என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Radha Ravi"
- நடிகர் டேனியல் ஆனி போப் மூன்று நாட்கள் பயிற்சி பட்டறையை சமீபத்தில் தொடங்கினார்.
- இதன் பாராட்டு விழா நிகழ்வு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது.
நகைச்சுவை நடிகரான டேனியல் ஆனி போப் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான 'பொல்லாதவன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் விஜய் சேதுபதிக்கு நண்பராக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் கவனம் பெற்ற டேனியல் ஆனி போப் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் -2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.
நடிகர் டேனியல் ஆனி போப் சமீபத்தில் டேனிஸ் தியேட்டர் ஸ்டுடியோ (DANI'S THEATRE STUDIO) என்னும் நடிப்புப் பயிற்சிப் பட்டறையை ஆரம்பித்தார். இந்த நடிப்புப் பயிற்சிப் பட்டறையின் பாராட்டு விழா நிகழ்வு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ராதாரவி, இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன், நடிகைகள் அபர்ணதி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் டேனிஸ் பயிற்சி பட்டறையின் லோகோவை (Logo) நடிகர் ராதாரவி வெளியிட்டார். அதன்பின் ராதாரவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். மேலும் சிறப்பு விருந்தினரான ராதாரவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசியதாவது, ஆடியோ வெளியீட்டு விழாவிற்கெல்லாம் என்னை அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். நான் ஏதாவது ஏடாகூடமாகப் பேசுவேன், அதனால் பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதற்காக அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் ஏடாகூடமாப் பேசமாட்டேன். உள்ளதைச் சொல்வேன், நான் உள்ளதை சொல்வது உங்களுக்கு ஏடாகூடமாகத் தெரிகிறது. "டேய் நீ என்ன நல்லவனா..?" என்று கேட்டார் ராதாரவின்னு போட்டுவிடுவார்கள். ஏனென்றால் அப்படிப் போட்டால் தான் ஆடியன்ஸ் அதை க்ளிக் செய்து பார்க்கிறார்கள். அதை க்ளிக் செய்துவிட்டால் இவர்களுக்கு காசு. அதனால் இது போன்று வசீகரமான தலைப்பு வைத்து வரும் எந்த வீடியோக்களையும் நான் பார்ப்பது இல்லை.

நீங்கள் எல்லாம் இது போன்ற சிறுசிறு அமைப்புகளின் செயல்பாடுகளை ஆதரித்து ஊக்குவிக்க வேண்டும். இவர்களில் யாராவது எதிர்காலத்தில் ஒரு புரட்சித் தலைவரோ, நடிகர் திலகமோ இல்லை காதல் மன்னனாகவோ வரலாம். எல்லோரும் பெரிய பெரிய நிகழ்வுகளுக்குத் தான் வருவோம் என்ற எண்ணத்தில் இருக்கக்கூடாது. ஒரு நாள் பெரிய இடம் சின்ன இடமாக மாறும், சின்ன இடம் பெரிய இடமாக மாறும். இதுதான் வாழ்க்கை. மேடையில் அமர்ந்திருக்கும் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் அவர்களுக்கும் வணக்கம். அவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது அவர் சொன்னார், அவர் இயக்கவிருக்கும் ஒர் வெப் சீரிஸ் ஒன்றில் என்னை நடிக்க வைக்கலாம் என்று நினைத்ததாகவும், பின்னர் சிலர் வேறு மாதிரி சொன்னதால் அதற்கான முயற்சி எடுக்கவில்லை என்றும் கூறினார். அதனால் தான் பிரபாகரனிடம் இனி நான் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் நீயே என் வீட்டுக்கு வந்துவிடு, நான் பத்து இலட்சம் கேட்பேன், நீ முடியாது ஒரு இலட்சம் தான் கொடுக்க முடியும் என்று கூறு, எதுவாக இருந்தாலும் நாமே பேசிக் கொள்வோம். அப்பொழுது தான் நான் என்ன பேசுகிறேன் என்பதாவது உனக்குத் தெரியும் என்றேன்.

ராதாரவி என்றால் கெட்ட வார்த்தையில் பேசுவார் என்று ஒரு கருத்து பரவுகிறது. நான் கெட்ட வார்த்தையில் பேசக் கூடாது என்கிற திடகாத்திரமான முடிவோடு தான் வந்தேன். கோபம் வந்தால் எதைப் பற்றியும் பயப்படமாட்டேன், எனக்கு தோன்றியதைப் பேசிவிடுவேன். ஆனால் இங்கு நான் கோபப்படும் படி எதுவுமே இல்லை. இந்த நடிகர்களுக்கு அவர்களின் நிலை உயர்ந்துவிட்டால் எங்கிருந்து தான் இப்படிப்பட்ட எண்ணங்கள் வருமோ தெரியவில்லை. ஆனால் அவர்கள் பேசும் அந்தப் பேச்சையும் கைதட்டி ரசிக்கத் தானே செய்கிறார்கள் மக்கள். தமிழ்நாட்டு மக்கள் போல் முட்டாள்கள் வேறெங்கும் கிடையாது. இதை தைரியமாகத் தான் சொல்கிறேன். வேண்டுமென்றால் என் படங்களைப் பார்க்காமல் தவிர்த்து விடுங்கள். என்னைச் சார்ந்து படங்கள் எடுக்கப்படுவதில்லை. ஹீரோவைச் சார்ந்து எடுக்கப்படும் படங்களில் நான் இருக்கிறேன். நீங்கள் என்னை உதாசீனப்படுத்த வேண்டும் என்றால் உங்கள் ஹீரோக்களை உதாசீனப்படுத்த வேண்டும். இன்றும் நான் 5 படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். ஒருவர் கேட்டார் ஏன் படங்களின் எண்ணிக்கை குறைந்து போய்விட்டது என்று. நான் இதாவது இருக்கிறதே என்று கூறினேன்.

இன்று டேனியல் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார் என்றால், பல சிரமங்களுக்கு இடையில் தான் இதை நடத்துகிறார். இந்த சிரமங்களுக்கு இடையிலும் அவர் சிரிப்பது தான் அவருக்கு ஒரு புத்துணர்வைக் கொடுக்கும். இன்னும் ஐந்து வருடங்களில் டேனியல் மிகப்பெரிய உயரத்தில் இருப்பார் என்பதை ஒரு சவாலாகவே இங்கே கூறிக் கொள்கிறேன். டேனியல் தொடங்கியிருக்கும் பள்ளி சிறப்பாக செயல்பட ஏதேனும் ஆலோசனை கொடுங்கள். நானும் கண்டிப்பாக அவனுக்கு ஆலோசனை கொடுப்பேன். உன் கைக்காசைப் போட்டு அதிகம் செலவு செய்யாதே என்று கூறுவேன். ஏனென்றால் நாளைக்கி இதிலிருந்து வரும் ஒரு மாணவனே பெரிய சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் என்றால், பழையதை மனதில் வைத்து நடந்து கொள்வார் என்று சொல்ல முடியாது.
ஏனென்றால் சினிமாவின் வியாதி அது. டேனியல் நீ சோர்ந்து போகும் போது எனக்கு போன் செய். நான் எங்கிருந்தாலும் உன்னைத் தேடி வருவேன். நான் உன்னை உற்சாகப்படுத்தி அழைத்துச் செல்வேன். உன் வளர்ச்சிக்கு உதவ நிறைய நண்பர்கள் உன்னோடு இருக்கிறார்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள். யாரும் தாய் தந்தையரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடாதீர்கள். அவர்கள் உங்களோடு இருப்பது தான் உங்களுக்கு ஆசிர்வாதம். குழந்தைகளை சுதந்திரமாகவும் அதே நேரம் கண்டிப்புடனும் வளருங்கள். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி என்று பேசினார்.
- கேஎன்ஆர் ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’.
- இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கேஎன்ஆர் மூவிஸ் சார்பில் கேஎன்ஆர் ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் 'மாவீரன் பிள்ளை'. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். இதில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 21 நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

ராதாரவி
இப்படம் மதுவின் கொடுமைகளையும், மதுவிற்கு எதிராக போராடி உயிர் நீத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் உருவாகியுள்ளது. 'மாவீரன் பிள்ளை' திரைப்படத்தை அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலகினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பிறகு நடிகர் ராதாரவி பேசியதாவது, "மதுவை ஒழிப்போம்.. மக்களை காப்பாற்றுவோம்.. விவசாயிகளை காப்பாற்றுவோம்.. பெண்களை காப்பாற்றுவோம் என ஒரு நல்ல கருத்தை இதில் சொல்லி இருக்கிறார்கள்.

ராதாரவி
இந்த படத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படம் பார்க்கும்போது இது நான் நடித்த படமா என ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு மாறுதலாக இருக்கிறது. தண்ணீர் எவ்வளவு நல்லது ஆனால் டாஸ்மாக் நல்லதல்ல என்பதை தான் இதில் காட்டியிருக்கிறார்கள்.. இது ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்" என்றார்.
- ராதாரவி புதிய வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது.
- இந்த புகைப்படங்களின் மூலம் ராதாரவி தனது பேத்தியின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான மன்மத லீலை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராதாரவி. கதாநாயகன், வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், டப்பிங் ஆர்டிஸ் என பன்முகத்தன்மை கொண்ட ராதாரவி தற்போது வரை தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 500 படங்களுக்கு மேல் ராதாரவி பிசியாக நடித்து வருகிறார்.

ராதாரவி
நேற்று முன்தினம் ராதாரவி புதிய வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. கோட் சூட் அணிந்து வில்லன் போன்று காட்சியளிக்கும் ராதாரவியின் புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

ராதாரவி
இந்த புகைப்படங்களின் மூலம் தனது பேத்தியின் ஆசையை ராதாரவி நிறைவேற்றியுள்ளார். திரைத்துறையில் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வரும் பவித்ரா சதீஷ், நீண்ட நாள் ஆசையான தனது தாத்தா ராதாரவிக்கு ஆடை வடிவமைத்துள்ளார். தனது பேத்தியின் ஆசைக்காக மறுப்பு தெரிவிக்காமல் பவித்ரா சதீஷ் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடையை அணிந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களே தற்போது இணையத்தில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
- சமய முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கனல்.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
த நைட்டிங்கேல் புரொடெக்ஷன் தயாரிப்பில் சமயமுரளி இயக்கியுள்ள படம் கனல். இந்த படத்தில் ஸ்ரீதர் மாஸ்டர், காவ்யா பெல்லு, ஸ்வாதி கிருஷ்ணன், ஜான் விஜய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தென்மா மற்றும் சதிஷ் சக்ரவர்த்தி இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

கனல் இசை வெளியீட்டு விழா
இந்த விழாவில் கலந்து கொண்டு நடிகர் ராதாரவி பேசியதாவது, " ஒடுக்கப்பட்ட மக்களை நாம் குட்ட குட்ட அவர்கள் சிலிர்த்தெழுவார்கள். சிலர் நான் கீழ இருந்து வந்தேன் அதனால் இப்படி படம் எடுத்தேன் என்பார்கள். ஆனால் சமயமுரளி மேலே இருந்து வந்தவர்.
எல்லாரும் ஓடிடின்னு சொல்லிட்டிருக்காங்க. எல்லா பெரிய ஹீரோக்களுக்கும் சொல்றேன். இப்பம் கொடுப்பான் ஓடிடி பிறகு அவனே ஃபிக்ஸ் பண்ணுவான். படம்னா தியேட்டர்ல தான் பார்க்கணும். கமல் எல்லாம் எவ்வளவு திறமை பாருங்க. இந்த நேரத்துலயும் நம்பர் ஒன் கலெக்ஷனை எடுத்தான் பாருங்க. அதான் திறமை. கீழ இருக்கவனை பத்தி படம் எடுக்குற சமயமுரளி மனசுக்கு இந்தப்படம் பெரிதாக ஹிட் ஆகும்" என்றார்








Thanks for all the wonderful reviews for #100 .. me and my team have given our heart and soul for this film .. we r really sorry we cudn release our film in time .. sorry guys 100 won't release tomorrow ..
— sam anton (@samanton21) May 8, 2019
My job is done
Moving on to GURKHA :)
