங்களை கத்தரித்து, படத்தொகுப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

  சுராஜ் கே குரூப்பின் பின்னணி இசை ஓரளவுக்கு பலம் தான். ராகேஷ் நாராயணன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

  மொத்தத்தில் `வண்டி' வேகமில்லை. #VandiReview #Vidharth #ChandiniTamilarasan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஜீஷ்பாலா இயக்கத்தில் விதார்த் - சாந்தினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வண்டி’ படத்தின் முன்னோட்டம். #Vandi #Vidharth #ChandiniTamilarasan
  ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹாசீர் தயாரிக்கும் படம் ‘வண்டி’.

  விதார்த் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாந்தினி நடித்திருக்கிறார். ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர் குமார், ஜான் விஜய், அருள்தாஸ், சாமிநாதன், மதன்பாப், சூப்பர் குட் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 

  ஒளிப்பதிவு - ராகேஷ் நாராயணன், இசை - சூரஜ் எஸ் குரூப், படத்தொகுப்பு - ரிசால் ஜெய்னி, கலை - மோகன மகேந்திரன், பாடல்கள் - சினேகன், சங்கீத், நடனம் - தினேஷ், ஜாய் மதி, சண்டை பயிற்சி - சிறுத்தை கணேஷ், வசனம் - அரசு வி. ரஜீஷ்பாலா, தயாரிப்பு - ஹஷீர். எழுத்து - இயக்கம்- ரஜீஷ்பாலா.  படம் பற்றி இயக்குநர் பேசும் போது...

  காணாமல் போன தன்னோட சைக்கிளைத் தேடும் குடும்பஸ்தன் தொலைந்து போன சைக்கிளால் என்ன ஆனான், என்பதை `பை சைக்கிள் தீவ்ஸ்’ என்ற படத்தை பார்த்து உலகமே வியந்தது.

  அதே போல் ஒரு இளைஞன் தன்னோட அப்பாவின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் சேர்த்து ஒரு பல்சர் பைக்கை வாங்குகிறான். அது நாள் வரை வெறுமெனே பார்த்து வந்த பெண் காதலிக்க தொடங்குகிறாள். வாழ்க்கை சந்தோ‌ஷமாக போய்க் கொண்டிருக்கும் போது அந்த பைக் காணாமல் போகிறது. அந்த பைக்கால் அவன் என்ன ஆனான் என்பதை ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் பார்த்தோம். தற்போது, ‘வண்டி’ படத்தில் எமஹா ஆர்எக்ஸ் 135 என்ற பைக் படத்தின் முக்கிய பாத்திரமாக வருகிறது. அதுவும் மூன்று தளங்களில் நடக்கும் கதையில் இந்த பைக் மூன்று பரிமாணத்தில் தோன்றுகிறது. கதையில் பைக்கே பிரதானமாக வருவதால் படத்தின் தலைப்பு ‘வண்டி’ என்று ஆகி இருக்கிறது” என்றார். #Vandi #Vidharth #ChandiniTamilarasan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீ பாலாஜி இயக்கத்தில் மிதுன் மகேஸ்வரன் - ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `எங்க காட்டுல மழை' படத்தின் விமர்சனம். #EngaKattulaMazhaiReview #MithunMaheshwaran
  ஊரை விட்டு சென்னைக்கு ஓடி வரும் நாயகன் மிதுன் மகேஸ்வரன், தனது நண்பன் அப்புக்குட்டியை தேடுகிறார். அப்புக்குட்டி எங்கு தங்கியிருக்கிறார் என்பது தெரியாமல் போகவே, தன்னுடன் பயணிக்கும் ஒருவருடன் நட்பாகி அவர் வீட்டிலேயே சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். 

  இந்த நிலையில், நாயகி ஸ்ருதி ராமகிருஷ்ணனை பார்க்கும் மிதுன், ஸ்ருதி மீது காதல் வயப்படுகிறார். இதற்கிடையே அவரது நண்பன் அப்புக்குட்டியையும் கண்டுபிடித்துவிடுகிறார். அதேநேரத்தில் ஸ்ருதியும், மிதுனை காதலிக்க ஆரம்பிக்கிறார். இந்த நிலையில் அமெரிக்க டாலர்களை கடத்த, கடத்தல் கும்பல் ஒன்று திட்டம் போடுகிறது.  பணத்தின் மீது பேராசை கொண்ட போலீஸ் அதிகாரி அருள்தாஸ், அந்த பணத்தை கைப்பற்றுகிறார். அந்த பணத்தை எடுத்துச் செல்லும் போது, வழியில் வரும் மிதுன், அருள்தாசுடன் ஏற்பட்ட முன்பகை காரணமாக அந்த பணத்தை பிடிங்கிச் செல்கிறார். அதை வீட்டிற்கு கொண்டு வந்து பிரித்து பார்க்கும் போது, அதில் பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி கலந்த சந்தோஷம் அடைகிறார். 

  பின்னர் அந்த பணத்தை அப்புக்குட்டியுடன் சேர்ந்து சந்தோஷமாக இஷ்டத்துக்கு செலவு செய்து வருகிறார். மேலும் அந்த பணத்தை அப்புக்குட்டி தங்கியிருந்த பழைய கட்டிடத்தில் குழி தோண்டி மறைத்து வைக்கின்றனர். கொஞ்ச நாள் கழித்து அங்கு இடத்திற்கு திரும்பி வரும் போது, அந்த இடம் காவல் நிலையமாக மாறியிருக்கிறது. 

  கடைசியில், மிதுன், ஸ்ருதியை கரம்பிடித்தாரா? அருள்தாஸ், மற்றும் கொள்ளை கூட்டத்தில் இருந்து மிதுன் தப்பித்தாரா? காவல் நிலையம் இருக்கும் இடத்தில் உள்ள பணத்தை கைப்பற்றினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.   எங்கேயும் எப்போதும் படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி, மேலும் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள மிதுன் மகேஸ்வரன், இந்த படத்தில் ஒரு நாயகான அவருக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார். நாயகி ஸ்ருதி ராமகிருஷ்ணன், தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் அவருக்கு ஒரு சிறந்த படமாகும். அவர் நாயகியாக வந்து ரசிக்க கவர முயற்சி செய்திருக்கிறார். 

  கதாபாத்திரமாகவே மாறிவிடும் அருள்தாஸ் இந்த படத்தில் போலீஸாக வந்து ஸ்கோர் செய்திருக்கிறார். அப்புக்குட்டி காமெடிக்கு ஓரளவுக்கு கைகொடுத்திருக்கிறார்.   குள்ளநரி கூட்டம் படத்திற்கு பிறகு 7 வருடங்களுக்கு பிறகு காமெடி கலந்த த்ரில்லர் படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்ரீ பாலாஜி. காதல், காமெடி, த்ரில்லர் என அடுத்தடுத்த காட்சிகளில் பரபரப்பை கூட்ட முயற்சி செய்திருக்கிறார். படத்தில் நாய் பேசுவது போன்ற காட்சிகள் வித்தியாசமாக உள்ளது. குள்ளநரி கூட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு படத்தை பார்க்கும் போது அதற்கான தீனி இந்த படத்தில் கொஞ்சம் குறைவு தான் என்று சொல்ல வேண்டும். திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.

  ஸ்ரீ விஜய்யின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். சூர்யா ஏ.ஆர். ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. 

  மொத்தத்தில் `எங்க காட்டுல மழை' குறைவு தான். #EngaKattulaMazhaiReview #MithunMaheshwaran

  ×