search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajeeshbala"

    ராஜீஷ் பாலா இயக்கத்தில் விதார்த் - சாந்தினி தமிழரசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வண்டி' படத்தின் விமர்சனம். #VandiReview #Vidharth #ChandiniTamilarasan
    விதார்த், கிஷோர், ஸ்ரீராம் கார்த்திக் மூன்று பேரும் சாந்தினி வீட்டிற்கு அருகில் ஒன்றாக வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான உதவிகளை அவ்வப்போது செய்து கொடுக்கிறார் சாந்தினியின் அப்பா. விதார்த்தும், சாந்தினியும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விதார்த் ஒரு பிரச்சனையில் சிக்குகிறார். அந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேலை ஒன்றில் சேர முடிவு செய்கிறார். வண்டி இருந்தால் தான் வேலை கிடைக்கும் என்ற நிர்பந்தத்துக்கு தள்ளப்படுப்படும் விதார்த் எப்படியாவது அந்த வேலையை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், பைக் ஸ்டாண்ட்டில் பணிபுரியும் ஸ்ரீராம் மூலம், ஒரு வண்டியை வாங்கிக் கொண்டு போகிறார். 



    தான் ஓட்டிச் செல்வது திருட்டு வண்டி என்பதை அறியாமல் போலீசில் சிக்கிக் கொள்ளும் விதார்த்துக்கு, அந்த வண்டியால் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது.

    இவ்வாறாக வண்டியின் மூலம் வரும் பிரச்சனைகளில் இருந்து விதார்த் எப்படி தப்பிக்கிறார்? சாந்தினியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் விதார்த் இந்த படத்திலும் ஒரு நாயகனுக்கு உண்டான அலட்டல் இல்லாமல், இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சாந்தினியும் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சாதாரண பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர் குமார், ஜான் விஜய், அருள்தாஸ், விஜித் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.

    படத்தின் கதையில் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர் ராஜீஷ் பாலா, திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தேவையில்லாத காட்சிகளும், வசனங்களும் படத்தின் வேகத்திற்கு தடையாக அமைந்துள்ளன. தேவையில்லாத இடங்களை கத்தரித்து, படத்தொகுப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    சுராஜ் கே குரூப்பின் பின்னணி இசை ஓரளவுக்கு பலம் தான். ராகேஷ் நாராயணன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `வண்டி' வேகமில்லை. #VandiReview #Vidharth #ChandiniTamilarasan

    ரஜீஷ்பாலா இயக்கத்தில் விதார்த் - சாந்தினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வண்டி’ படத்தின் முன்னோட்டம். #Vandi #Vidharth #ChandiniTamilarasan
    ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹாசீர் தயாரிக்கும் படம் ‘வண்டி’.

    விதார்த் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாந்தினி நடித்திருக்கிறார். ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர் குமார், ஜான் விஜய், அருள்தாஸ், சாமிநாதன், மதன்பாப், சூப்பர் குட் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 

    ஒளிப்பதிவு - ராகேஷ் நாராயணன், இசை - சூரஜ் எஸ் குரூப், படத்தொகுப்பு - ரிசால் ஜெய்னி, கலை - மோகன மகேந்திரன், பாடல்கள் - சினேகன், சங்கீத், நடனம் - தினேஷ், ஜாய் மதி, சண்டை பயிற்சி - சிறுத்தை கணேஷ், வசனம் - அரசு வி. ரஜீஷ்பாலா, தயாரிப்பு - ஹஷீர். எழுத்து - இயக்கம்- ரஜீஷ்பாலா.



    படம் பற்றி இயக்குநர் பேசும் போது...

    காணாமல் போன தன்னோட சைக்கிளைத் தேடும் குடும்பஸ்தன் தொலைந்து போன சைக்கிளால் என்ன ஆனான், என்பதை `பை சைக்கிள் தீவ்ஸ்’ என்ற படத்தை பார்த்து உலகமே வியந்தது.

    அதே போல் ஒரு இளைஞன் தன்னோட அப்பாவின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் சேர்த்து ஒரு பல்சர் பைக்கை வாங்குகிறான். அது நாள் வரை வெறுமெனே பார்த்து வந்த பெண் காதலிக்க தொடங்குகிறாள். வாழ்க்கை சந்தோ‌ஷமாக போய்க் கொண்டிருக்கும் போது அந்த பைக் காணாமல் போகிறது. அந்த பைக்கால் அவன் என்ன ஆனான் என்பதை ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் பார்த்தோம். தற்போது, ‘வண்டி’ படத்தில் எமஹா ஆர்எக்ஸ் 135 என்ற பைக் படத்தின் முக்கிய பாத்திரமாக வருகிறது. அதுவும் மூன்று தளங்களில் நடக்கும் கதையில் இந்த பைக் மூன்று பரிமாணத்தில் தோன்றுகிறது. கதையில் பைக்கே பிரதானமாக வருவதால் படத்தின் தலைப்பு ‘வண்டி’ என்று ஆகி இருக்கிறது” என்றார். #Vandi #Vidharth #ChandiniTamilarasan

    ×